பல பெண்களும் அவர்தம் குடும்பத்தாரும் திருமணம் என்ற பெயரில் பல அப்பாவி இளைஞர்களின் வாழ்வை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக திருமணம் என்ற பெயரில் தங்களது மகளை வைத்து அவளது கணவனுக்கெதிராக பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்ய வைத்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை. இந்த வியாபாரத்திற்கு உதவி செய்வதற்காக அவ்வப்போது அரசாங்கம் ஒருதலைபட்சமான புதிய சட்டங்களை இயற்றி ஊக்கப்படுத்தி வருகிறது.
திருமணம் என்ற பெயரில் பெண்வீட்டார் வியாபாரம் செய்ய அரசாங்கம் கொடுத்துள்ள சட்டங்களில் சில:
- கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவி குற்றவாளி கிடையாது (IP497)
- கணவன் மீது மனைவி பொய் வரதட்சணை வழக்குத் தொடர்ந்தால் எந்தவித ஆதாரமுமின்றி கணவனை கைது செய்யலாம் (IPC498A)
- மனைவி பொய்யாக வரதட்சணை வழக்குத் தொடர்ந்தாலும் அவருக்கு எந்தவித தண்டனையும் கிடையாது, அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்தான் தன்னை நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ளவேண்டும். வழக்கு தொடுப்பவர் எந்தவித ஆதாரத்தையும் காட்ட வேண்டியதில்லை (Dowry Prohibition Act and IPC498A)
- குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின்படி கணவன் மட்டுமே மனைவிக்கெதிராக வன்முறை செய்யும் குற்றவாளி. மனைவி எப்போதும் அப்பாவி (Domestic Violence Act-2005)
- திருமணம் முடிந்து 7 ஆண்டுகளுக்குள் மனைவி இறந்தால் அது கணவனும் அவனது குடும்பமும் சேர்ந்து செய்த வரதட்சணைக் கொலை என்று கருதப்படும் (IPC304B). ஆனால் திருமணம் நடந்து அடுத்த நாளே கணவன் தற்கொலை செய்துகொண்டால் அது இயற்கை மரணமாக கருதப்படும்.
இதுபோன்ற சூழலில் இந்தியாவில் திருமணம் செய்யும் இளைஞர்கள் எழுதும் முதல் கடிதம் இந்த செய்தியில் இருப்பதுபோலத்தான் இருக்கும்.
மனைவி மிரட்டல்: கணவன் தற்கொலை
ஏப்ரல் 11,2013 தினமலர்
ஏப்ரல் 11,2013 தினமலர்
பெங்களூரு:சாப்ட்வேர் இன்ஜினியர், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை முடிவுக்கு, மனைவியும், மாமியாருமே காரணம் என, அவர் குறிப்பு எழுதி வைத்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்தவர், மனோஜ் குமார், 36. சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், பிரபல ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இவருக்கும், சாப்ட்வேர் இன்ஜினியரான, பிரமீளாவுக்கும், மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, ஒரு வயதில் குழந்தை உள்ளது.கணவன், மனைவிக்கு இடையே, கருத்து வேறுபாடு நிலவியதால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். மனோஜ் மற்றும் அவரது குடும்பத்தார் மீது, வரதட்சணை கொடுமை புகார் செய்யப் போவதாக, அடிக்கடி மிரட்டி வந்தார்.இதனால் மனமுடைந்த மனோஜ், திருப்பதி சென்றார். அங்கு, அவர் தங்கியிருந்த அறையில், நேற்று முன்தினம், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.அவர் எழுதிய கடிதத்தை, போலீசார் கைப்பற்றினர். அதில், தன் மனைவி, அடிக்கடிமிரட்டியதால் தான், தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டிருந்தது.
மேலும், தன் முடிவுக்கு, மனைவியும், மாமியாருமே காரணம் எனவும் மனோஜ் எழுதியிருந்தார்.
No comments:
Post a Comment