ஜூன் 24,2014 தினமலர்
போபால்: மத்திய பிரதேசத்தில், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மையத்தில், 'என் மனைவி என்னை கொடுமைப்படுத்துகிறாள்; என்னை காப்பாற்றுங்கள்' என, ஏராளமான ஆண்கள் புகார் அளிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில், பாலியல் பலாத்காரங்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக, மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தன்னார்வ அமைப்பின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை, பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான், கடந்த வாரம் துவக்கி வைத்தார். பலாத்காரங்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவையான மருத்துவ வசதி, போலீஸ் உதவி, சட்ட உதவி ஆகிய அனைத்து வசதிகளும், இந்த மையத்தில் கிடைக்கும்.
பாதிக்கப்படும் பெண்கள், சிகிச்சை பெறுவதற்கும், புகார் அளிப்பதற்கும், சட்ட உதவி பெறுவதற்கும், அங்கும் இங்கும் அலைந்து திரிவதைத் தடுப்பதற்காக, இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, இந்த மையத்தில் டாக்டர்கள், போலீசார், வழக்கறிஞர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். பல பெண்கள், இந்த உதவி மையத்தை தொடர்பு கொண்டு, பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, ஆண்களிடமிருந்தும், உதவி கோரி இந்த மையத்துக்கு தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. அதில் பேசும் ஆண்கள், 'என் மனைவி கொடுமைப்படுத்துகிறாள்; அவளிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்; விவாகரத்து வாங்கித் தாருங்கள்' என்கின்றனர். இதனால், உதவி மையத்தில் உள்ளவர்கள், தர்மசங்கடத்துக்கு ஆளாகியுள்ளனர்.
1 comment:
yeppa ivalavu solringaley pengalal pathikapatta ovvoru aangalaiyum aalaithu vanthu oru thaniya tv show aarambika vendiyathu thana,kooda mamiyaraiyum alaithu kolla vendiyathu thana pa.
Post a Comment