பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Thursday, June 2, 2011

தாமதமான நீதிக்குக் கிடைத்த பரிசு!

துயரத்தில் சிக்கியிருப்பவருக்கு தக்க சமயத்தில் செய்கின்ற சிறு உதவிகூட இந்த உலகத்தைவிட மிகப் பெரியது என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறியிருக்கிறார். அதுபோலத்தான் பொய் வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டவருக்கு தக்கசமயத்தில் சரியான நீதி வழங்கப்படாமல் அவர்கள் உடலாலும், மனதாலும் வேதனை அடைந்து, துன்புறுத்தப்பட்டு பிறகு பல ஆண்டுகள் கழித்து வழங்கப்படும் நீதி அந்த அப்பாவிகளுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகத்தான் இருக்கும் (Justice Delayed = Justice Denied).

பல ஆயிரம் குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் விடுவதைவிட பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்ட ஒரே ஒரு அப்பாவிக்குக்கூட தக்க சமயத்தில் நீதி வழங்காமல் இருப்பதுதான் மிகப்பெரிய அநீதி என்பதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை. இந்த அவலத்தை முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி திரு.ஸபர்வால் அவர்கள் தனது உரையில் வேதனையுடன் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

JUSTICE SOBHAG MAL JAIN MEMORIAL LECTURE ON DELAYED JUSTICEAlign Center

DELIVERED BY

HON’BLE SHRI Y.K. SABHARWAL, CHIEF JUSTICE OF INDIA

ON TUESDAY, THE 25thJULY, 2006

I will conclude by referring to the observation made by Justice Warran Burger, former Chief Justice of the American Supreme Court observed: “…… The notion – that ordinary people want black-robed judges, well dressed lawyers, fine paneled courtrooms as the setting to resolve their disputes, is not correct. People with legal problems, like people with pain, want relief and they want it as quickly and inexpensively, as possible.”

பொய் வரதட்சணை வழக்குகளில் காலதாமதம் என்பது வழக்கமாக நடந்துகொண்டிருக்கும் ஒரு அவலம். பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு அலைக்கழிக்கப்படும் அப்பாவி பொதுமக்கள் யாரும் அழகான நீதிமன்ற கட்டிடங்களையும், நேர்த்தியான கருப்பு வெள்ளை சீருடையில் அமர்ந்திருக்கும் நீதிபதியையும், வழக்கறிஞர்களையும் கண்டு மகிழ்வதற்காக நீதிமன்றத்திற்கு விரும்பி வருவதில்லலை. இதுபோன்று தாமதமான நீதியால் பாதிக்கப்படுபவர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை பின்வரும் செய்தி காட்டுகிறது.


மாஜிஸ்திரேட் மீது ஷூ வீச்சு: குறி தவறி வக்கீலை தாக்கியது
ஜூன் 02,2011 தினமலர்

நிலம்பூர்: கோர்ட்டில், மாஜிஸ்திரேட் மீது வீசப்பட்ட ஷூ, தவறி, வக்கீல் மீது பட்டதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நாட்களாக சிறையில் அடைப்பட்டு கிடந்தும், வழக்கு விசாரணை மெதுவாக நடப்பதால், ஆத்திரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் எடக்கரா பகுதியைச் சேர்ந்தவர் பென்னி, 37. இவர், நிலம்பூரில், பூட்டிக்கிடந்த மரத் தொழிற்சாலையில் இருந்து, பல பொருட்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீதான வழக்கு விசாரணை, நிலம்பூர் முதல் வகுப்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் தினேஷ் முன்னிலையில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற இருந்தது. அதில் பங்கேற்க, சிறையில் இருந்து பென்னியை போலீசார் அழைத்து வந்தனர். கோர்ட்டில், சாட்சி கூண்டின் அருகே அவர் நின்று கொண்டிருந்தார். அவரது வழக்கு, பல மாதங்களாக விசாரணை முடியாமல் இருந்து வந்ததால், ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

அன்றைய தினமும் அவருடைய வழக்கை முதலில் எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, வேறொரு வழக்கு விசாரணை முதலில் துவங்கியது. ஏற்கனவே மெதுவாக நடந்து வரும் விசாரணையால், ஆத்திரத்தில் இருந்த பென்னி, தான் அணிந்திருந்த, "ஷூ'வை கழட்டி, மாஜிஸ்திரேட்டை நோக்கி எறிந்தார். ஆனால், இலக்கு தவறி, வேறொரு வழக்கு குறித்தான விசாரணை நடத்திக் கொண்டிருந்த வக்கீல் முனீர் என்பவரது பின்னந்தலையில் பட்டது. இதை பார்த்து, கோர்ட்டில் இருந்த மாஜிஸ்திரேட் உட்பட அனைவரும், செய்வதறியாது திகைத்தனர். பென்னி ஓடி விடாதபடி போலீசார் அவரை சூழ்ந்து கொண்டனர். இச்சம்பவம், அங்கு சிறிது நேரத்திற்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.



No comments: