தினமலர் 28.8.2014
மதுரை: ஆண்மைக் குறைபாடு, மலட்டுத் தன்மையால் பல திருமணங்கள் தால்வியடைகின்றன. இதுபோன்ற திருமணங்களை தடுக்க திருமணத்திற்கு முன் மருத்துவப் பரிசோதனை அவசியமா? இல்லையா? இக்கடுமையான பிரச்னை குறித்து மத்திய, மாநில அரசுகள் எத்தகைய நடவடிக்கை எடுக்க உள்ளன? என கேள்வி எழுப்பிய மதுரை ஐகோர்ட் கிளை, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
போடியைச் சேர்ந்த ஒரு ஆணுக்கும், திருச்சியைச் சேர்ந்த எம்.எஸ்.சி., படித்த பெண்ணிற்கும் 2013 ஜூன் 19 ல் திருமணம் நடந்தது. கணவருக்கு ஆண்மைக் குறைபாடு இருந்ததால், அவரால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபாடு காட்ட முடியவில்லை. இதனால், விவாகரத்துக் கோரி திருச்சி கோர்ட்டில், மனைவி மனு தாக்கல் செய்தார்; வழக்கு நிலுவையில் உள்ளது. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ், அப்பெண் மாவட்ட சமூகநலத்துறை அலுவலரிடம் புகார் செய்தார். அந்த விசாரணை நடைமுறைகளுக்கு தடைகோரி, கணவர் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவு
இன்றும் கூட பெண் குழந்தைகளை சுமையாக, சமுதாயம் கருதுகிறது. இதனால்தான் மணமகன் பற்றி சரியாக விசாரிக்காமல், பெண்ணை திருமணம் செய்து வைக்கின்றனர். இது தீவிரத் தன்மை கொண்ட வழக்கு. இவ்வழக்கில் உள்ள விஷயம், சமுதாயப் பிரச்னை சார்ந்தது.
தற்போது, பல்வேறு விவாகரத்து வழக்குகளில் ஆண்மைக் குறைபாடு, மலட்டுத்தன்மை முக்கிய பிரச்னையாக உள்ளது. இதைக் கருதியே, கோர்ட் தீவிர கவனம் செலுத்துகிறது.
சமுதாயத்தில் குடும்ப அமைப்பு மிக முக்கியம். அது சரியாக இல்லையெனில், சமுதாயத்திற்கே ஆபத்து. குடும்ப அமைப்பிற்கு ஆபத்தாக அமைவது ஆண்மைக் குறைபாடு, மலட்டுத்தன்மை. பெற்றோர் உண்மைகளை மறைத்து, திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணம் முடிந்த பின் சம்பந்தப்பட் ஆணும், பெண்ணும் சமுதாயத்திற்குப் பயந்து வெளியில் சொல்லவும் முடியாமல், மறைக்கவும் முறையாமல் தவிக்கின்றனர்.
இவ்வழக்கில், பிரச்னையே ஆண்மைக் குறைபாடுதான். அது மறைக்கப்பட்டுள்ளது. சென்னை குடும்பநல கோர்ட் புள்ளிவிபரப்படி 2009 ல் 88, 2010 ல் 272, 2011 ல் 388, 2012 ல் 557, 2013 ல் 715 என ஆண்மைக் குறைபாடு, மலட்டுத்தன்மை காரணமாக விவாகரத்து பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
திருமணம் ஆனபின் ஒருவரின் இயலாமையால், மற்றொருவர் பாதிக்கப்படுகிறார். அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. இதுபோன்ற துன்பங்களை தவிர்க்கலாம். ஆண்மைக் குறைபாடு உள்ளதை யாரும் வெளிப்படுத்துவதில்லை. இப்பிரச்னையை மேலும் வளரவிடாமல் தடுப்பது அவசியம். இல்லையெனில், பெண்களின் வாழ்க்கை பாழாகும். பலர் மனமுடைந்து தற்கொலை செய்கின்றனர். இதை அவசர கதியில் தடுக்க சிறந்த வழியாக, திருமணத்திற்கு முன் மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யலாம். ஆண்மைக் குறைபாடு, எய்ட்ஸ், எச்.ஐ.வி., உள்ளதை கண்டறிந்து, திருமணத்தை தடுக்கலாம். இப்பிரச்னைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
ஆண்மைக் குறைபாடு, மலட்டுத் தன்மையால் பல திருமணங்கள் தோல்வியடைகின்றன. இவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்கும் வகையில், பிரச்னையின் தன்மையை மத்திய, மாநில அரசுகள் அறிந்துள்ளனவா? இதுபோன்ற திருமணங்களை தடுக்க திருமணத்திற்கு முன் மருத்துவப் பரிசோதனை அவசியமா? இல்லையா?
ஆண்மைக் குறைபாடு, மலட்டுத்தன்மை சம்பந்தமான வழக்குகளுக்கு 6 மாதங்கள் முதல் ஓராண்டிற்குள் தீர்வுகாணும் வகையில், திருமண சட்டங்களில் மத்திய அரசு ஏன் திருத்தம் செய்யக்கூடாது? பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, உண்மையை மறைப்பவர்
களுக்கு தண்டனை ஏன் வழங்கக் கூடாது?
இக்கடுமையான பிரச்னை குறித்து மத்திய, மாநில அரசுகள் எத்தகைய நடவடிக்கை எடுக்க உள்ளன? மத்திய குடும்பநலம் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர், மத்திய சட்டக் கமிஷன் செயலாளர், தமிழக சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளரை எதிர்மனுதாரர்களாக இணைத்துக்கொள்ள, ஐகோர்ட் தானாக முன்வந்துஉத்தரவிடுகிறது. அவர்கள் செப்.,5 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.
சன் டிவியின் விவாத மேடை
No comments:
Post a Comment