பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Thursday, August 30, 2012

ஈரோடு இளைஞரை காப்பாற்றிய ஜப்பானிய இளம்பெண்!

இந்தியாவில் திருமணம் செய்யும் இளைஞர்களின் வாழ்வு பொய் வரதட்சணை வழக்குகளால் சீரழிந்துகொண்டிருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். இதுவரை தெரிந்து கொள்ளாதவர்கள் “IPC498A Misuse” என்று இணைய தளத்தில் டைப் செய்து தேடிப்பாருங்கள். இந்தியாவில் திருமணம் செய்ததால் சின்னாபின்னமாகிப்போன கோடிக்கணக்கான இளைஞர்களும், அவர்களது குடும்பமும் ஓலமிட்டிக்கொண்டிருக்கும் அவலத்தை காணலாம்.

இதுபோன்ற ஆபத்தான் சூழலில் தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ளும் விதமாக ஜப்பானிய மணமகளைத் தேர்ந்தெடுதுள்ள இந்த புத்திசாலி இளைஞருக்கு வாழ்த்துக்கள்.

ஈரோடு, மூலப்பாளையத்தை சேர்ந்த இன்ஜினியருக்கும், ஜப்பான் நாட்டுப் பெண்ணுக்கும்இந்து முறைப்படி திருமணம் நடந்தது. (தினமலர் 30 ஆகஸ்ட் 2012)
========

எதிர்கால இந்திய மருமகள்களின் எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கிறது என்று இந்த அவள் விகடன் கட்டுரையில் பாருங்கள். படித்தபிறகு புரியும் .

நான் புடிச்ச மாப்பிள்ளதான்..!

சீதையின் பார்வையில் தொடங்கி... இன்றைய செல்போன் யுக பெண்கள் வரை, 'நல்ல கணவன்’ எனும் எதிர்பார்ப்பு, சுவாரசியம்! ''கல்யாணம், மாப்பிள்ளை, புகுந்த வீடு... எப்படி இருக்கணும்..?''

- சென்னையில் சில இளம் பெண்களிடம் கேட்டோம்... மளிகை கடை லிஸ்ட் போல நீண்டன பாயின்ட்ஸ்!

குறிப்பு: ரொம்ப இளகிய மனதுள்ள ஆண்கள் படித்து பயந்தால் நாங்கள் பொறுப்பில்லை.

ஸ்ரீ சந்திரா, ஐ.டி, அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி:

''மாப்பிள்ளை மாநிறமா, மேன்லியா இருக்கணும். என்னைவிட ஒரு மூணு இன்ச் உயரம் அதிகமா இருக்கணும். துறுதுறுனு, எல்

லாருக்கும் பிடிக்கிற பையனா இருக்கணும். நம்ம சிவகார்த்திகேயன் மாதிரினு வெச்சுக்கோங்க. அப்புறம்... ஸ்போர்ட்ஸ், டான்ஸ்னு கண்டிப்பா ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டியில கலக்கணும். வாரத்துல அஞ்சு நாள் சமையல் என் பொறுப்பு. பட், மிச்சம் ரெண்டு நாள் அவர் சமைக்கணும்.

இந்த அக்ரிமென்ட்டுக்கு முகம் கோணாம ஒப்புக்கணும்.பெயர் சொல்லித்தான் கூப்பிடுவேன். சமயத்துல 'வாடா போடா’வையும் ஜாலியா ரசிக்கணும். எனக்கு நிறைய டிரெஸ் எடுத்துக் கொடுக்கணும். ஷாப்பிங் வர்றப்போ, அவர்தான் எல்லாப் பையையும் தூக்கிக்கணும். புதுசா என்ன டிரெஸ் போட்டாலும், 'உனக்கு சூப்பரா இருக்கு’னு சொல்லணும். எனக்கு தும்மல் வந்தாகூட துடிச்சுப் போயிடணும். கண்டிப்பா அக்கா, தங்கச்சி இல்லாத பையனா இருக்கணும். நாத்தனார் பாலிடிக்ஸ் எல்லாம் சமாளிக்க முடியாதுப்பா. முக்கியமான பாயின்ட்.... மாமியார் எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்கணும்!''

சவிதா, எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி:

''மாப்பிள்ளை ஃபேர், மாநிறம்னு எப்படி இருந்தாலும் ஓ.கே. ஆனா, பணக்கார மாப்பிள்ளை வேண்டவே வேண்டாம். அன்பு காட்டுறதுல பணக்காரங்களா இருந்தா போதும். அப்புறம் ஒரு சின்ன ஆசை உண்டு. அவர் ஒரு 'யமஹா ஆர் 120’ வண்டி வெச்சுருக்கணும் அல்லது வாங்கணும். இதுவரைக்கும் யார் கூடவும் நான் பைக்ல போனதில்ல. பைக்ல பின்னாடி உட்கார்ந்து போற த்ரில்லை அவர் எனக்குக் காட்டணும்.

குழந்தைகள்னா ரொம்பப் பிடிக்கும். குவார்டர்லி, ஹாஃப் இயர்லி, சம்மர் லீவுக்கு அவரோட சொந்தக்காரங்க பசங்க, என்னோட சொந்தக்காரங்க பசங்கனு எல்லா குழந்தைகளையும் வீட்டுக்கு கூப்பிட்டு, அதகளம் பண்ணணும். ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வர்றது, தீம் பார்க் டிக்கெட் எடுத்துக் கொடுக்கிறது, டிராவல் அரேஞ்மென்ட் பண்றதுனு எல்லாம் அவர் சப்போர்ட்டிவ்வா இருக்கணும்.

அப்புறம் அடிக்கடி அவர் வேஷ்டி கட்டணும். ஆனா, புடவை கட்டச் சொல்லி என்னை கம்பல் பண்ணக்கூடாது. அவங்க அம்மா பேசுறதைக் காதால கேட்கலாம், ஆனா ஃபாலோ பண்ணக் கூடாது. மீனாட்சி ஆட்சிதான் இருக்கணும் வீட்டுல!''

லீலாவதி, எம்.காம், சென்னைப் பல்கலைக்கழகம்:

''மாமனார், மாமியார் கூட இருக்கறதுல பிரச்னை இல்ல... ஆனா, மொத்தமா பெரிய கூட்டுக் குடும்பம் வேண்டவே வேண்டாம். மாமியாரையும் மாமனாரையும் முடிஞ்சளவு அட்ஜஸ்ட் பண்ணிப்பேன். மாசம் ஒருமுறை ஜாலியா வெளிய கூட்டிட்டுப் போவேன். மாமியாரை சுடிதாரும், மாமனாரை ஜீன்ஸும் போட வெச்சு சந்தோஷப்படுத்துவேன்.

கணவரைப் பொறுத்தவரைக்கும், கலகல டைப்பா இருக்கணும். மீசை கண்டிப்பா இருக்கணும்ங்கிறதை, அண்டர்லைன் பண்ணிடுங்க. கிச்சன்ல இருந்து ஹால் வரைக்கும் பாட்டு பாடி, டான்ஸ் ஆடிக்கிட்டு வர்ற பழக்கம் எல்லாம் எனக்கு உண்டு. அதை எல்லாம் ரசிக்கணும். வாரம் ஒருமுறை பீச், தியேட்டர்னு அவுட்டிங் கூட்டிட்டுப் போகணும். கொஞ்சம் அதிகமா பேசுவேன்... அதனால அவர் அமைதியானவரா இருக்கணும். சண்டை போடுறப்போ, அவர்தான் 'ஸாரி’ கேட்கணும்!''

ஆண்கள் அலர்ட்!

===



Monday, August 6, 2012

இந்தியாவில் திருமணம் செய்யும் ஜோடிகளுக்குத் தேவையானது மனப் பொருத்தமல்ல மனநல மருத்துவம்

லாப நோக்கத்துடன் இயற்றப்பட்டுள்ள பல ஒருதலைபட்சமான இந்திய மருமகள் பாதுகாப்பு சட்டங்களால் பெண்கள் தங்களது சுயமரியாதையை இழந்து இந்தியாவில் திருமணம் செய்யும் அப்பாவி இளைஞர்களின் வாழ்வை இந்திய சட்டங்களைப் பயன்படுத்தி பொய் வழக்குகள் மூலம் சிதைத்து வருகிறார்கள் என்பது உலகறிந்த விஷயம்.



இதுபோன்ற ஆபத்தான சூழலில் இந்திய இளைஞர்கள் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்வதுதான் பாதுகாப்பான மற்றும் புத்திசாலித்தனமான வாழ்க்கை முறையாகும். இருந்தாலும் சில இளைஞர்கள் தேசப்பற்று காரணமாக இந்தியாவில்தான் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை அழித்துக்கொள்வேன் என்று ஆபத்தை உணராமல் உணர்ச்சி வசப்பட்டு தவறான திசையில் சென்று கொண்டிருப்பார்கள்.

அதுபோன்ற இளைஞர்கள் இந்தியத் திருமணம் என்ற ஆபத்தான பாதையில் தங்களது வாழ்க்கை பயணத்தை ஆரம்பிக்கும்போது மேற்கொள்ளவேண்டிய சில தற்காலிகமான தற்காப்பு வழிமுறைதான் மனநல ஆலோசனை. அதனை இன்றைய செய்தித்தாளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். படித்து தற்காலிக முதலுதவி பெற முயற்சி செய்து பார்க்கலாம்.

ஆனால், ஒரு உண்மையை மறந்துவிடாதீர்கள்! இந்தியாவில் திருமணம் செய்தால் அரசாங்க ஆதரவுடன் கண்டிப்பாக ஒருநாள் பொய் வழக்கில் சிக்கி சிறைக்குச் செல்வது உறுதி. இதனை தடுக்க எந்தவித நச்சு முறிவு மருந்தும் இந்த உலகத்தில் கிடையாது!!

தினமலர் முதல் பக்கம்
» சிறப்பு பகுதிகள் செய்தி »ஆகஸ்ட் 06,2012

திருமணத்திற்கு தேவை கவுன்சிலிங்!
மன நல ஆலோசகர் லட்சுமணன்

பல திருமண வாழ்க்கை, தளிர் நிலையிலேயே கருகிப் போவதற்கு காரணம், பரஸ்பரம் புரிதல் இல்லாமை தான். அதனால் தான், காதல் திருமணமோ, பெரியோர் நிச்சயித்த திருமணமோ, எதுவானாலும், "கவுன்சிலிங்' அவசியம். திருமணத்திற்கு முந்தைய ஆலோசனைகள், திருமணத்திற்கு பிந்தைய ஆலோசனைகள் இரண்டையும், பெற வேண்டியது அவசியம்.

நிச்சயத்திற்கும், திருமணத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், பெண்ணும், பையனும் பேசி, ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்வது ஆரோக்கியமான விஷயம். ஆனால், அப்போது இருவரும் தங்களின் குணங்களையும், குறைகளையும் வெளிப்படையாக பேசுவதில்லை. தன்னை தியாகியாகவும், உதவும் குணமுடைய ஆளாகவும் காட்டிக் கொள்வர்.

திருமணத்திற்குப் பின், இயல்பான வாழ்க்கைச் சூழலால், மெல்ல அவர்களின் உண்மையான குணத்தையும், குறைபாடுகளையும் வெளிப்படுத்த ஆரம்பிப்பர். கணவனின் முன்கோபம், புது மனைவியை நிலைகுலைய வைக்கும்; அடிக்கடி சந்தேகப்படும் மனைவியின் குணம், புதுக் கணவனை கதிகலங்க வைக்கும். இப்படி ஆரம்பிக்கும் விரிசல், திருமண வாழ்க்கையில், மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும். அப்போது தடுமாறாமல் வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள, திருமணத்திற்கு முந்தைய, "கவுன்சிலிங்' அவசியம்.

திருமணத்திற்கு பிந்தைய, "கவுன்சிலிங்'கில், தாம்பத்தியம் பற்றிய அலசல் மிக மிக முக்கியமானது. காரணம், திருமண வாழ்க்கையில், அதனால் ஏற்படும் தகராறு, பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதனால், இருவரிடமும், "செக்ஸ்' பற்றி அவர்களின் கருத்தை, எதிர்பார்ப்பை அலசுவோம். "செக்ஸ்' பற்றி புரிதலே இல்லாமல் இருப்பவர்களுக்கு, "கவுன்சிலிங்'கும், பிரச்னைகளைப் பொறுத்து, மருத்துவத் தீர்வுகளையும் கொடுப்போம். திருமண பந்தத்தின் எந்த நிலையில் இருந்தாலும், சம்பந்தப்பட்ட தம்பதியால், தங்களுக்குள் பேசி பிரச்னையை தீர்க்க முடியவில்லை என்ற கட்டத்தில், தாமதிக்காமல் ஒரு குடும்ப நல ஆலோசகரை அணுக வேண்டும். இதனால், வாழ்க்கையை அழகாகவும், பத்திரமாகவும் மாற்றலாம்.