பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Friday, February 4, 2011

அமாவாசை இருட்டில் வேலையைத் தொலைத்த போலிஸ்காரர்கள்

இருட்டு நேரத்தில் எதை எதையோ பலர் தொலைத்திருக்கிறார்கள். ஆனால் அமாவாசை இருட்டால் வேலையை தொலைத்த போலிஸ்காரர்கள் பற்றிய செய்தி செய்தித்தாளில் வந்திருக்கிறது பாருங்கள்.


திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் போலீஸ் ஸ்டேஷன் எதிரிலேயே வீடு ஒன்றில் முகமூடி கொள்ளையர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக, ஒரு இன்ஸ்பெக்டர், 3 எஸ்.ஐ.,க்கள், 8 சிறப்பு எஸ்.ஐ.,க்களுக்கு மெமோ கொடுக்க, எஸ்.பி., தினகரன் உத்தரவிட்டுள்ளார்.நத்தம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, 150 அடி தூரத்தில் உள்ள ஒரு வீட்டில், 80 சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாயை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இச்சம்பவத்தை ஆய்வு செய்த திண்டுக்கல் எஸ்.பி., தினகரன் கூறியதாவது:நத்தத்தில், நேற்று முன்தினம், போலீஸ் ஸ்டேஷன் எதிரே, இச்சம்பவம் நடந்துள்ளது. கிராமப்புறத்தில் நடந்தால் கூட போலீசாருக்கு தெரியாமல் நடந்து விட்டது என நினைத்துக் கொள்ளலாம். நேற்று முன்தினம் அமாவாசை என தெரிந்தும், போலீசார் ரோந்து செல்லாதது ஏன்?நத்தத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், 3 எஸ்.ஐ.,க்கள், 8 சிறப்பு எஸ்.ஐ.,க்கள் இருந்தும், திருட்டு நடக்க விட்டது ஏன் என விளக்கம் கேட்டு அனைவருக்கும் மெமோ கொடுக்கப்படும்.இவ்வாறு எஸ்.பி., கூறினார்.
========

உள்ளூரில் இந்தக் கூத்து நடந்துகொண்டிருக்கும்போது இந்திய போலிஸ் பெருமை சர்வதேச அளவில் எப்படி கொடிகட்டிப் பறக்கிறது என்று செய்தித்தாளில் வந்திருக்கிறது. இந்திய போலிஸ் திறமையாக சர்வதேச போலிஸ் அமைப்பை (InterPol) புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி குற்றவாளிகளைப் பிடிப்பதாக பாராட்டுக்கள் வந்திருக்கிறது. அதை பின்வரும் செய்திகள் தெளிவாகக் காட்டுக்கின்றன. திருமணத்திற்குத் தயாராகும் இளைஞர்கள் கவனமாகப் படித்துக்கொள்ளவும்.


பாரிஸ் : ""குற்றவாளிகளைப் பிடிக்க, ரெட் கார்னர் நோட்டீசை பயன்படுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது,'' என, சர்வதேச போலீசின் செகரட்டரி ஜெனரல் ரொனால்டு கே.நோபிள் கூறியுள்ளார். [...]

====

“ரெட் கார்னர் நோட்டிஸ்” என்பதை எப்படித் திறமையாகப் பயன்படுத்திவருகிறார்கள் என்பதையும் செய்தித்தாளில் வந்துள்ள பின்வரும் செய்திகளிலேயே நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

===

இந்தியாவில் திருமணம் செய்யும் வெளிநாட்டுவாழ் இந்திய இளைஞர்களுக்கு எதிராக "ரெட் கார்னர் நோட்டீஸ்'’

தினமலர் 19 ஜூலை 2010

புதுடில்லி : திருமணம் செய்து வெளிநாடுகளுக்கு ஓடிய 600 கணவர்களுக்கு எதிராக சி.பி.ஐ., சார்பில், "ரெட் கார்னர் நோட்டீஸ்' வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் படித்து, நல்ல வேலையில் இருப்பவர்கள்.

போதை மருத்து கடத்துவோர், பயங்கரவாதிகள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் ஆகியோருக்கு எதிராகவே வழக்கமாக சி.பி.ஐ., சார்பில் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்படும். ஒருவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டால், இதுகுறித்த தகவல் இன்டர்போல் போலீசாருக்கு தெரிவிக்கப்படும். குற்றவாளி பதுங்கியிருப்பதாக கருதப்படும் நாட்டில், அவரை தேடும் பணி முடுக்கி விடப்படும். மேலும், விமான நிலையத்தில் உள்ள குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படும். சம்பந்தபட்ட நபர், விமான நிலையத்தில் தனது பாஸ்போர்ட்டை சோதனைக்காக கொடுக்கும்போது, அவருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது அம்பலமாகி விடும். உடனடியாக, அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்து, அந்த நபரை அவர்களிடம் ஒப்படைப்பர். பயங்கரவாதிகள், போதை மருந்து கடத்துவோர் மட்டுமல்லாமல், இந்தியாவுக்கு வந்து திருமணம் செய்யும் கணவர்களும் தற்போது இந்த பட்டியலில் சேர்ந்துள்ளனர். இதுபோல் 600 பேருக்கு எதிராக சி.பி.ஐ., சார்பில் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.

சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது
: ஒட்டுமொத்தமாக ரெட் கார்னர் நோட்டீஸ் விடப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர், இதுபோல் திருமணம் செய்து விட்டு ஓடியவர்களாக உள்ளனர். இவ்வாறு ஏமாற்றி விட்டு ஓடுவோரில் பெரும்பாலானோர் படித்தவர்களாகவும், நல்ல வேலையில் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர் என்பது தான், அதிர்ச்சியான தகவல். இவ்வாறு திருமணம் செய்து விட்டு, ஓடுவோர் மீதும் வரதட்சணை கொடுமைக்கு சமமான வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.
===

இந்திய மக்களின் பல கோடி வரிப்பணத்தை மீட்பதற்கு இந்த “ரெட் கார்னர் நோட்டீஸ்” கொஞ்சமும் பயன்படவில்லை. பின்வரும் செய்தியையும் பாருங்கள். எது எப்படியோ ஏதாவது ஒரு வகையில் பெருமை கிடைத்தால் சரிதான்!

NEW DELHI: CBI on Saturday filed an application before a Delhi court seeking closure of the Bofors pay off case against Italian businessman Ottavio Quattrocchi.

In the plea filed before Chief Metropolitan Magistrate Kaveri Baweja, the probe agency said all efforts to extradite Quattrocchi for facing the trial here has failed.
எது எப்படியோ அமாவாசை இருட்டில் உள்ளூர் திருடனை விட்டுவிட்டார்கள். சர்வதேச போலிஸைப் பயன்படுத்தி இந்திய மக்களின் பணத்தைக் கோடி கோடியாய் அடித்தவனை பிடிக்கமுடியாமல் விட்டு விட்டு இந்தியாவில் திருமணம் செய்த “மாப்பிள்ளைகளை” ரெட் கார்னர் நோட்டிஸ் போட்டு பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏதாவது ஒரு வகையில் சர்வதேச அளவில் பெருமை கிடைத்தால் சரிதான்.


மாவட்டத்தில் திருட்டு வழக்குகள் பல கண்டுபிடிக்கப்படாத நிலையில்,குறிப்பட்ட வழக்கில் சாதனை படைத்ததாக பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி கொள்ளும் போலீசார், இதுபோன்று கடமை உணர்வுடன் பணியாற்றும் போலீசாரையும் பாராட்டி வெகுமதி வழங்கலாமே ... இடம்: ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி . (தினமலர் படம் 3 பிப்ரவரி 2011)


1 comment:

மைந்தன் சிவா said...

இப்பிடியுமா நடக்குது??நல்லதுக்கு தான் பாஸ்!