குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்று பெண்களுக்காக இந்தியாவில் 2005ம் ஆண்டு இயற்றினார்கள். அதனை எப்படிப் பயன்படுத்தலாம் என்று இந்த செய்தியில் சொல்லியிருக்கிறார்கள். இளைஞர்கள் படித்து தெரிந்துகொண்டால் நல்லது.
குற்றசாட்டுக்குள்ளானவரை டி.எஸ்.பி.,யாக நியமிக்க ஐகோர்ட் தடை ஜனவரி 19,2013 தினமலர்
சென்னை: குடும்ப வன்முறை குற்றம் சாட்டப்பட்டவரை, டி.எஸ்.பி.,யாக நியமிக்க, சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஈரோடு, சம்பத்நகரைச் சேர்ந்த, லட்சுமிபிரியா என்பவர், தாக்கல் செய்த மனு: எனது கணவர், வினோத் சாந்தாராம். வங்கியில் பணியாற்றிய அவர், டி.என்.பி.எஸ்.சி., மூலம், தமிழக அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின், குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, டி.எஸ்.பி.,யாக, போலீஸ் பயிற்சி கல்லூரியில், பயிற்சி எடுத்து வருகிறார். ஈரோட்டில், எங்களுக்கு, 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர், எனது நெருங்கிய உறவினர். இரண்டாம் திருமணம் செய்து வைப்பதற்காக, ஒரு வயது குழந்தையுடன், என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பினர். விவாகரத்து கோரி, ஈரோடு கோர்ட்டில், எனது கணவர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடியானது. கணவருடன் சேர்த்து வைக்கக் கோரிய, எனது மனுவை, கோர்ட் ஏற்றுக் கொண்டது; ஆனால், கோர்ட் உத்தரவுக்குப் பின்னும், என்னுடன் குடும்பம் நடத்தவில்லை. கோர்ட் உத்தரவை அமல்படுத்தவும், எனக்கு எதிரான குடும்ப வன்முறையை தடுக்கவும் கோரி, டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பினேன். எனது மனுவை பரிசீலிக்குமாறு, உத்தரவிட வேண்டும். தற்போது, பயிற்சி முடிக்க உள்ளதால், அவரை டி.எஸ்.பி.,யாக நியமிக்க உள்ளனர். போலீஸ் பிரிவில், ஒழுங்கு முறையாக பணியாற்றுபவருக்கு தான் இடம் அளிக்க வேண்டும். கோர்ட் உத்தரவுக்குப் பின்னும், குடும்பம் நடத்த அவரால் இயலவில்லை. பெண்ணை தொந்தரவு செய்தது, குடும்ப வன்முறை செய்தது, என, ஈடுபட்ட ஒருவரை, போலீஸ் பிரிவில் சேர்க்கக் கூடாது. எனவே, டி.எஸ்.பி.,யாக, வினோத் சந்தாராமை நியமிக்க, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, நீதிபதி என்.பால்வசந்தகுமார், "அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், குற்றச்சாட்டுக்கள் மீது, விசாரணை நிலுவையில் உள்ளது என, கூறப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் கோரியபடி, ஒரு வாரத்துக்கு, இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' என, உத்தரவிட்டுள்ளார். ![]() |

No comments:
Post a Comment