பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Saturday, July 6, 2013

ஆண்கள் தற்கொலை செய்துகொண்டால் நாட்டிற்கு நல்லது!


 இந்தியாவில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.  குறிப்பாக இந்தியாவில் திருமணம் செய்யும் ஆண்கள் மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் கொடுக்கும் பலவித தொந்தரவுகளுக்கு ஆளாக நேரிடுகிறது.

தற்போது திருமணம் செய்யும் இளம் பெண்கள் கணவன் அவனது பெற்றோரை தவிக்க விட்டு தனிக் குடித்தனம் வரவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.   அப்படி தனிக் குடித்தனத்திற்கு வர மறுத்தால் கணவனையும் அவனது குடும்பத்தையும் பொய் வரதட்சணை வழக்கில் சிக்க வைத்து பணம் பறிக்கும் பெண்களின் எண்ணிக்கையும்  அதிகரித்துள்ளது. 

எல்லாவற்றையும் விட இப்போது இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை இளம் மனைவியரின் கள்ளக் காதல். இந்திய கள்ளக் காதல் சட்டப்படி (IPC497) கள்ளக் காதலில் ஈடுபடும் பெண் குற்றவாளி கிடையாது.  அதனால்  பல ஆண்கள் தங்கள் மனைவியரின் கள்ளக்காதலைக்  வெளியே சொல்ல முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். 

அப்படியே தைரியமாக கள்ளக் காதலை தட்டிக் கேட்கும் கணவன் மீது பெண்ணுரிமை என்ற பெயரில் வரதட்சணை தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டங்களை அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

இதுபோன்ற சூழலில் தங்களின் மனக்குறைகளை யாரிடமும் சொல்ல முடியாமலும், பொய் வழக்குகளில் மனைவியால் சிக்க வைக்கப்பட்டு அரசாங்கத்தால் துன்புறுத்தப்படும் அப்பாவி ஆண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வழி தெரியாமல் தற்கொலை செய்து வருகிறார்கள். 


பெண்களை பாதுகாக்க இந்தியாவில் தேசிய மகளிர் வாரியம், மாநில மகளிர் வாரியம், மத்திய பெண்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம், பெண்கள் அமைப்புகள் என பல அமைப்புகள் இருக்கின்றன.  இதற்காக ஆண்டுதோறும் பலகோடிகளை அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்கிறது.  ஆனால் ஆண்கள் தங்கள் நலனுக்காக ஒரு அமைச்சகம் அல்லது வாரியம் வேண்டும் என்று பல ஆண்டுகளாக அரசாங்கத்திடம் முறையீடு செய்தும் யாரும் இது பற்றி கவலைப்படவே  இல்லை.  ஒருவேளை ஆண்கள் தற்கொலை செய்துகொண்டால்தான் நாட்டிற்கு நன்மை என்று நினைக்கிறார்களோ?

கோவை: கோவை மாநகரில் கடந்த ஜனவரி முதல் மே வரை, ஐந்து மாதங்களில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் என, 294 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; இதில், 80 சதவீதம் பேர் ஆண்கள்.

தமிழகத்தில் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அடுத்தபடியாக, தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை உள்ளது. காதல் தோல்வி, கள்ளத்தொடர்பு, குடும்பத்தகராறு, கடன் தொல்லை, வேலையின்மை, தீராத நோய்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பலரும் உயிரை துறக்கின்றனர். நடப்பாண்டு ஐனவரி முதல் மே வரை, 294 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில், 233 ஆண்கள், 61 பெண்கள் அடங்குவர். தூக்குப்போட்டு தற்கொலை செய்த ஆண்களின் எண்ணிக்கை 74; பெண்களின் எண்ணிக்கை 17. சாணிபவுடர், விஷம் உள்ளிட்டவற்றால் உயிரை மாய்த்த ஆண்கள் 37, பெண்கள் 16 பேர். உடலில் தீ வைத்துக் கொண்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 10; இதில், மூன்று ஆண்கள் மற்றும் ஏழு பெண்கள்.

இவை தவிர, பிற வழிகளின் மூலம் 140 பேர் அவர்களின் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இதில், ஆண்கள் 119 மற்றும் பெண்களின் எண்ணிக்கை 21. தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கையில் ஆண்கள் 80 சதவீதம். கடந்தாண்டு தற்கொலை செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 658. கடந்தாண்டை ஒப்பிட்டுபார்க்கும் போது, இந்தாண்டு ஐந்து மாதத்தில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

தற்கொலைக்கான காரணங்கள் மற்றும் விழிப்புணர்வு வழிகள் குறித்து, மனநல மருத்துவர் மோனி கூறியதாவது:மனச்சோர்வு, பொருளாதார நெருக்கடி, தாழ்வு மனப்பான்மை, வேலையின்மை, முடிவெடுக்க முடியாத நிலை போன்றவற்றால், "கிரியோடின்' மற்றும் "நார்அட்ரினின்' குறைபாட்டால் அதிகமானோர், தற்கொலை முடிவுகளை தேர்ந்தெடுக்கின்றனர். தற்கொலை செய்பவர்களில் 50 சதவீதம் பேர் 35 வயதுக்குள் இருக்கின்றனர்.

வாழ்க்கை முறை மாற்றத்தால், இளம் தலைமுறையினர் பெற்றோர்களிடம் செலவிடும் நேரம் குறைந்துவிட்டது. பெற்றோர்களின் வழிகாட்டுதல், அரவணைப்பு இல்லாமல் வளரும் குழந்தைகளின் எண்ணிக்கைஅதிகரித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், பிரச்னைகளை எதிர்கொள்ள இளம் தலைமுறையினர் திணறுகின்றனர்."வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளுக்கு, தற்கொலை ஒரு தீர்வல்ல' என்பதை உணர்த்தும் வகையில், டாக்டர்கள் அடங்கிய குழுவை அமைத்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளலாம். மேலும், 24 மணி நேரம் இயங்கும் மருத்துவமனைகளில், "ஹாட்லைன் சென்டர்' அமைத்து, கவுன்சிலிங் தரலாம். தற்கொலை செய்பவர்களுக்கு, உயிரின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும்.இவ்வாறு டாக்டர் மோனி கூறினார்.

2 comments:

காமக்கிழத்தன் said...

அச்சுறுத்தும் தலைப்பு. ஆனால், அவசியம் படிக்க வேண்டிய பதிவு.

Unknown said...

// தற்கொலை செய்வோர்களில் 80 சதவீதம் பேர் ஆண்கள்.
காதல் தோல்வி, கள்ளத்தொடர்பு, குடும்பத்தகராறு, கடன் தொல்லை, வேலையின்மை, தீராத நோய்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பலரும் உயிரை துறக்கின்றனர். //

இன்றைய பெண்கள் நமது பாரம்பரிய ஒழுக்க முறைகளை தொலைத்து இன்றைய ஆண்களை காதல், திருமணம் என்ற பெயர்களில் டிஷு பேப்பராக மட்டுமே கருதி துடைத்து தூக்கி எறிவதால் காதல் தோல்விகளாலும், கள்ள காதல் துரோகங்களாலும் ஆண்கள் தற்கொலை முடிவுகளை நாடுவது அதிகரித்து வருகிறது. இதற்க்கு தீர்வு நமது பாரம்பரிய ஒழுக்க முறைகளை மீறும் பெண்கள் மற்றும் ஆண்களை கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும். அல்லது ஆண்கள் இன்றைய பெண்களை அன்பின் ஊற்றாகவும், மனக்கவலைக்கு அருமருந்தாகவும் கருதாமல் உயிருள்ள போதை பொருளாக மட்டுமே கருதும் மன நிலைக்கு வரவேண்டும்.

நாகரீகம், பெண்ணுரிமை என்ற பெயரில் பெண்களுக்கு ஒழுக்க சீர்கேடுகள் மட்டுமே கர்ப்பிக்கப்பட்டு, அதற்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாறிவரும் சூழ்நிலையில் ஆண்களுக்காண வழிகாட்டுதல்கள் இல்லாததே இது போன்ற தற்கொலைகளுக்கு ஆண்கள் அதிகம் பலியாவதற்கு காரணமாக உள்ளது.