பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Tuesday, September 4, 2012

இந்திய இளைஞர்களுக்கு காத்திருக்கும் இரு அதிர்ச்சியான திருமண பரிசுகள்!!

இந்தியாவில் திருமணம் செய்யும் இளைஞர்களுக்கு இரண்டு விதமான திருமண பரிசுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.

1. நகர்ப்புறத்தில் திருமணம் செய்தால் மனைவியின் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி குடும்பத்தோடு சிறைக்குச் சென்று வாழ்க்கையை தொலைப்பது.

கணவன் மனைவிக்கிடையேயான கருத்து வேறுபாடு இந்தியாவில் கணவன் செய்த கொடிய குற்றமாக கருதப்பட்டு (Failed marriage is Crime in India) குற்றவழக்கில் சிக்கவைக்கப்படுவார்கள். இதுதான் காவல் மற்றும் நீதித்துறைகள் மூலம் இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் குடும்ப அழிப்பு முறை. இதனை இந்திய உச்ச நீதிமன்றம் “இந்திய சட்ட தீவிரவாதம்” என்று கண்டித்திருக்கிறது.

Delhi High Court

Crl. Appeal No. 696/2004

Date: 01.11.2007

A failed marriage is not a crime however, the provisions of Section 498A are being used to convert failed marriages into a crime and the people are using this as tool to extract as much monetary benefit as possible. Involving each of the family members of the husband is another arm in the armory of the complainants of failed marriages. Not only close relatives but distant relatives and even neighbors are being implicated under Section 498A and other provisions of IPC in cases of failed marriages”


காரைக்குடி: வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய, சாப்ட்வேர் இன்ஜினியர், அவரது தந்தை, தாய், உறவினர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காரைக்குடி, திலகர் நகரைச் சேர்ந்த, துரைசாமி மகள், சுமி ப்ரியா,30. இவருக்கும், விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலைச் சேர்ந்த கோபிநாத்திற்கும், 2008ல் திருமணம் நடந்தது. சுமி ப்ரியாவுக்கு, 3.5 லட்சம் ரூபாய் ரொக்கம், 100 சவரன் நகை சீதனமாக கொடுத்தனர். திருமணத்துக்குப் பின், இருவரும், அமெரிக்காவில் வசித்து வந்தனர். இவர்களுக்கு, ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. கோபிநாத், தன் மனைவியிடம், "நீ அழகாக இல்லை; ஆங்கிலம் பேசத் தெரியவில்லை; பொருத்தம் சரியில்லை' எனக் கூறி, அடிக்கடி தொந்தரவு செய்தார். இதனால், சுமி ப்ரியா, இந்தியா வந்து, தாய் வீட்டில் வசித்து வருகிறார். தன் மகனுடன் சேர்ந்து வாழ வேண்டும் எனில், மேலும், 5.5 லட்சம் ரூபாய் மற்றும் 100 சவரன் நகைகளை, தன் மகனுக்கு கொடுக்க வேண்டும் என, கோபிநாத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிலர் வற்புறுத்தினர். இதுகுறித்து, சுமி ப்ரியா, மதுரை ஐகோர்ட் கிளையில், வழக்கு தாக்கல் செய்தார். ஐகோர்ட் உத்தரவுப்படி, காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார், கோபிநாத் உட்பட, ஏழு பேர் மீது, வரதட்சணை, வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
=====

2. கிராமப்புறங்களில் திருமணம் செய்தால் மனைவியின் கள்ளக்காதலின் விளைவாக கூலிப்படை மூலம் ஒரு நாள் கொல்லப்பட்டு உயிர் போய்விடும்.
IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

இந்த இரண்டில் எது உங்களுக்கு வேண்டும் என்று முடிவு செய்து பிறகு இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளுங்கள். ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடாதீர்கள். இந்தியாவில் திருமணம் செய்தால் இந்த இரண்டில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக உங்களுக்கு பரிசாக கிடைக்கும் என்பது உறுதி.


மூணாறு: கணவனைக் கொலை செய்த பெண்ணையும், அவரின் கள்ளக் காதலனையும் போலீசார் கைது செய்தனர். மூணாறு அருகே, கே.டி.எச்.பி., கம்பெனிக்குச் சொந்தமான, லட்சுமி எஸ்டேட் சவுத் டிவிஷனை சேர்ந்த தோட்ட தொழிலாளி சுடலைமணி,38. இவரை ஆகஸ்ட், 28 ம் தேதி இரவு முதல் காணவில்லையென, அவரது மனைவி லதா,37, போலீசில் புகார் அளித்தார்.

புகார்: சுடலைமணி காணாமல் போனதில், லதா, அதே பகுதியைச் சேர்ந்த, ஜீப் டிரைவர் பால்துரைக்கும் தொடர்பு உள்ளதாக, சுடலைமணி சகோதரர் மகாராஜன் போலீசில் புகார் அளித்தார். பால்துரையிடம் போலீசார் விசாரித்ததில், சுடலைமணியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

கைது: அவர் அடையாளம் காட்டிய பகுதியில், ஆற்றில் கிடந்த சுடலைமணியின் உடலை, நேற்று காலை மீட்டனர். பால்துரை,46, சுடலைமணியின் மனைவி லதா,37, ஆகியோரை மூணாறு போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது: பால்துரை - லதாவுக்கிடையே, 15 ஆண்டுகளாக, கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இது தொடர்பாக சுடலைமணிக்கும், லதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், லதா கள்ளத் தொடர்பை துண்டிக்கவில்லை. கள்ளக் காதலுக்கு இடையூறாக உள்ள கணவனை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர். கடந்த, 28ம் தேதி மாலை, சுடலைமணிக்கும், பால்துரைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டிற்குச் சென்ற சுடலைமணி, மனைவியை கண்டித்துள்ளார். இதை லதா, பால்துரையிடம் கூறியுள்ளார். இரவில், வீட்டருகே ரோட்டில் பதுங்கி இருந்தவர், அந்த வழியாக வந்த சுடலைமணியை துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

வழக்கு பதிவு: உடலை தேயிலைத் தோட்டத்திற்குள் இழுத்துச் சென்று ஆற்றில் வீசியுள்ளார். பால்துரை மீது கொலை வழக்கும், லதாக்கு எதிராக கூட்டு சதி போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.