பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Sunday, October 3, 2010

காதலிப்பவனுக்கு ஆபத்து!

தினகரன் அக்டோபர் 02, 2010

கோவை: கோவை சுந்தராபுரம் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் கணேசன்(22). லேத் ஒர்க்ஷாப் தொழிலாளி. பிள்ளையார்புரத்தை சேர்ந்த 19 வயது பெண்ணை காதலித்தார். இதற்கிடையே, அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். திருமணம் செய்யுமாறு, கணேசனிடம் வற்புறுத்தினார். கணேசன் மறுத்தார். பிரச்னை போத்தனூர் காவல்நிலையம் வரை சென்றது. நேற்றுமுன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் திருமேனி முன்னிலையில், இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அந்த பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்தார்.


இந்நிலையில், நேற்று அதிகாலை 6 மணிக்கு கணேசன், சுந்தராபுரம் மதுக்கரை மெயின் ரோட்டில் உள்ள 80 அடி உயர செல்போன் டவர் மீது ஏறி நின்று, கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். ‘பெண் 6 மாத கர்ப்பமாக உள்ளார். அவரை காதலித்தே 3 மாதம்தான் ஆகிறது. கர்ப்பத்துக்கு நான் காரணமல்ல’ என்று அவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் திருமேனி தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். கணேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கணேசனின் பாட்டி, கீழே இறங்கிவருமாறு வேண்டுகோள் விடுத்தார். ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர் கீழே இறங்கினார். பொது அமைதியை கெடுத்து, தற்கொலை மிரட்டல் விடுத்ததற்காக அவர் மீது வழக்கு பதிவுசெய்து, போலீசார் அவரை கைது செய்தனர்.



No comments: