இந்தியாவில் திருமணம் செய்வதன் மூலம் பல இளைஞர்கள் தங்களது வாழ்வை இழந்திருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை. திருமணத்திற்குப் பிறகு மனைவிக்கு ஏற்றபடி கணவன் செயல்படவில்லையென்றால் (உதாரணத்திற்கு - தனிக்குடித்தனம் வரமறுத்தால்) உடனடியாக பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்து கணவனை குடும்பத்தோடு கைது செய்யும் வழக்கம் பல காலமாக இந்தியாவில் இருந்துகொண்டிருக்கிறது.
இந்த பொய் வழக்குகளின் பின்னணியில் இளைஞர்களின் வாழ்வை நாசமாக்க எத்தனை ஒருதலைபட்சமான சட்டங்களை அரசாங்கம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது, எப்படியெல்லாம் இளைஞர்களின் வாழ்வு நாசமாக்கப்படுகிறது என்பதுபோன்ற விஷயங்கள் “கோகுலம் கதிர்” என்ற பத்திரிக்கையின் கட்டுரையில் தெளிவாக எழுதியிருக்கிறார்கள். இந்தக் கட்டுரையை படித்தபிறகு வாழ்வை நாசமாக்கிக்கொள்ள விரும்பாத புத்திசாலி இளைஞர்கள் யாரும் இந்தியாவில் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்.
வழக்கு விசாரணையை நீட்டித்ததால் மாஜிஸ்திரேட் மீது மனித கழிவு வீச்சு
-
இந்திய நீதிமன்றங்கள் சாதாரண குடிமக்கள் நீதி தேடி செல்லும் இடமாக ஒரு
காலத்தில் இருந்திருக்கும் போலிருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் நீதி
வழங்குவதற்கு பதிலாக ...
10 years ago
No comments:
Post a Comment