வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்படி சீர்வரிசை பொருட்களை பட்டியலிட்டு மணமகன், மணமகள் இரு தரப்பினரும் கையொப்பமிட்டு பாதுகாக்க வேண்டும். திருமண பதிவு விண்ணப்பத்தில் வரதட்சணை வாங்கவோ, கொடுக்கவோ இல்லை என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் இந்த திருமணத்தில் நடக்குமா?
இவையெல்லாம் இருந்தாலும் மருமகள் தொடுக்கும் பொய் வரதட்சணை வழக்கை யாராலும் தடுக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில் திருமணம் செய்யும் ஆணுக்கு என்றாவது ஒருநாள் சிறைவாசம் கண்டிப்பாக உண்டு என்பது எழுதப்படாத சட்டம்.
சென்னை: சென்னை திருவேற்காட்டில் 1006 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை முதல்வர் ஜெயலலிதா நடத்தி வைக்கிறார். இன்று காலை கோலாகலமாக நடக்கவிருக்கும் திருமண ஏற்பாட்டை அறநிலையத்துறை செய்துள்ளது. இலவச திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த ஜோடிகள் வந்துள்ளனர். திருமணத்தையொட்டி ரூ. 4.5 கோடி செலவில் சீர்வரிசை பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக கோயில் முன்பு ஹோமம் வளர்த்து திருமணத்திற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.

No comments:
Post a Comment