பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Thursday, September 2, 2010

இளைஞர்களுக்குக் கொடுக்கப்படும் கிளுகிளுப்பு அல்வா

இந்தியாவில் திருமணம் செய்வதற்கு தயாராகிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் சிறப்பு அல்வா செய்தியாக வந்திருக்கிறது.

செப்டம்பர் 01, 2010 தினமலர்

கடலூர் : திருமணமான மறுநாளே கணவனை கழற்றி விட்டு, காதலனுடன் பெண் ஓடிய சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர் அடுத்த ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் திருவந்திபுரம் சாலக்கரை வெங்கடேசன் மகள் புவனேஸ்வரிக்கும், கடந்த 30ம் தேதி மேல்பட்டாம்பாக்கத்தில் திருமணம் நடந்தது. அன்று இரவு மணமகள் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மணப்பெண் விரும்பாததால் முதலிரவு நடக்கவில்லை. மறுநாள் பெண்ணின் தாயார் புதுமாப்பிள்ளை ரமேஷிடம், பெண்ணை சினிமாவிற்கு அழைத்துச் சென்றால் மனம் விட்டு பேசுவாள் என, கூறினார். அதன்படி ரமேஷ், புவனேஸ்வரியுடன் கடலூர் வேல்முருகன் தியேட்டரில் , "வம்சம்' படம் பார்க்கச் சென்றார்.

காலைக் காட்சி முடிந்து வெளியே வந்ததும் புவனேஸ்வரி, தியேட்டர் முன் பைக்குடன் நின்றிருந்த இருவரைக் காண்பித்து, "எனது நெருங்கிய உறவினர்கள்' என, ரமேஷிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவரும் இருவரிடமும் நலம் விசாரித்தார். பின் புவனேஸ்வரி, "நான் உறவினருடன் பைக்கில் பேசிக் கொண்டே வருகிறேன். நீங்கள் அந்த பைக்கில் வாருங்கள்' எனக் கூறி மற்றொரு பைக்கை காண்பித்தார். அதனை நம்பிய ரமேஷ் ஒரு பைக்கிலும், புவனேஸ்வரி மற்றொரு பைக்கிலும் வீட்டிற்கு புறப்பட்டனர். புவனேஸ்வரியை ஏற்றிக் கொண்டு முன்னால் சென்ற பைக் சிறிது தூரத்தில் ரமேஷின் பார்வையிலிருந்து மறைந்தது.

ரமேஷை ஏற்றிச் சென்றவர் திடீரென பைக்கை நிறுத்தி, "இங்கேயே நில்லுங்கள். இதோ வந்து விடுகிறேன்' எனக் கூறிவிட்டு மாயமானார். வெகு நேரம் காத்திருந்த மாப்பிள்ளைக்கு சந்தேகம் வரவே, தனது மொபைல் போனில் வீட்டிற்கு பேசலாம் என பார்த்தபோது, யாரிடமும் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அனைத்து எண்களும் அழிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின் சாலக்கரையில் வீட்டிற்குச் சென்று பார்த்த போது தான், தன் மனைவி சினிமா தியேட்டரில் தனது மொபைல் போனை வாங்கி அனைத்து எண்களையும் திட்டமிட்டு அழித்தது தெரிந்தது. உறவினர் எனக்கூறி பைக்கில் வந்தவரை அறிமுகம் செய்து வைத்தது அவரின் காதலன் என்ற தகவலை அறிந்த ரமேஷ் நிலைகுலைந்தார். பெண்ணின் தந்தை வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து புவனேஸ்வரியைத் தேடி வருகின்றனர்.

(Click and Read)

=============

இப்படி குடும்பத்திற்குள் ஆயிரம் பிரச்சனைகளை வைத்துக்கொண்டு அவற்றையெல்லாம் மறைத்து ஏமாளியான இளைஞனைப் பிடித்து அவன் தலையில் திருமணம் என்ற பெயரில் ஒரு பெரிய பிரச்சனையை பெண்ணின் பெற்றோர்கள் திணித்துவிடுவார்கள். பிறகு திருமணத்திற்குப் பிறகு இதுபோன்ற பெண்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ள செயல்களில் ஈடுபடுவார்கள்.

  • திருமணமானவுடன் கணவன் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டுக் கள்ளக்காதலனுடன் கம்பி நீட்டிவிடுவார்கள்.
  • கள்ளக் காதலனுடன் சேர்ந்துகொண்டு தக்க சமயம் பார்த்து கணவனை தீர்த்துக்கட்டிவிடுவார்கள்
  • கணவனும் அவனது குடும்பமும் வரதட்சணைக் கொடுமை செய்வதாக பொய் வழக்குப்போட்டு அவனை நீதிமன்றத்தில் நிற்கவைத்துவிட்டு இவர்கள் கள்ளக்காதலனுடன் சல்லாபமாக இருப்பார்கள்.
  • பெண் செய்யும் தவறு வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்தால் பெண்ணைப் பெற்றவர்கள் மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணைக் கொடுமை செய்வதாகப் புகார் கொடுத்துவிடுவார்கள்.

இதுதான் இந்தியாவில் இருக்கும் வரதட்சனைக் கொடுமை வழக்குகளின் பின்னணி!

இவற்றில் எதுநடந்தாலும் பலியாக்கப்படுவது அப்பாவி இளைஞர்களும் அவர்களது நல்வாழ்க்கையும்தான். அதனால் இளைஞர்களே இந்திய தகனமேடைக்குள் காலடி வைத்து வாழ்க்கையை சீரழித்துக்கொள்ளாதீர்கள்.


சில நாட்களுக்கு முன்பு வந்த செய்தி

கலெக்டரை கல்யாணத் தரகராக்கும் இளம் பெண்கள்!

ஆகஸ்ட் 16,2010 தினமலர்

திருச்சி: காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாகக் கூறி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள, எம்.பி.ஏ., பட்டதாரி பெண் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர் சவுண்டையா தலையிட்டதால், "காதலன் குணசேகரன் மீது இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியதாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும்' கண்டோன்மென்ட் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆண் காதலித்து ஏமாற்றிவிட்டான் என்று ஒரு பெண் சொன்னால் உடனே எல்லா பிரிவுகளிலும் வழக்குப் பதிவுசெய்யும் காவல்துறை திருமணம் செய்துவிட்டுப் பிறகு ஏமாற்றிவிட்டு ஓடிப்போன பெண் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் என்ன வழக்குப்பதிவு செய்வார்கள்?