தவறான திருமணச் சட்ட நடைமுறைகள் உள்ள இந்தியாவில் திருமணம் செய்து பொய் வழக்குகளில் சிக்கிக்கொள்ளாமல் புத்திசாலித்தனமாக சீனத்து நாட்டுப் பெண்ணை திருமணம் செய்துள்ள இந்த இளைஞர் வளமாக வாழ வாழ்த்துக்கள்!
ஆத்தூர் வாலிபருக்கு இந்து முறைப்படி சீன பெண்ணுடன் திருமணம்
ஜூன் 21,2011 தினமலர்
இருவரது காதல் திருமணத்துக்கு, இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். சில வாரங்களுக்கு முன், காதலியை தன் சொந்த ஊரான பெத்தநாயக்கன்பாளையத்துக்கு அழைத்து வந்தார். அதையடுத்து நேற்று முன்தினம், செந்தில் ராஜா பட்டு வேட்டியும், காதலியான சீன நாட்டு பெண் ஆத்திங் (எ) ஹுசென்திங் பட்டுபுடவை அணிந்த படி இருவரும் இந்து முறைப்படி,மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். மணமக்களை, பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் அட்சதை போட்டு ஆசீர்வாதம் செய்தனர். திருமண விழாவில், ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
============
வரதட்சணை கொடுமை வழக்கில் சென்னை டாக்டர் கைது
ஜூன் 21,2011 தினமலர்
வரதட்சணை கொடுமை வழக்கில் சென்னை டாக்டர் கைது
ஜூன் 21,2011 தினமலர்
வித்யா தம்பிராஜா, 29. திண்டிவனத்தில் தந்தையின் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, 4 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். வித்யா மறுமணத்திற்காக,விளம்பரம் செய்யப்பட்டது.
சென்னை திருநின்றவூர் பிரகாஷ் நகரில் வசிக்கும் ராமையா மகன் டாக்டர் தேவஜன பிரகாசம், 41 என்பவருக்கும், வித்யாவிற்கும் கடந்தாண்டு ஜூலை 15ம்தேதி,சென்னை வடபழனி கோவிலில் திருமணம் நடந்தது.
கடந்த 7ம் தேதி வித்யா, திண்டிவனம் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: கடந்தாண்டு செப்., 15ம்தேதி படுக்கையில் இருந்த போது தலையணையால் என் முகத்தில் வைத்து அழுத்தி "நீ செத்து விட்டால் உடனடியாக சொத்து என் கைக்கு வந்து விடும்' எனக் கூறி கொலை செய்ய முயற்சித்தார். நான் அவரை தள்ளிவிட்டு என் அம்மாவின் அறைக்கு ஓடி விட்டேன். அதே மாதம் 20ம் தேதி எனது வீட்டிலிருந்த 28 சவரன் நகைகள் மற்றும் அவருடைய பொருட்களையும் எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் எனது மொபைல் போன், பெற்றோர் மொபைல் போன்கள் மற்றும் மருத்துவமனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி மிரட்டி வருகிறார். மருத்துவமனை ஊழியர்களிடம் தரக்குறைவாக பேசி வருகிறார். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். திண்டிவனம் மகளிர் போலீசார், சென்னையில் தங்கியிருந்த, டாக்டர் தேவஜன பிரகாசத்தை நேற்று முன்தினம் கைது செய்து திண்டிவனம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சந்தோஷ் உத்தரவின்பேரில், டாக்டர் தேவஜன பிரகாசம் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments:
Post a Comment