இந்தியாவில் நாகரீக வளர்ச்சியால் அதிக அளவில் குடும்பப் பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை புதிய சட்டங்கள் மூலம் தீர்க்கலாம் என்று எண்ணிய அரசாங்கம் பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணம் என்ன என்று ஆராய்ந்து தீர்வு காண்பதற்கு பதிலாக குடும்பங்களை ஒழித்துவிட்டால் குடும்பப் பிரச்சனையே இருக்காது என்ற முடிவுக்கு வந்து இரண்டு புதிய சட்டங்களை அமலாக்க முயற்சி செய்து வருகிறது. இந்த புதிய சட்டங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக பெண்கள் சட்டங்களை மேலும் தவறாகப் பயன்படுத்தி கணவனிடம் பணம் பறிக்க நன்றாக வழிவகை செய்திருக்கிறது.
கணவன் மனைவிக்கிடையே தீர்க்க முடியாத பிரச்சனை இருக்கும்பட்சத்தில் எளிதாக விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்துசெல்ல வழிவகை செய்வதாகக் கூறப்பட்டிருக்கும் இந்த சட்டத்தில் மனைவி விவாகரத்து கோரினால் உடனடியாக கிடைக்கும்படியும் ஆனால் கணவன் அதே காரணத்திற்காக விவாகரத்து கோரினால் அவனது ஆயுள் முழுதும் போராடினாலும் அவனுக்கு விவாகரத்து கிடைக்காத வகையிலும் இயற்றப்பட்டுள்ளது. மேலும் விவாகரத்து பெற நினைக்கும் பெண்ணுக்கு கணவனின் சொத்தில் சமபங்கு கிடைக்கும் வகையிலும் சட்டம் வரப்போகிறது. இதன்மூலம் குடும்பப் பிரச்சனைகளுக்கு ஏதாவது தீர்வுகிடைக்குமா?
இனி என்ன நடக்கப் போகிறதென்றால் நல்ல வசதியான ஆணை பார்த்து திருமணம் செய்து கொண்டு ஒரு சில மாதங்களில் அவன் வரதட்சணை கொடுமை செய்கிறான் என்று அவன் மீது ஒரு பொய்யான கிரிமினல் வழக்கை IPC498A பிரிவின் கீழ் பதிவு செய்துவிட்டு, கொடுமை செய்கிறான் என்ற அதே அடிப்படையில் இனி அவனுடன் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி விவாகரத்தையும் எளிதாகப் பெற்றுக் கொண்டு போகிற போக்கில் அவனது சொத்தில் சரிபாதியையும் எடுத்துக் கொண்டு மனதிற்குப் பிடித்த அடுத்த ஆணைத் தேடிச் செல்வார்கள் கலியுக மனைவிகள். இதுபோல நடக்காது என்று மட்டும் கனவுகூட காணாதீர்கள். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது, இனியும் நன்றாக நடக்கப்போகிறது. இதைத்தான் அரசாங்கம் எதிர்பார்க்கிறதோ!
இதுபோன்ற குடும்பப் பிரச்சனையை சட்டத்தின் மூலம் அரபு நாடு எப்படி கையாள்கிறது என்ற பின்வரும் செய்தியையும் பாருங்கள். எந்த நாடு குடிமக்களின் குடும்ப நலனில் அக்கறையுடன் சட்டம் இயற்றியிருக்கிறது என்று உங்களுக்கே புரியும்.
இளைஞர்களே, இந்திய திருமண தகனமேடை உங்களுக்குத் தேவையா?

புதுடில்லி : பிரிந்த தம்பதியர் விரைவில் விவாகரத்து பெறும் வகையில், புதிய சட்ட மசோதா கொண்டுவரப்படுகிறது. இதற்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
தினமலர் 23 மார்ச் 2012
துபாய் : சண்டை சச்சரவு இல்லாமல் குடும்பம் நடத்துவது குறித்த வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டும், திருமணம் செய்து கொள்ள அனுமதிப்பது தொடர்பாக, சவுதி அரேபிய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
சவுதி அரேபியாவில் தற்போது, குடும்ப சண்டை அதிகரித்து வருகிறது. திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆண்கள் சிலர், பெண்களின் கன்னி தன்மை பரிசோதனை குறித்த மருத்துவ அறிக்கையை கேட்கின்றனர். இது போன்ற பிரச்னைகளையெல்லாம் குறைக்க, திருமணம் செய்து கொள்ள போகும் ஜோடியினருக்கு திருமணத்துக்கு முன்பாக, சண்டை சச்சரவு இல்லாமல் குடும்பத்தை நடத்துவது குறித்த மேலாண்மை வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, திருமணம் செய்து கொள்ள அனுமதிப்பது குறித்து, சவுதி நீதித்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. நீதித்துறை அமைச்சகத்தின் இந்த திட்டத்துக்கு, சமூகத்துறை அமைச்சகம் ஒத்துழைப்பு அளிக்க உள்ளது.

No comments:
Post a Comment