ஆகஸ்ட் 01,2011 தினமலர்
கடலூர் : கடலூர் மகிளா கோர்ட் நீதிபதி அசோகன், பணி ஓய்வு பெறும் நாளான நேற்று, திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடலூர் மாவட்ட மகிளா கோர்ட் நீதிபதியாக பணியாற்றியவர் அசோகன். இவர், நேற்று மாலையுடன் பணி ஓய்வு பெற இருந்தார். அதையொட்டி, கடந்த 29ம் தேதி, கோர்ட் ஊழியர்கள் சார்பில், அவருக்குப் பாராட்டு விழா நடந்தது. பார் கவுன்சில் சார்பில் நேற்று, பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீதிபதி அசோகனை, "சஸ்பெண்ட்' செய்து சென்னை ஐகோர்ட் பதிவாளரின் உத்தரவு, நேற்று அதிகாலை கடலூர் மாவட்ட நீதிபதி ருத்ராபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த,"சஸ்பெண்ட்' உத்தரவை நேற்று காலை நீதிபதி அசோகனிடம், அவரது வீட்டில் கோர்ட் ஊழியர்கள் வழங்கினர். இவர் சென்னையில் பணிபுரிந்த போது, பதவியை தவறாகப் பயன்படுத்தி ஆதாயம் பெற்றதாக வந்த புகாரின்படி,"சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, சென்னை பூந்தமல்லி, கடலூர் விரைவு கோர்ட் மற்றும் மகிளா கோர்ட்டுகளில், பல்வேறு வழக்குகளில் அதிரடி தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி அசோகன், பணி ஓய்வுபெறும் நாளில் திடீரென,"சஸ்பெண்ட்' செய்யப்பட்டிருப்பது, வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
===
இதனை ஒரு செய்தியாக மட்டும் பார்க்காதீர்கள். பல அப்பாவிகளின் தலையெழுத்தை தங்களின் தீர்ப்பு மூலம் நிர்ணயிக்கும் ஒரு பொறுப்பான பணியில் இருப்பவரின் தரம் சரியாக இல்லையென்றால் அவரது பதவிக்காலத்தில் வழங்கப்பட்ட நீதியின் தரம் எப்படி இருந்திருக்கும்? என்று எண்ணிப்பாருங்கள்.
இதுபோன்ற நீதிமன்றங்களில்தான் பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்டிருக்கும் பல அப்பாவிக் குடும்பங்களின் தலையெழுத்து நிர்ணயிக்கப்படுகிறது.
அதனால் இளைஞர்களே,
இந்தியாவில் திருமணம் செய்து பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கி பிறகு தர நிரந்தரம் இல்லாத நீதிமன்றங்களில் நீதிக்காகப் போராடுவது என்பது உலகமகா முட்டாள்தனம். இந்தியத் திருமணத்தின் மூலம் உங்கள் வாழ்வை நீதிமன்றத்தில் தொலைத்துக்கொண்டால் அதற்கு நீங்கள்தான் முழுப்பேற்கவேண்டும்!
தரத்திற்கு மற்றொரு சிறு உதாரணம்: சிக்கிம் ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவியிலிருந்து தினகரன் ராஜினாமா ஜூலை 31,2011 தினமலர்
புதுடில்லி : சிக்கிம் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் தினகரன். இவருக்கு எதிராக, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது, அதிகாரத்தை பயன்படுத்தி, நிலம் ஆக்கிரமித்தது உள்ளிட்ட புகார்கள் கூறப்பட்டன. ராஜ்யசபாவில் கண்டனத் தீர்மானம் கொண்டு வரும் வகையில், இந்த பிரச்னை எழுப்பப்பட்டதை அடுத்து, மூன்று பேர் கொண்டநீதிபதிகள் குழுவை அமைத்து, தினகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும்படி, ராஜ்யசபா தலைவர் அமீது அன்சாரி உத்தரவிட்டார். இந்த விசாரணைக்குழு, தினகரனுக்கு எதிராக, வேறு சில குற்றச்சாட்டுகளையும் சுமத்தியது. இதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் தினகரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment