பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Tuesday, June 18, 2013

உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் வேறு நாட்டில் அகதிகளாக தஞ்சம் புகும் இந்திய இளைஞர்கள்

இந்திய இளைஞர்கள் தற்போதைய தொழில் நுட்பம் முதல் டாஸ்மாக் சரக்கு ரகசியம் வரை எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.  ஆனால் இந்தியாவில் திருமணம் செய்தால் இந்தியாவிற்குள் நுழைய முடியாமல் வேறு நாட்டில் அகதியாக வாழவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்ற விஷயம் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.

கலப்புத்திருமணம் செய்ததால் தாங்கள் இந்தியாவிற்கு சென்றால் தங்களை அரசியல் செல்வாக்கு மிக்க பெற்றோர்கள் போலிஸ் துணையோடு இந்தியாவில் கொன்றுவிடுவார்கள் என்று ஒரு  இளைஞர் ஆஸ்திரேலிய நாட்டில் முறையீடு செய்து இந்தியாவில் குடிமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆஸ்திரேலிய நாட்டில் அகதியாக மாறிவிட்டார் என்று செய்தி வந்திருக்கிறது.

இந்த செய்தியை படித்ததும் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.  ஆனால் அதைவிட அதிர்ச்சியான செய்தி ஒன்று இருக்கிறது.  இது பலருக்கும் தெரியாது ஆனால் இந்திய அரசாங்கம் உட்பட எல்லா நாடுகளுக்கும் தெரியும்.  அது என்னவென்றால் இந்தியாவில் திருமணம் செய்து வெளிநாடுகளில் தங்கள் திறமை மூலம் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்திய இளைஞர்கள் மீது இந்தியாவில் ஒரு மூலையில் காவல்நிலையத்தில் பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞர்களையும், அவரது குடும்பத்தையும் மிரட்டி பணம் பறிக்கும் இழி செயல் பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. 

இதுபோன்ற சிக்கலில் சிக்கும் பல இளைஞர்கள் இந்தியாவிற்குள் நுழைய முடியாமல் அவர்கள் இருக்கும் நாடுகளிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  இவர்களால் தங்கள் வீட்டு இன்ப துன்ப நிகழ்ச்சிகளுக்கு இந்தியாவிற்குள் வர முடியாது.  அப்படி இந்தியாவிற்குள் வந்தால் பொய் வரதட்சணை வழக்கை வைத்துக்கொண்டு காத்துக்கொண்டிருக்கும் காவல்துறையும், நீதித்துறையும்  கைகோர்த்துக்கொண்டு இந்த இளைஞர்களின் வாழ்க்கையை சின்னாபின்னம் செய்துவிடுகிறார்கள்.  இவர்களின் எதிர்காலம்  பிறகு மிகப் பெரிய கேள்விக்குறியாகிவிடும். 

இந்த விஷயத்தை உங்களால் நம்ப முடியவில்லையென்றால் இந்தியாவில் திருமணம் செய்ததால் வெளிநாடுகளில்  அகதிகளாக வாழும் இளைஞர்களின் மரண ஓலத்தை இந்த இணையதளத்தில் சென்று பாருங்கள்  Forums - 498a ORGதினமலர் 17 ஜூன் 2013

மெல்போர்ன்:பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த, கலப்புத் திருமணம் செய்த தம்பதி, ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க, அந்நாட்டு நீதிமன்றம் அனுமதியளித்து உள்ளது.

கலப்பு திருமணம்பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய வாலிபரும், இந்துப் பெண்ணும், 2007ல், காதலித்து, திருமணம் செய்து கொண்டனர்.
தங்கள் காதல் விவகாரத்தை வீட்டில் சொன்னால், பெற்றோர் தங்களை பிரித்து விடலாம் அல்லது கவுரவக் கொலை செய்துவிடலாம் எனக்கருதிய இருவரும், ரகசிய திருமணம் செய்து கொண்ட பின், 2008ல், ஆஸ்திரேலியாவிற்குச் சென்றனர்.

நீட்டிப்பு
இந்நிலையில், அங்கு ஐந்து ஆண்டுகள் வசித்த இருவரது விசா காலம் முடிந்த நிலையில், "இந்தியாவிற்குச் சென்றால், தங்களை கவுரவக் கொலை செய்துவிடுவார்கள் எனவே, விசா காலத்தை நீட்டிக்க வேண்டும்' என, குடியுரிமைத் துறை அதிகாரிகளிடம் மனு செய்தனர்.இருப்பினும், அவர்களது மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.

பின், "தங்களை அகதிகளாகக் கருதி, ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி அளிக்க வேண்டும்' என, அகதிகள் மறு ஆய்வு தீர்பாயத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், "இந்த தம்பதி, தங்கள் சொந்த மாநிலமான, பஞ்சாபைத் தவிர்த்து, மும்பை, டில்லி போன்ற பெரிய நகரங்களில் வசிக்க வாய்ப்புள்ளது' என, கூறி, மனுவை நிராகரித்தது. ஆனால், "என் தந்தைக்கு அரசியல் மற்றும் போலீசில் செல்வாக்கு உள்ளதால், அதனைப் பயன்படுத்தி, எங்களைப் பிரித்துவிடுவார் அல்லது கொலை கூட செய்துவிடுவார்' என, பஞ்சாப் வாலிபர் வாதாடினார்.

அனுமதி
பின், கேன்பராவில் உள்ள, "பெடரல்' கோர்ட்டில், தீர்பாயம் அளித்த உத்தரவை எதிர்த்து, இந்த தம்பதி அப்பீல் செய்தனர்.  இந்த மனுவை விசாரித்த பெடரல் கோர்ட், "இந்திய தம்பதி ஆஸ்திரேலியாவில் தாராளமாகத் தங்கலாம், தீர்ப்பாயம், தன் உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது. இருப்பினும், பெடரல் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, ஆஸ்திரேலிய அதிகாரிகள், அப்பீல் செய்ய உள்ளனர்.


No comments: