பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Sunday, June 9, 2013

தனிக் குடித்தனம் வர மறுக்கும் கணவனுக்கு குடும்பத்தோடு ஓராண்டு சிறை! சம்மதமா?

இந்தியத் திருமணத்தில் இருக்கும் பல ஆபத்துக்களில் இதுவும் ஒரு வகை!


இளம் பெண் தற்கொலை: கணவர் குடும்பத்தினருக்கு சிறை
 
ஜூன் 09,2013 தினமலர்

கோவை: இளம்பெண் தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கணவர், அவரது தம்பிகள் உள்ளிட்ட மூவருக்கு, தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், மாமியாருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனையும் வழங்கி, கோவை மகளிர் கேர்ட் தீர்ப்பளித்தது.

சேலம், ஆத்தூரைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி, 26. இவருக்கும், கோவை ரத்தினபுரியில் மளிகை கடை நடத்தும் செல்வகுமாருக்கும், கடந்த 2003ல் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. சில ஆண்டுகளில், தனி குடித்தனம் செல்ல வேண்டும் என, கணவரிடம் உமா கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த கணவர் குடும்பத்தினர், "தனி குடித்தனம் செல்ல வேண்டுமென்றால், பெற்றோரிடம் நகை மற்றும் ரொக்கம் வாங்கி வர வேண்டும்' என்று வற்புறுத்தினர். மனமுடைந்த உமா மகேஸ்வரி, 2007, ஆக., 23ம் தேதி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இவரது சாவில் சந்தேகம் அடைந்த இவரது சகோதரர் வெள்ளை விநாயகம், கோவை போலீசில் புகார் செய்தார். ரத்தினபுரி போலீசார் விசாரித்து, இளம் பெண் சாவுக்கு காரணம் என, குற்றம் சாட்டப்பட்ட கணவர் செல்வகுமார், மாமியார் பார்வதி, கணவரின் சகோதரர்கள் செல்வராஜ், ஜெயராஜ் ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கு, கோவை மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் சரோஜினி ஆஜரானார். 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், குற்றம் சாட்டப்பட்ட கணவர் மற்றும் அவரது தம்பிகள் இருவருக்கும், தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்தார். மாமியார் பார்வதிக்கு ஆறு மாதம் சிறையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து, தீர்ப்பு கூறினார்.

No comments: