இந்தியாவில் திருமணம் செய்து நீங்கள் பொய் வழக்குகளில் சிக்கிக்கொள்வதே மிகவும் கொடுமையாகும். இந்தக்கொடுமைகளில் உங்கள் குடும்பத்திலுள்ள பெண்கள், வயதான பெற்றோர்கள், குழந்தைகள் என அனைவரையும் சிக்கவைத்துவிடாதீர்கள்.
இதுபோன்ற அட்டூழியங்களில் அதிகபட்சமாக 2 மாத பெண் குழந்தையை பொய் வரதட்சணை வழக்கில் சிறைப்பிடித்தது மும்பை காவல் துறை. அந்தக் குழந்தைக்கு ஜாமின் கொடுத்து தன்னை பெருமைப் படுத்திக்கொண்டது மும்பை நீதிமன்றம் அதை இந்த வீடியோவில் பாருங்கள்.
இப்போது ஆந்திர மாநில காவல்துறை தமிழ்நாட்டிற்குள் புகுந்து பொய் வரதட்சணை வழக்கிற்காக கர்ப்பிணிப் பெண்ணை கைது செய்து இரண்டு மாத கருவை அழித்து காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளது. கருவிலேயே கொல்லப்பட்ட சிசுவிற்கு நீதி வழங்கப்போவது யார்?
Click and Read
மேலுள்ள செய்தியைப் படித்த பிறகு பின்வரும் செய்தியையும் படியுங்கள். இந்திய உச்ச நீதிமன்றக் கட்டளைகள் எப்படி காற்றில் பறக்கிறதென்று தெரியும்.
தினமலர் டிசம்பர் 21,2009
மதுரை : ஒருவரை போலீசார் கைது செய்யும்போது, 11 நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதிக்காததால், போலீசார் தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்குகின்றனர். 1. கைது செய்யும் போலீஸ் அதிகாரி, அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.
- ஆனால் மதுரையில் எந்தஅதிகாரியும் அடையாள அட்டையை பொருத்தி, கைது செய்ததாக தெரியவில்லை.
2. கைது செய்தவுடன், அங்கேயே "கைது குறிப்பு' தயாரிக்க வேண்டும்.
- சட்டம் ஒழுங்கு, குற்றவழக்குகளில் இந்த நடைமுறையை போலீசார் கண்டுகொள்வது இல்லை. லஞ்ச வழக்கில் மட்டும் சம்பவ இடத்தில் கைது குறிப்பு தயாரிக்கப்படுகிறது.
3. கைது செய்யும் தகவலை, உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.
- சாதாரண வழக்குகளில் கைது செய்தால் மட்டுமே, உறவினர், நண்பர்களுக்கு தகவல் தெரிவிக் கின்றனர்.
4. கைது செய்த விபரத்தை 12 மணி நேரத்திற்குள் உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
-"விசாரணை' என்ற பெயரில், போலீசார் தகவல் தெரிவிப்பதில்லை. இதனால் ஐகோர்ட்டில், போலீசிற்கு எதிராக "ஆட்கொணர்வு மனுக்கள்' தாக்கல் செய்வது அதிகரிக்கிறது.
5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிக்கும் உரிமை உண்டு, என்பதை கைதானவருக்கு தெரிவிக்க வேண்டும்.
- இந்த நடைமுறை போலீசிற்கு தெரிந்தாலும், "கைது செய்த விபரம் வெளியே தெரிந்துவிடும்' என்பதற்காக, கைதானவர்களுக்கு இந்த உரிமை வழங்கப்படுவதில்லை.
6. காவலில் உள்ள இடத்தில், கைது விபரம், கைது குறித்த தகவல், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட விபரம் மற்றும் எந்த அதிகாரி பொறுப்பில் உள்ளார் என்பதை பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.
- பல ஸ்டேஷன்களில் இதை பின்பற்றுவதில்லை. உயர் அதிகாரிகளுக்கு மட்டும் தெரிவிக்கின்றனர்.
7. கைதானவரின் உடல் நிலையை பரிசோதிக்க வேண்டும்.
- போலீசாரின் "கவனிப்பில்' காயம் ஏற்பட்டால் மட்டுமே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். மற்றபடி, கைதானவருக்கு ஸ்டேஷனே கதி.
8. கைதானவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
- இந்த நடைமுறையை பின்பற்றாததால்தான் "லாக்கப் மரணம்' நிகழ்கிறது.
9. கைது குறித்த ஆவணங்களை குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும்.
- கோர்ட் கண்டிப்பிற்கு ஆளாகக் கூடாது என்பதற்காக இந்நடைமுறையை மட்டும் போலீசார் பின்பற்றுகின்றனர்.
10. கைதானவரை விசாரிக்கும்போது வக்கீல் உடன் இருக்க வேண்டும்.
-பிரச்னைக்குரிய வழக்குகளில் மட்டும் வக்கீல்களைஉடன்இருக்க அனுமதிக்கின்றனர்.
11. கைது பற்றிய தகவலை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
- இதை போலீசார் எப்போதும் பின்பற்றுவதே கிடையாது. இந்த உத்தரவுகளை அனைத்து ஸ்டேஷன்களிலும் வைக்க வேண்டும், என்றும் உத்தரவிடப்பட்டது. கோர்ட் உத்தரவை பின்பற்றாமல் இருந்தால், "கோர்ட்டை அவமதிப்பதற்கு சமம்' என்று தெரிந்தும் உத்தரவுகளை மீறுகின்றனர்.
இளைஞர்களே,
இந்தியாவில் திருமணம் செய்தால் உங்கள் உயிருக்கோ, உங்களின் குடும்பத்திலுள்ளவர்களின் உயிருக்கோ உத்திரவாதம் கிடையாது. எந்த காரணத்திற்காகவும் எப்போது வேண்டுமானாலும் பொய் வரதட்சணை வழக்குகள் உங்கள் மீது ஏவிவிடப்படலாம். எல்லாம் சட்டப்படிதான் நடக்கும் என்று பகல் கனவு காணாதீர்கள். இந்த செய்திகளைப் படித்தபிறகாவது இந்தியத் திருமணத்தில் இருக்கும் ஆபத்துக்களைப் பற்றிய விழிப்புணர்ச்சி பெறுங்கள்.
=======
No comments:
Post a Comment