தினமலர்
பெருந்துறை: பெண் போலீஸ் எஸ்.ஐ.,யை ஏமாற்றிவிட்டு, திருமணத்துக்கு மறுத்த போலீஸ்காரருக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம், பெருந்துறை, திங்களூர் நீலா கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் புவனேஷ்வரன், 30. சென்னையில், ஆயுதப்படைப் பிரிவில் போலீசாக பணி செய்தார். ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்தவர் பெண் போலீஸ் தங்கமணி, 30; இவரும் சென்னையில் பணி செய்தார்.
இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல், சென்னையில் ஒரே வீட்டில் வசித்தனர்.
தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, தங்கமணி வற்புறுத்தினார். திருமணத்துக்கு மறுத்த புவனேஷ்வரன், ஈரோடு மாவட்டத்துக்கு பணிமாறுதல் வாங்கி, திங்களூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியில் சேர்ந்தார்.இதையறிந்த தங்கமணி, மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தினார். அவர் மறுத்ததால், திங்களூர் போலீசில், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி கெடுத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தங்கமணி புகார் செய்தார். புவனேஷ்வரன், அவரது தந்தை ராசியண்ணன், தாய் நாகரத்தினம், அக்கா சகுந்தலா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பெருந்துறை சார்பு நீதிமன்றத்தில், வழக்கு விசாரணை நடந்தது. போலீஸ்காரர் புவனேஷ்வரனுக்கு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி ராஜா தீர்ப்பளித்தார். மற்ற மூவரும் விடுவிக்கப்பட்டனர். புவனேஷ்வரன் தற்போது, சென்னிமலை போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணி செய்து வந்தார். தங்கமணி சென்னையில் பயிற்சி எஸ்.ஐ., யாக பணிபுரிகிறார்.
IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPELLATE JURISDICTION
CRIMINAL APPEAL NO. 913 of 2010
[Arising out of SLP (Crl.) No. 4010 of 2008]
S. Khushboo ... Appellant
Versus
Kanniammal & Anr. ... Respondents
21. While it is true that the mainstream view in our society is that sexual contact should take place only between marital partners, there is no statutory offence that takes place when adults willingly engage in sexual relations outside the marital setting, with the exception of `adultery' as defined under Section 497 IPC. At this juncture, we may refer to the decision given by this Court in Lata Singh Vs. State of U.P. & Anr., AIR 2006 SC 2522, wherein it was observed that a live-in relationship between two consenting adults of heterogenic sex does not amount to any offence (with the obvious exception of `adultery'), even though it may be perceived as immoral. A major girl is free to marry anyone she likes or "live with anyone she likes".
No comments:
Post a Comment