இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல அப்பாவி குடும்பங்கள் சிதைக்கப்படுகின்றன. பல அப்பாவி இளைஞர்களின் எதிர்காலம் இருளில் மூழ்கிக் கொண்டிருக்கிறது.
இதனை சமீபத்தில் இந்திய உச்சநீதிமன்றமும் சுட்டிக் காட்டியிருக்கிறது. இந்த ஆபத்தான் சூழலில் தமிழக இளைஞர் ஒருவர் சரியான முடிவெடுத்து வேறு நாட்டு பெண்ணை திருமணம் செய்து தனது வாழ்க்கையை செம்மையாக்கிக் கொண்டு இந்தியாவில் இருக்கும் தனது குடும்பத்தையும் பொய் வழக்குகளிலிருந்து காப்பாற்றியிருக்கிறார். அவரை பாராட்டி வாழ்த்துவோம்.
செப்டம்பர் 01,2014
திருக்கோவிலுார்:அர்மேனிய பெண்ணை, தமிழக வாலிபர், இந்துமத சடங்குபடி,
திருமணம் செய்தார்.விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுாரைச் சேர்ந்தவர்
ராமலிங்கம் மகன் மணிவண்ணன்; பொறியியல் பட்டதாரி. அமெரிக்காவில் பணியாற்றி
வருகிறார். ரஷ்யாவில் இருந்து பிரிந்த அர்மேனியாவைச் சேர்ந்தவர் மேனி. இவர்
அமெரிக்காவில் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழி வல்லுனராக உள்ளார்.
இருவரும் காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்தனர். நேற்று காலை,
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், இந்து முறைப்படி தாலி கட்டி,
திருமணம் நடந்தது. விழாவில், மணப்பெண்ணின் பெற்றோரும் பங்கேற்றனர்.