பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Friday, February 17, 2012

குடும்பங்களை பிரிப்பதில் கைதேர்ந்த நாடு எது தெரியுமா?

குடும்பப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறோம் என்று கூறிக்கொண்டு பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் என்ற பெயரில் அரசாங்கம் செய்திருக்கும் அடுக்கடுக்கான புத்திசாலித்தனமான தவறுகள்....
  1. வரதட்சணை தடுப்புச் சட்டம் (1961) - இதில் இதுவரை வரதட்சணை கொடுத்த எந்தப் பெண்ணும் தண்டிக்கப்பட்டதில்லை.
  2. IPC498A (1984) - இந்த சட்டப்படி மனைவி சொல்வது மட்டும்தான் உண்மை. மனைவி பொய்யாகப் புகார் கொடுத்தால் தண்டிக்க எந்தவித பிரிவுகளும் கிடையாது.
  3. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் (2005) - இந்த சட்டப்படி பெண் என்பவள் எந்த வன்முறையும் செய்யத் தெரியாதவள். ஆண்தான் எப்போதும் குற்றவாளியாகக் கருதப்படுவான்.
  4. கள்ளக் காதல் உறவு (IPC497) - இந்த சட்டப்படி பெண்ணின் கள்ள உறவு என்பது புனிதமானது. இந்த தவறான உறவில் ஈடுபடும் பெண் தானே விரும்பி தவறு செய்தாலும் எந்த தண்டணையும் கிடையாது. ஆனால், ஆணுக்கு தண்டனை உண்டு.
இந்த சட்டங்களால் நாட்டில் குடும்பங்களில் நடக்கும் சிறு பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு கிடைக்கிறது என்று பின்வரும் செய்தியில் பாருங்கள்... ... ... முதலில் கணவனை கைது செய்து சிறையில் அடைப்பார்களாம், பிறகு அவனோடு சேர்ந்து வாழவேண்டும் என்று போலிஸ் துணையோடு தர்ணா செய்வார்களாம்.... ....

பல்லாவரம்:கணவனுடன் சேர்த்து வைக்க கோரி, பட்டதாரி மனைவி, குழந்தையுடன் கணவன் வீட்டு முன் மூன்றாவது நாளாக நேற்றும் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தார்.பழைய பல்லாவரம், சுவாமி மலை நகரைச் சேர்ந்தவர் வினோத்குமார், 34; ஓமியோபதி டாக்டர். இவரது மனைவி பத்மஸ்ரீ, 28. கடந்த 2009ல் மேட்ரிமோனியல் மூலம் வரன் பார்த்து திருமணம் செய்து கொண்டனர்.திருமணமான ஐந்து மாதத்தில் பத்மஸ்ரீ கர்ப்பமானார். இதற்கிடையே கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், கணவனை பிரிந்து தாய் வீட்டிற்கு வந்தார். குழந்தை பிறந்த பின், மீண்டும் கணவன் வீட்டிற்கு சென்றார். அங்கு ஏற்க மறுத்ததால் தகராறு ஏற்பட்டது.

இது குறித்து பல்லாவரம் போலீசார் விசாரித்தனர். வினோத்குமாரை கைது செய்து சிறையிலடைத்தனர். இந்நிலையில், கணவர் வீட்டில் வாழ உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்; கணவர் வீட்டிலுள்ள தன் உடமைகளை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என, திருவள்ளூர் கோர்ட்டில் பத்மஸ்ரீ உத்தரவு பெற்றார். இந்த உத்தரவுடன் கடந்த சில தினங்களுக்கு முன், பல்லாவரம் போலீஸ் ஸ்டேஷன் வந்தார். போலீசார் சி.எஸ்.ஆர்., மட்டும் கொடுத்துவிட்டு அவரை அனுப்பினர். பின், வினோத்குமாரை அழைத்து பேசினர்.

கடந்த 14ம் தேதி காதலர் தினத்தன்று கணவரை பார்க்க போலீசார் உதவியுடன் பத்மஸ்ரீ சென்றார். அங்கு வினோத்குமார் இல்லாததால், அவர் வரும் வரை இங்கிருந்து நகர மாட்டேன் என்று கூறி, கணவர் வீட்டு முன் குழந்தையுடன் தர்ணா போராட்டத்தை துவக்கினார். கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கும் வரை, இந்த இடத்திலேயே அமர்ந்திருப்பதாக கூறி, குழந்தை ரிதிகாவுடன் பத்மஸ்ரீ, வினோத்குமார் வீட்டில் முன் அமர்ந்தார். நேற்று மூன்றாவது நாளாக அவர் அங்கேயே அமர்ந்து தர்ணா நடத்தி வருவது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வினோத்குமார் இருக்குமிடம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
====

குடும்ப பிரச்சனைகளுக்கு இந்திய அரசாங்கம் கண்டிருக்கும் தீர்வில் நாட்டில் குடும்பங்கள் நாசமானதுதான் மிச்சம். இதே குடும்ப பிரச்சனைகளுக்கு சவுதி அரசாங்கம் எப்படி தீர்வு காண்கிறது என்று பின்வரும் செய்தியில் பாருங்கள்... ... ...

Link

துபாய் : சண்டை சச்சரவு இல்லாமல் குடும்பம் நடத்துவது குறித்த வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டும், திருமணம் செய்து கொள்ள அனுமதிப்பது தொடர்பாக, சவுதி அரேபிய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

சவுதி அரேபியாவில் தற்போது, குடும்ப சண்டை அதிகரித்து வருகிறது. திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆண்கள் சிலர், பெண்களின் கன்னி தன்மை பரிசோதனை குறித்த மருத்துவ அறிக்கையை கேட்கின்றனர். இது போன்ற பிரச்னைகளையெல்லாம் குறைக்க, திருமணம் செய்து கொள்ள போகும் ஜோடியினருக்கு திருமணத்துக்கு முன்பாக, சண்டை சச்சரவு இல்லாமல் குடும்பத்தை நடத்துவது குறித்த மேலாண்மை வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, திருமணம் செய்து கொள்ள அனுமதிப்பது குறித்து, சவுதி நீதித்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. நீதித்துறை அமைச்சகத்தின் இந்த திட்டத்துக்கு, சமூகத்துறை அமைச்சகம் ஒத்துழைப்பு அளிக்க உள்ளது.No comments: