பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, July 4, 2011

நிஜமாகும் சினிமாக் கதைகள்

முதலில் இந்த படத்தைப் பாருங்கள்...
இப்போது இந்த செய்தியைப் படியுங்கள்...

கோர்ட்டில் தலைகுனிந்த பிரபுதேவா! சொத்து கிடைத்த சந்தோஷத்தில் ரமலத்!!
தினமலர் சினிமா

விவாகரத்து வழக்கு விசாரணைக்காக சென்னை குடும்பநல கோர்ட்டுக்கு வந்த பிரபுதேவா தலைகுனிந்தபடி இருந்தார். அவரது காதல் மனைவி ரமலத் சொத்து கிடைத்த சந்தோஷத்தில் இருந்தார்.

நயன்தாராவுடனான காதலுக்கு பிறகு, ரமலத்தை முறைப்படி விவாகரத்து செய்ய முடிவு செய்த பிரபுதேவாவுக்கு முதலில் முதல் மனைவி எதிர்ப்பு தெரிவித்தார். என் கணவரை நயன்தாராவிடம் இருந்து மீட்டுத் தாருங்கள் என்றெல்லாம் போர்கொடி தூக்கினார். பின்னர் நடத்தப்பட்ட பேரத்தில், கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை ரமலத் பெயருக்கும், குழந்தைகள் பெயருக்கும் கொடுக்க பிரபுதேவா சம்மதித்ததைத் தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி மனு செய்தனர். இந்த வழக்கு சென்னை குடும்ப நல கோர்ட்டில் நடந்து வருகிறது. 6 மாத கால அவகாசத்திற்கு பிறகு நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

அந்போது பிரபுதேவாவும், ரமலத்தும் தனித்தனி கார்களில் கோர்ட்டுக்கு வந்தனர். உள்ளே சென்றபோதும், வெளியே வந்தபோதும் பிரபுதேவா தலைகுனிந்தபடியே இருந்தார். ரமலத் கோர்ட் வளாகத்துக்குள் வந்தபோது 15 ஆண்டுகள் ஒன்றாக குடும்பம் நடத்திய கணவனிடம் இருந்து பிரியப் போகிறோமே... என்ற வருத்தம் துளியும் இல்லாமல் இருந்தார். பின்னர் பிரபுதேவாவுடன் சிரித்து பேசினார். கோர்ட்டில் ரமலத்துக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டபடி 3 வீடுகள் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கப்பணம் கொடுப்பதற்கான ஆவணங்களை பிரபுதேவா தாக்கல் செய்தார். இதையடுத்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ரமலத் சந்தோஷமாக காணப்பட்டார்.

ரமலத்தின் வக்கீல் பி.ஆனந்தன் அளித்த பேட்டியில், பிரபுதேவாவும், ரமலத்தும் பரஸ்பர விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். பிரபுதேவா வெளிநாட்டிற்கு படப்பிடிப்புக்கு செல்ல வேண்டியது இருப்பதால் முன்கூட்டியே விசாரணை நடத்துமாறு கோர்ட்டில் மனு செய்தார். அதன்படி, இன்று விசாரணை நடத்தப்பட்டது. பிரபுதேவாவும் ரமலத்தும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். தனது குழந்தைகளின் பராமரிப்புக்காக ரமலத்திற்கு வழங்குவதாக இருந்த 3 வீடுகள் மற்றும் ரூ.10 லட்சம் டெபாசிட் தொடர்பான ஆவணங்களையும் பிரபுதேவா சமர்ப்பித்தார். இந்த வழக்கின் தீர்ப்பு ஜூலை 7ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது, என்றார்.

ஒப்படைக்க வேண்டிய சொத்துக்களை பிரபுதேவா ஒப்படைத்து விட்டதால் ரமலத்துடனான விவாகரத்துக்கு பிரச்னை இல்லை என்று வக்கீல்கள் பேசிக் கொண்டனர்.

No comments: