பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Saturday, October 9, 2010

நவராத்திரியில் பொம்மையாக்கப்பட்ட பொதுமக்கள்

தமிழக உ ள்துறை அமைச்சகத்தின் 2010 - 2011 ஆண்டு அறிக்கைப்படி தமிழக நீதிமன்றங்களில் 01-01-2009 முதல் 31-12-2009 வரையிலான காலமுடிவில் விசாரணைக்காக காத்திருக்கும் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 15,26,287 (தகுந்த புள்ளிவிவரம் செய்தியின் கடைசியில் உள்ளது). இதில் 01/01/2010 முதல் குவிந்த வழக்குகள் இன்னும் எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.

இதுபோல பல லட்சம் வழக்குகள் தேங்கியிருக்கும் நிலையில் நீதிமன்றங்களுக்கு வழக்கமாக வரும் விடுமுறைகள் அல்லாமல் மிகப்பெரிய அளவில் விடப்படும் விடுமுறைகள் கோடைகாலத்தில் 1 மாதம், நவராத்திரிக்காக 1 வாரம், புதுவருடத்திற்காக 1 வாரம் என்று நீண்ட விடுமுறைகளும் இருக்கின்றன.

Summer Vacation:
Saturday, the 1st day of May 2010 to Sunday, the 6th day of June 2010 (both days inclusive)

Dasara Holidays: Saturday, the 9th day of October 2010 to Sunday, the 17th day of October 2010 (both days inclusive)

Christmas Holidays: Friday, the 24th day of December 2010 to Friday, the 31st day of December 2010 (both days inclusive)


சிறு பிள்ளைகளுக்கு பள்ளிகளில் விடப்படும் இதுபோன்ற நீண்டநாள் விடுமுறைகள் நீதிமன்றங்களுக்குத் தேவையா? இதைப்பற்றி நவம்பர் 9, 2008 அன்று தினமலர்-வாரமலரில் ஒரு கட்டுரையும் வந்திருக்கிறது. அதை இங்கே சென்று படித்துப்பாருங்கள்.


தினகரன் 9/10/10

சென்னை : சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இன்று முதல் 17ம் தேதி வரை தசரா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் 12ம் தேதி மனுக்களை தாக்கல் செய்யலாம். 13ம் தேதி மனுக்கள் மீதான விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பெண் வக்கீல்கள் சங்க தலைவி பிரசன்னா தலைமையில் பெண் வக்கீல்கள் நேற்று தலைமை நீதிபதி இக்பாலை சந்தித்தனர். உயர் நீதிமன்றத்துக்கு தசரா விடுமுறை விடுவதுபோல் குடும்ப நல நீதிமன்றத்துக்கும் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர். வெளியே வந்த பெண் வக்கீல்கள் கூறுகையில், ‘‘நாங்கள் கொடுத்த மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்துக்கு வரும் 11ம் தேதி முதல் 17வரை விடுமுறை அறிவிப்பதாக தெரிவித்தார்’’ என்றனர்.

=====

சமீபத்தில்தான் குடும்பநல நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் பல குடும்பங்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு சனி, ஞாயிறு நாட்களிலும் இந்த நீதிமன்றங்கள் இயங்குவதற்கான மாற்றங்களை கொண்டுவந்தார்கள். இதுபோன்ற சமயத்தில் தசரா விடுமுறை என்பது மிகவும் அவசியமா?

இதுபோன்ற பண்டிகைக்கால நீண்ட விடுமுறைகளில் கேளிக்கைப் பொருளாக மாற்றப்படுவது பொய்வழக்கில் சிக்கி நீதிமன்றத்தில் வழக்குக் குவியலில் சிக்கும் உங்களைப் போன்ற அப்பாவிகள்தான். இந்த நவராத்திரி விடுமுறையில் சிக்கி வழக்கு முடியாமல் பொம்மையான அப்பாவிகள் எத்தனை நபர்களோ! இந்தப் பிரச்சனையிலிருந்து எப்படி விடுபடுவது என்று நீங்கள் யோசித்தால்
National Litigant Bench என்ற
அமைப்பைத் தொடர்பு கொண்டு அதற்கு வழி காணலாம்.

தமிழக நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை கீழே காணுங்கள்.

ADMINISTRATION OF JUSTICE

HOME DEPARTMENT 2010-2011

Pendency of cases

For the first time in several years, the number of cases pending as on 31.12.2009 in the Principal seat of Madras High Court is less than the number of cases pending as on 31.12.2008 by 26962 cases in the civil side and 4293 cases in the criminal side. However the pendency of cases in the Subordinate Courts continues to be a cause for serious concern. The details of pending of cases are at Annexure – VI(a), VI(b) and VI(c).


படத்தின் மீது “கிளிக்” செய்து பெரிதாக்கி தமிழகத்தில் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கையை பார்த்து நீங்கள் மயங்கி விழலாம்!இளைஞர்களே, இந்தியாவில் திருமணம் செய்வதால் உங்கள் மீது போடப்படும் பொய் வரதட்சணை வழக்கு இதுபோன்ற குவியலில்தான் காவல்துறையால் குற்றப்பத்திரிக்கை என்ற வடிவில் குப்பையாக நீதிமன்றத்தில் கொட்டப்படும். பிறகு உங்களுக்கு நீதி எப்போது கிடைக்கும் என்று எண்ணிப்பாருங்கள். அதனால் புத்திசாலித்தனமாக வேறுநாடுகளில் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவியுங்கள்.
No comments: