இந்தியாவில் திருமணம் செய்ய நினைப்பவர்கள் இந்தியத் திருமணங்கள் எங்கே செல்கின்றன என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும். இதைப்பற்றித் தெரிந்து கொள்ளாமல் இந்தியாவில் திருமணம் செய்ய முற்பட்டால் உங்களது திருமணமேடை உங்களது எதிர்கால நல்வாழ்வையே அழிக்கப்போகும் தகனமேடையாகத்தான் இருக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் விதமாக தினமலர் சிறப்புக்கட்டுரை வெளியிட்டிருக்கிறது.
குறிப்பாக இந்தியாவில் இருக்கும் தவறான, ஒருதலைபட்சமான பெண்கள் ஆதரவு திருமணச்சட்டங்கள் இந்தியாவில் திருமணம் செய்யும் இளைஞர்களை கண்டிப்பாக “பொய் வரதட்சணை வழக்குகள்” என்ற தனமேடைக்குள் தள்ளாமல் விடாது. அதனால் இளைஞர்கள் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்வதுதான் அவர்களின் உயிருக்கும், மானத்திற்கும் பாதுகாப்பு என்பதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.
குறிப்பாக இந்தியாவில் இருக்கும் தவறான, ஒருதலைபட்சமான பெண்கள் ஆதரவு திருமணச்சட்டங்கள் இந்தியாவில் திருமணம் செய்யும் இளைஞர்களை கண்டிப்பாக “பொய் வரதட்சணை வழக்குகள்” என்ற தனமேடைக்குள் தள்ளாமல் விடாது. அதனால் இளைஞர்கள் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்வதுதான் அவர்களின் உயிருக்கும், மானத்திற்கும் பாதுகாப்பு என்பதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.
அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?
உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள்
ஜூலை 07,2011 தினமலர்
திருமணம் நிச்சயிக்கப்படும் போதே, விவாகரத்து மனுவும் தயாராகி விடுகிறது. அவசரமான உலகில், குடும்ப வாழ்க்கை சிலருக்கு அவசியமல்லாதது ஆகி வருகிறது.
பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டு, உறவினர்கள் வாழ்த்துடன் தான் வாழ்க்கையை இளம் தம்பதியர் துவக்குகின்றனர். ஆனால், பல்வேறு காரணங்களால் திருமணமான அடுத்த நாளே சிலரிடம் பிரிவினை ஏற்பட்டு விடுகிறது.பெரும்பாலான கணவன் - மனைவிகள் குடும்ப சொத்து, சம்பாத்தியம், வகிக்கும் பதவி ஆகியவற்றால், "ஈகோ' கொள்கின்றனர். இதனால், ஏற்படும் தாழ்வு மனப்பான்மையால் குடும்பத் தகராறு ஏற்பட்டு, பிரிகின்றனர்.
இன்றைய இளம் தலைமுறையினர் குறிப்பாக, ஐ.டி., துறையில் இருப்பவர்கள் பணம் சம்பாதிப்பதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். இரவு, பகல் பாராமல் எப்போதும் கம்ப்யூட்டரே வாழ்க்கைத் துணை என நினைக்கின்றனர்.பெற்றோரின் கட்டாயத்துக்காக திருமணம் செய்து கொள்ளும் இவர்கள், கட்டிய கணவரையோ, மனைவியையோ கண்டு கொள்வதில்லை. இதனால், இருவருமே சட்டப்படி பிரிந்து கொள்ள கோர்ட்டை நாடுகின்றனர். இன்றைய நிலவரப்படி, "ஆண்மை குறைவு' விவாகரத்துக்கு அதிகளவு காரணமாக உள்ளது.
ஆனால், கோர்ட்டுக்கு வரும்போது, இது மறைக்கப்பட்டு, "கணவர் டார்ச்சர் தருகிறார்; சந்தேகப்படுகிறார்; வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்கிறார்' என பதிவு செய்யப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, தனிக்குடித்தனம் நடத்த கணவர் வர மறுக்கிறார் என்பது பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. தனிக்குடித்தனம் செல்லும் போது, இருவருக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடு, தகராறு இவற்றை தீர்க்க ஆலோசனை கூற பெரியவர்கள் இல்லாததும் விவாகரத்துக்கு முக்கிய காரணம்.
விவாகரத்து வழக்கோடு, குடும்ப வன்முறைச் சட்டம் பெண்களுக்கு பெரிதும் உதவுகிறது. கணவரையோ, அவரது குடும்ப உறுப்பினரையோ பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஏற்பட்டால் இந்த சட்டத்தை (தவறாக)பயன்படுத்திக் கொள்கின்றனர்.
குடும்ப வழக்குகளை தீர்க்க, கோவையில் குடும்ப நல கோர்ட் உள்ளது. சார்பு நீதிமன்றங்கள், இலவச சட்ட மையத்தில் நடக்கும், "லோக்- அதாலத்'களிலும் விவாகரத்து, சேர்ந்து வாழ்தல் வழக்குகள் பைசல் செய்யப்படுகின்றன.
கோவை குடும்ப கோர்ட்டில் பதிவாகும் விவாகரத்து வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாள்தோறும் 10 முதல் 15 விவாகரத்து மனுக்கள் வருகின்றன. இவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தகுந்த முகாந்திரங்கள் இருக்கும் மூன்று முதல் ஐந்து மனுக்கள் மட்டும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இதன்படி, மாதம் 100 முதல் 120 விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 687 விவாகரத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டை விட அதிகம். 108 பெண்கள் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். இவை தவிர, பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்து வாழவும், இரண்டு ஆண்டுகள் மட்டும் பிரிந்து இருக்கவும் அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
சமீப காலமாக, கணவனும், மனைவியும் ஒருமித்த நிலையில் "மியூச்சுவல் டைவர்ஸ்' கேட்டு கோர்ட்க்கு வருவது அதிகரித்துள்ளது. பதிவாகும் மொத்த வழக்குகளில் 25 சதவீதம் வழக்குகள் இந்த வகையில் உள்ளன.தொடர்ந்து அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகளை, ஒரே கோர்ட்டில் விசாரிப்பது தாமதத்துக்கு வழி வகுக்கிறது. இதனால், கோவையில் மேலும் ஒரு கோர்ட் அவசியம் என வக்கீல்களும், கோர்ட் ஊழியர்களும் ஐகோர்ட்டுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
=====
இந்தியத் திருமணத்தில் இருக்கும் ஆபத்துக்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள:
1. இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டி
2. மகளின் வாழ்வை நாசமாக்கும் இந்தியப் பெற்றோர்கள்
3. மகளின் வாழ்வை சீரழிக்கும் இந்தியப் பெற்றோர்கள்
இந்தியத் திருமணத்தில் இருக்கும் ஆபத்துக்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள:
1. இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டி
2. மகளின் வாழ்வை நாசமாக்கும் இந்தியப் பெற்றோர்கள்
3. மகளின் வாழ்வை சீரழிக்கும் இந்தியப் பெற்றோர்கள்