பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Saturday, January 19, 2013

தற்காப்பிற்காக கணவனை மனைவி கொலை செய்யலாமா?

திருமணம் ஒத்துவரவில்லையென்றால் விவாகரத்து செய்து அவரவர் வழியைப் பார்த்து செல்வதுதான் சரி.  ஆனால், இந்தியாவில் ஆண்களைப் பொறுத்தவரை இது போல செயல்பட முடியாது.  ஒத்துவராத மனைவியை விவாகரத்து செய்ய நினைத்தால் அந்தக் கணவன் மீது உடனடியாக வரதட்சணைக் கொடுமை வழக்கு, குடும் வன்முறை வழக்கு என பல குற்ற வழக்குகளை அரசாங்கம் சுமத்திவிடும்.  இப்போது ஒருபடி மேலே சென்று மனைவி கணவனுக்கு கொலை மிரட்டலே விடுத்துவிட்டார். 

இப்போதைய நாட்டு நிலவரப்படி கணவனை கொலை செய்துவிட்டு கற்பழிக்க முயற்சி செய்தான் தற்காப்பிற்காக கொலை செய்தேன் என்று மனைவி சொன்னால் கூட நாடு முழுதும் ஏகோபித்த ஆதரவு கிடைத்துவிடும்.





கோவை சிங்காநல்லூர் வசந்தா நகரை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன் சீனிவாசன். கம்ப்யூட்டர் என்ஜினீயராக உள்ளார். இவருக்கும் பாலசுப்பிரமணி என்பவரது மகள் காஞ்சனாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு 2 பேரும் பெங்களூரில் குடியேறினர்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் காஞ்சனா கணவரிடம் கோபித்து கொண்டு ஊருக்கு வந்து விட்டார். இதற்கிடையே சீனிவாசன் காஞ்சனாவிடம் இருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆவேசம் அடைந்த காஞ்சனா மற்றும் தந்தை பாலசுப்பிரமணி, தாய் ராஜேஸ்வரி, தம்பி அருண் ஆகியோர் ரத்தினத்தின் வீட்டுக்கு சென்று விவாகரத்து வழக்கை வாபஸ் பெறாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.

இதுகுறித்து ரத்தினம் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பாலசுப்பிரமணி, ராஜேஸ்வரி, காஞ்சனா, அருண் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


No comments: