பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Saturday, July 28, 2012

உங்களது பெற்றோருடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள வேண்டுமா?

இளைஞர்களே,

உங்களது பெற்றோரோடு சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள வேண்டுமா? அல்லது பெற்றோரோடு சேர்ந்து சிறைக்குச் செல்லவேண்டுமா? இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளுங்கள்.



இந்தியாவில் திருமணம் செய்யும் இளைஞர்களின் வாழ்வு பொய் வரதட்சணை வழக்குகள் மூலம் சிதைந்து கொண்டிருக்கிறது என்று பலருக்கும் தெரிந்திருக்கும். இந்த பொய் வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மாநில உயர்நீதிமன்றங்களும், இந்திய உச்ச நீதிமன்றமும் பலமுறை இதனை சுட்டிக் காட்டியிருக்கின்றன. பொய் வழக்குகளை தவிர்க்க வரதட்சணை தடுப்புச் சட்டங்களில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் இந்திய அரசாங்கத்திற்கு அறிக்கையும் அனுப்பிவிட்டது. ஆனால் இதுவரை எந்த மாறுதலும் ஏற்படவில்லை.

புகார் கொடுத்தவுடன் உடனடியாக கைது செய்யவேண்டிய அவசியமில்லை என்று சட்டத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் மருமகள் புகார் கொடுத்தவுடன் அது பொய்யான புகார் என்று தெரிந்தாலும் காவல்துறை உடனடியாக கணவனையும், அவனது குடும்பத்தையும் கைது செய்ய ஓட ஓட விரட்டிப்பிடிப்பார்கள்.

பயந்தவர்கள் காவல்துறையின் மிரட்டலுக்கு பயந்து காசுகொடுப்பார்கள். கணவன் தரப்பை மிரட்டி காசு வாங்கினாலும் மருமகளிடம் வாங்கிய காசிற்கு கணக்கு காட்டுவதற்காக சும்மா சில நாட்கள் கணவனையும் அவனது குடும்பத்தையும் சிறையில் அடைத்து வைத்திருந்து பிறகு விட்டுவிடுவார்கள்.

காவல் நிலையம், கைது, சிறை என்று வாழ்க்கையில் பார்த்திராத புதிய விஷயங்களை சாதாரண நடுத்தரக்குடும்பம் மருமகளின் பொய் வரதட்சணை வழக்கில் சந்திக்கும்போது அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இது தினமும் இந்தியாவில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

சட்டங்கள் பொய் வழக்கு தொடுப்பவரை தண்டிக்க வழி வகை செய்திருந்தாலும் நீதிமன்றங்கள் பொய் வரதட்சணை வழக்கு தொடுக்கும் மருமகள்களை தண்டிப்பதில்லை. அதனால் காவல்துறையும், நீதித்துறையும் தங்களுக்கு சாதகமாக இருப்பதை பயன்படுத்தி பல மருமகள்கள் தங்களது தவறான நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள கணவனையும், அவனது குடும்பத்தையும் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கவைக்க தயங்குவதில்லை.

எந்தப் பெண்ணாவது இப்படி செய்வாளா? என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் உண்மையில் இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. நம்பமுடியவில்லையென்றால் இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு பிறகு அனுபவித்துப் பாருங்கள்.

ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்திய பொய் வரதட்சணை வழக்கில் சிக்கினால் ஆயுள் முழுதும் உங்களுக்கு நீதியே கிடைக்காது. நீதிமன்றங்கள் 20 - 25 ஆண்டுகள் வரை உங்கள் வழக்கை இழுத்தடித்து உங்களை கொல்லாமலே கொன்றுவிடும். இதற்கு நடுவே காவல்துறையின் மிரட்டல்கள், அவமானப் பேச்சுகள், உண்மையை மறைத்து செய்தித்தாளில் வெளியிடப்படும் அவதூறு செய்திகள் இவற்றிற்கெல்லாம் தாக்குப்பிடிக்க முடிந்தவர்கள் உயிரோடு நடைபிணமாக இருக்கலாம். இவற்றை தாங்க முடியாதவர்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை! ஆனால் பொய் வழக்கில் சிக்கிய உங்களுக்கு கடைசிவரை நீதியே கிடைக்காது என்பதுமட்டும் ஆணித்தரமான உண்மை.

அதனால் உங்கள் திருமணத்தை வேறு நாட்டில் செய்துகொள்வதுதான் உயிருடன் வாழ வழி!

பின்வரும் செய்தியையும், வீடியோவையும் பாருங்கள். மனம் தெளிவடையும்.

Three commit suicide as daughter-in-law files case
Kolkata, July 20, 2012 Deccan Herald

A couple and their 28-year-old son committed suicide by jumping before a train here after the latter's wife filed a case alleging cruelty by her in-laws, police said Friday.

Brajadulal Pal, 60, his wife Anita Pal, 48, and son Rajat Pal ended their lives Thursday at Bediapara between Dum Dum and Belgharia stations.

A suicide note recovered from Brajadulal's wallet referred to a case filed against the three by the family of Priyanka Pal, who was married to Rajat a year back.

"False cases have been filed against us. We can't bear the insult. We have been on the run to save ourselves from police harassment. To protect our honour, we have decided to end our lives," the note said.

A police officer said the arranged marriage was beset with problems from the start.

Priyanka returned to her parents' house after a few months, alleging that she was being tortured by her in-laws and husband.

The cases were filed against the three under 498A (cruelty by in-laws), 34 (common intention) and 406 (criminal breach of trust) of the Indian Penal Code, following which the Pals fled from their home.

தனக்கு பொய்வரதட்சணை வழக்கு மூலம் இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக போராடி தற்கொலை செய்துகொண்ட ஒரு கணவரை ஊரே திரண்டு வேடிக்கை பார்த்த சம்பவமும் நாட்டில் நடந்திருக்கிறது.



பொய் வரதட்சணை வழக்கில் நீங்கள் சிக்கினால் உங்களைப் பற்றி அரசாங்கமோ, நீதிமன்றங்களோ, பொதுமக்களோ யாரும் கவலையே படமாட்டார்கள். இந்தியாவில் திருமணம் செய்தால் நீங்கள் குடும்பத்தோடு சிறைக்குச் சென்று வாழ்க்கையை இழக்கவேண்டியதுதான்.



இந்த பதிவில் உள்ள விஷயங்களை உங்களால் நம்பமுடியவில்லையென்றால் இன்னும் சில நாட்களில் வரவிருக்கும் திரைப்படத்தை பார்த்தாவது இந்தியத் திருமணத்தில் இருக்கும் ஆபத்தை உணர்ந்துகொள்ளுங்கள்.

498A The Wedding Gift திரைப்பட முன்னோட்டம்




Monday, July 16, 2012

இளைஞர்களை ஒழித்துக்கட்ட உருவாக்கப்பட்டுள்ள இந்திய சட்டங்கள்!

இந்தியாவில் திருமணம் செய்வதன் மூலம் பல இளைஞர்கள் தங்களது வாழ்வை இழந்திருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை. திருமணத்திற்குப் பிறகு மனைவிக்கு ஏற்றபடி கணவன் செயல்படவில்லையென்றால் (உதாரணத்திற்கு - தனிக்குடித்தனம் வரமறுத்தால்) உடனடியாக பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்து கணவனை குடும்பத்தோடு கைது செய்யும் வழக்கம் பல காலமாக இந்தியாவில் இருந்துகொண்டிருக்கிறது.

இந்த பொய் வழக்குகளின் பின்னணியில் இளைஞர்களின் வாழ்வை நாசமாக்க எத்தனை ஒருதலைபட்சமான சட்டங்களை அரசாங்கம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது, எப்படியெல்லாம் இளைஞர்களின் வாழ்வு நாசமாக்கப்படுகிறது என்பதுபோன்ற விஷயங்கள் “கோகுலம் கதிர்” என்ற பத்திரிக்கையின் கட்டுரையில் தெளிவாக எழுதியிருக்கிறார்கள். இந்தக் கட்டுரையை படித்தபிறகு வாழ்வை நாசமாக்கிக்கொள்ள விரும்பாத புத்திசாலி இளைஞர்கள் யாரும் இந்தியாவில் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்.

(Click and Read)

Page-1