பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, June 10, 2013

மனைவியுடன் உறவு கொள்ளாமல் இருப்பது குற்றச் செயலாகும் - கேரள உயர்நீதிமன்றம்

திருமணம்  என்ற பெயரில் இந்தியாவில் நடக்கும் கூத்துக்களில் இதுவும் ஒரு வகை! 

மனைவி உறவு கொள்ள விரும்பினால் கணவன் கண்டிப்பாக உறவு கொள்ள வேண்டும்.  இதற்கு கணவன் மறுத்தால் அது  சட்டப்படி குற்றமாகும்.  ஆனால் மனைவிக்கு விருப்பமில்லாமல் கணவன் உறவு கொள்ள விரும்பினால் அது  மனைவியை கணவன் பாலியல் பலாத்காரம் செய்த குற்றமாக கருதப்படுகிறது!
பின்வரும் செய்தியில் மனைவி உறவு கொள்ள விரும்பி கணவன் மறுத்துவிட்டது குற்றமாகும் என்று கூறி இதனால் மனைவிக்கு மனம், உடல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறி உறவுக்கு உதவாத கணவன் தேவையில்லை என்று விவாகரத்து வழங்கியிருக்கிறார்கள்.

தற்போது இந்தியாவில் பரவலாக பரவியிருக்கும்  இளம் மனைவியரின் பொய் வரதட்சணை வழக்குகளால் பல திருமணங்கள் சிதைந்து கணவனும் மனைவியும் விவாகரத்து இல்லாமல் தனியே பிரிந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 

இந்த பிரிந்து வாழும் ஜோடிகளில் கணவன் நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து வேண்டும் நான் வேறு திருமணம் செய்து கொண்டு முறையாக உறவினை அனுபவிக்கவேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தால் விவாகரத்து வழங்கப்படுவதில்லை.  அதே சமயம் தனியே வாழும் மனைவிக்கு  பராமரிப்பு என்ற பெயரில் கணவன் மாதந்தோறும் பணம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது. 

ஆனால் வாங்கும் பணத்திற்கு கணவன் விரும்பும் உறவு மனைவியிடமிருந்து கிடைப்பதில்லை.  அதாவது மனைவியாக நடந்துகொள்ளாத ஒரு பெண்ணுக்கு மனைவி என்ற பெயரில் கணவன் பணம் கொடுக்க வேண்டும், தனது சொத்துக்களில் பங்கு கொடுக்க வேண்டும்.  ஆனால் கணவன் விரும்பும் இல்லற சுகம் மட்டும் கிடைக்காது!!!

சட்டப்படி குற்றம் என்பதால் விலைமாதர்களை நாடமுடியாமலும், விவாகரத்து கிடைக்காததால் வேறு திருமணம் செய்ய முடியாமல் நேர் வழியிலும் இல்லற சுகத்தை அனுபவிக்க முடியாமலும் இருக்கும் கணவர்கள்  இல்லற சுகத்தை கொடுக்காத மனைவிக்கு நீதிமன்ற உத்தரவினால் மாதந்தோறும் பணம்  கொடுக்கவேண்டியிருக்கிறது.  இப்படி பணம் கொடுத்துக் கொண்டிருக்கிற கணவர்களுக்கு தங்கள் மனைவியிடமிருந்து தங்களுக்கு முறைப்படி கிடைக்கவேண்டிய உறவு கிடைக்காதபோது மனநல மற்றும் உடல் நல  பாதிப்புகள் ஏற்படாதா??? 

மனைவியுடன் உறவு கொள்ளாத கணவன் விவாகரத்தை உறுதி செய்தது ஐகோர்ட்
                                                             ஜூன் 10,2013 தினமலர்

கொச்சி:திருமணம் முடிந்து, மூன்றாண்டுகளாக, "செக்ஸ்' உறவு வைத்துக் கொள்ளாத கணவரிடம் இருந்து மனைவி பெற்ற விவாகரத்தை, கேரள ஐகோர்ட் உறுதி செய்தது.

கேரள மாநிலம், ஆலப்புழாவை சேர்ந்தவர், சஞ்ஜன். நான்கு ஆண்டுகளுக்கு முன், முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்தார். சஞ்ஜனின் மனைவி, கணவர் தன்னுடன், செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதில்லை எனக் கூறி, குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி, வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த, நீதிபதி, இருவருக்கும் விவாகரத்து வழங்கினார். இதை எதிர்த்து, அந்த நபர், கேரள ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

முஸ்லிம் திருமண சட்டப்படி, கோர்ட்டில் விவாகரத்து பெற்றது செல்லாது எனக் கூறி, மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த, நீதிபதி, பி.டி.ராஜன் தலைமையிலான பெஞ்ச், சஞ்ஜனின் மனுவை தள்ளுபடி செய்ததோடு, குடும்ப நல கோர்ட்டின் தீர்ப்பையும் உறுதி செய்தது.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:  திருமணத்திற்குப் பின், மனைவியின் தேவைகளை பூர்த்தி செய்யாமல், குடும்ப பொறுப்புகளை ஏற்காமல் இருந்தால், அந்த திருமணத்தை ரத்து செய்யலாம் என, முஸ்லிம் திருமணச் சட்டம் தெரிவிக்கிறது. மனைவியின் விருப்பத்திற்குப் பிறகும், செக்ஸ் வைத்துக் கொள்ளாதது, குற்றச்செயலாகும். இதனால், அந்த பெண்ணுக்கு, உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சஞ்ஜனின் மனுவை தள்ளுபடி செய்வதோடு, குடும்ப நல கோர்ட் கொடுத்த தீர்ப்பை, உறுதி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள், தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

No comments: