பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Friday, June 3, 2011

விவாகரத்து கோரும் கணவனுக்கு காத்திருக்கும் பரிசு

மனம் ஒத்து வாழஇயலாத நிலையில் மனைவியிடமிருந்து சட்டப்படி பிரிந்துசெல்ல நினைத்தாலும் இந்திய ஆண்களால் அவ்வளவு எளிதாக விடுதலை பெறமுடியாது. சட்டங்களும், அதனைச் செயல்படுத்தும் கட்டப்பஞ்சாயத்துக்களும் அவ்வளவு எளிதாக இந்தியக் கணவன்களை விட்டுவிடாது.

இந்தியத் திருமணம் என்ற தகனமேடைக்குள் தெரியாமல் சென்று சிக்கிக்கொண்டு பிறகு அதிலிருந்து விடுபட நினைக்கும் ஆண்களை தண்டிப்பதற்காக உருவாக்கப்பட்டவைதான் வரதட்சணை சட்டங்கள்.

இளைஞர்களே,

இந்தியாவில் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் வரதட்சணையை ஒழிப்பதற்காக பயன்படுத்தப்படுவதில்லை. அதற்குப் பதிலாக கணவனையும் அவனது குடும்பத்தையும் பழிவாங்கும் ஆயுதமாகவும், அப்பாவிகளை மிரட்டி பணம் பறிக்கும் வழிமுறையாகவும்தான் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது என்று டில்லி உயர்நீதிமன்றமே உண்மையைக் கூறியிருக்கிறது.

Delhi High Court

Crl. Appeal No. 696/2004

Date: 01.11.2007

A failed marriage is not a crime however, the provisions of Section 498A are being used to convert failed marriages into a crime and the people are using this as tool to extract as much monetary benefit as possible. Involving each of the family members of the husband is another arm in the armory of the complainants of failed marriages. Not only close relatives but distant relatives and even neighbors are being implicated under Section 498A and other provisions of IPC in cases of failed marriages”

டில்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ள உண்மை எப்படி செயல்வடிவமாக்கப்பட்டு சட்டக் காப்பாளர்களால் நடைமுறைப் படுத்தப்படுகிறது என்பதை பின்வரும் செய்தி தெளிவாகக் காட்டுகிறது.

அதனால் முடிந்தவரை இந்தியாவில் திருமணம் என்ற தகனமேடைக்குள் செல்வதை தவிர்த்தால் நீங்களும் உங்களது குடும்பமும் நலமாக வாழலாம்.

விவாகரத்திற்கு விண்ணப்பித்தவரை அடித்த போலீசார் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
ஜூன் 02, 2011 தினமலர்
சென்னை: விவாகரத்திற்கு விண்ணப்பித்தவரை போலீஸ் அடித்ததால், பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு வழங்க, அரசுக்கு மாநில மனித உரிமைகள் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், வாலாஜா தாலுகா, எடகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர், வாலாஜா போலீஸ் நிலைய எஸ்.ஐ., பார்த்தசாரதி, ராணிப்பேட்டை கூடுதல் எஸ்.பி., பாலகிருஷ்ணன் (2006ம் ஆண்டில்) ஆகியோருக்கு எதிராக, மாநில மனித உரிமைகள் கமிஷனில் தாக்கல் செய்த மனு:

கடந்த 2000ம் ஆண்டு, ஆற்காட்டைச் சேர்ந்த சாந்தா என்பவரை திருமணம் செய்தேன். கருத்து வேறுபாட்டால் (2004ம் முதல்) பிரிந்து வாழ்ந்து வந்தோம். 2006ம் ஆண்டு, ராணிப்பேட்டை கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தேன். இதனால் ஆத்திரமடைந்த மாமனார் கோவிந்தசாமி, சில ரவுடிகளுடன் என் வீட்டிற்கு வந்து தகராறு செய்தார். இதுகுறித்து, வாலாஜா போலீசில் புகார் செய்தேன். புகாரை விசாரித்த எஸ்.ஐ., பார்த்தசாரதி, என் மனைவியுடன் சேர்ந்து வாழ வற்புறுத்தினார். நான் மறுக்கவே, என் முகத்தில் கடுமையாக தாக்கினார். இதனால், இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யுமளவிற்கு என் வலது கண் பாதிக்கப்பட்டது. வெற்று பேப்பர்களிலும் கையெழுத்து வாங்கினார்.

இந்நிலையில், 2006 செப்டம்பரில், ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், என் மனைவி ஒரு பொய் புகாரை அளித்தார். அப்புகாரை விசாரித்த, ராணிப்பேட்டை கூடுதல் எஸ்.பி., மனைவியுடன் சேர்ந்து வாழாவிட்டால், என் மீது வரதட்சணை வழக்கு போடப்படும் என மிரட்டினார். மனித உரிமை மீறலாக செயல்பட்டுள்ள போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த மாநில மனித உரிமை கமிஷன் உறுப்பினர் மாரியப்பன் பிறப்பித்துள்ள உத்தரவில்,"எஸ்.ஐ., பார்த்தசாரதி, மனித உரிமை மீறலாக செயல்பட்டுள்ளது விசாரணையில் உறுதியாகிறது. இதற்கு நஷ்ட ஈடாக தமிழக அரசு, மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

===



No comments: