ஆம். இந்தியாவில் இப்போது திருமணம் என்பது சட்டத்தின் துணையோடு அப்பாவி இளைஞர்களின் வாழ்வை அடியோடு அழிக்கும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. பெரும்பாலான இந்தியத் திருமணங்கள் பொய் வரதட்சணை வழக்கு மூலம் கணவனையும் அவனது குடும்பத்தையும் சிறைக்கு அனுப்பி பணம் பறிக்கும் ஒரு சம்பிரதாயமாக மாறிவிட்டது. இதனை இந்திய உச்ச நீதிமன்றமே அப்பாவிகளுக்கெதிரான “சட்ட தீவிரவாதம்” (Legal Terrorism) என்று வன்மையாக கண்டிக்கும் அளவிற்கு இந்தியாவில் திருமணம் செய்யும் இளைஞர்களின் வாழ்வு ஆபத்தான நிலையில் இருக்கிறது. இந்த உண்மையைப் பற்றித் தெரிந்துகொள்ள இந்த இணைய தளங்களை பார்வையிடுங்கள்: ரக்ஷ்க் பாதுகாப்பு இயக்கம், இந்தியக் குடும்ப பாதுகாப்பு அமைப்பு
இதுபோன்ற ஆபத்தான இந்திய திருமணச் சூழலில் இளைஞர்கள் தங்களது திருமணத்தைப் பற்றி புத்திசாலித்தனமாக முடிவெடுப்பதுதான் அவர்கள் செய்யும் மிகப் பெரிய சாதனையாக இருக்கிறது. இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புத்திசாலித்தனமாக ஜப்பானிய பெண்ணை மணந்து தனது வாழ்வையும் தனது பெற்றோர்களின் நலனையும் காத்து சாதனை படைத்திருக்கிறார். அந்த மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!
இந்திய முறையில், மதுரை இன்ஜினியரை கரம் பிடித்த ஜப்பான் பெண்
ஜனவரி 30,2012 தினமலர்
இவர்கள் காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் பச்சைகொடி காட்டினார். நேற்று இருவரும் மதுரையில் இந்து முறைப்படி திருமணம் செய்தனர். மரிக்கோ, தன் பெயரை "பிரியங்கா' என மாற்றி, பட்டுச் சேலை அணிந்து, கூடலழகர் பெருமாள் கோயிலில் வெங்கடேஷை கரம் பிடித்தார். சோமசுந்தரம் கூறியதாவது: வெங்கடேஷூக்கு பல இடங்களில் பெண் பார்த்தும், சரியாக அமையவில்லை. பிடித்த பெண்ணை கூறினால், திருமணம் செய்து வைப்பதாக அவரிடம் தெரிவித்தேன். அவர் தயங்கியபடி, மரிக்கோ குறித்து கூறினார். "இணையதளத்தில்' பார்த்த போது, மரிக்கோவை எங்களுக்கு பிடித்தது.
திருமணத்திற்காக ஜன., 27ல் அவரது குடும்பத்தினர் மதுரை வந்தனர். ஜப்பானியர்கள் மரியாதை தெரிந்தவர்கள். மணமக்களுக்கு ஜப்பானிய மொழி, ஆங்கிலம் தெரிவதால், மொழி ஒரு தடையில்லை. அதேசமயம், நாங்கள் தமிழில் பேசுவதை மருமகள் புரிந்து கொண்டு சிரிக்கிறார், என்றார். அமைச்சர் செல்லூர் ராஜூ, மேயர் ராஜன்செல்லப்பா உட்பட பலர் மணமக்களை வாழ்த்தினர்.