பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Thursday, August 19, 2010

கலெக்டரை கல்யாணத் தரகராக்கும் இளம் பெண்கள்!

இளம்பெண்கள் கையில் விஷ பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகத்திற்குச் சென்று காதலன் ஏமாற்றிவிட்டான் அதனால் தற்கொலை செய்துகொள்கிறேன் என்று புகார் கொடுக்கச்செல்வதாக சமீபத்தில் செய்தித்தாள்களில் செய்திகள் வந்தவாறு இருக்கின்றன. கலக்டர் அலுவலகம் மாவட்ட நிர்வாகத்தை கவனிப்பதற்கா அல்லது கல்யாணத் தரகர் வேலை பார்ப்பதற்கா? சட்டங்களையும் அரசாங்கத்தையும் தங்களுக்கேற்றவாறு பயன்படுத்திக்கொள்வதில் கலியுகத்து யுவதிகள் ரொம்ப புத்திசாலிகள்.

இதுபோன்ற செய்திகளில் உடனே காதலன் மீது கற்பழிப்பு வழக்கு, தற்கொலைக்குத் தூண்டுதல் போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து காவல்துறை தங்கள் கடமையைக் கண்ணை மூடிக்கொண்டு செய்துவிடுவார்கள்.

இதுபோல ஒரு ஆணை காதலித்துவிட்டு ஒரு பெண் ஏமாற்றிவிட்டார் என்று எப்போதாவது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? அல்லது இதுவரை ஆண்கள் ஏமாற்றப்பட்டது கிடையாதா?

சட்டங்களில் ஏன் இந்த பாரபட்சம்? தவறு செய்வது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சமமாக தண்டிக்கவேண்டும். நடுநிலையற்ற சட்டங்கள் உள்ள இந்திய நாட்டில் காதலித்தாலோ அல்லது திருமணம் செய்தாலோ அந்த ஆண் தனக்குத்தானே சமாதி கட்டிக்கொள்வதாகத்தான் அது மாறும். குறிப்பாக இந்தியாவில் திருமணம் செய்தவன் அன்றே தனது நல்வாழ்க்கையை மறந்துவிடவேண்டியதுதான். ஒருதலைபட்சமான மிகவும் ஆபத்தான பெண்கள் ஆதரவு சட்டங்கள் அப்படி உங்கள் வாழ்க்கையைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டுவிடும்.

கீழுள்ள வீடியோவைப் பார்த்துவிட்டு அதற்குப் பிறகு கீழுள்ள செய்தியைப் படித்து ஒப்பிட்டுப் பாருங்கள். உண்மை புரியும்.


திருச்சி: திருச்சியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண், "காதலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என் று கோரிக்கை விடுத்ததால், போ லீஸார் "அப்செட்' ஆகியுள்ளனர்.

திருச்சி, உறையூர், சாலை ரோட்டைச் சேர்ந்த மாரிமுத்து மகள் ராஜேஸ்வரி (23). எம்.பி. ஏ., பட்டதாரி இவர், மண்ணச்சநல்லூர், பகுதியைச் சேர்ந்த குணசேகரனை காதலித்து வந்தார். இவர்களது காதலில் திடீரென விரிசல் விழுந்தது.குணா பேச மறுத்ததால், விரக்தியடைந்த ராஜேஸ்வரி சென்ற 16ம் தேதி திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். கையில் வைத்திருந்த விஷத்தைக் குடித்தார்.
அருகிலிருந்த மகளிர் போலீஸார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கலெக்டர் சவுண்டையா தலையிட்டதால், "காதலன் குணசேகரன் மீது இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியதாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும்' கண்டோன்மென்ட் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.


காதலனை கைது செய்து விசாரிக்க சென்னை செல்ல போலீஸார் முடிவு செய்தனர்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராஜேஸ்வரி, திடீரென , "காதலன் குணசேகரன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்; காதலனுடன் என்னை எப்படியாவது சேர்த்து வையுங்கள்' என்று போலீஸாருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.தகவலறிந்த போலீஸார் இவ்வழக்கு தொடர்பாக அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பியுள்ளனர்.


திருச்சி: காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாகக் கூறி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள, எம்.பி.ஏ., பட்டதாரி பெண் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி சாலை ரோட்டைச் சேர்ந்த மாரிமுத்து மகள் ராஜேஸ்வரி (23); எம்.பி.ஏ., பட்டதாரி. மண்ணச்சநல்லூரைச் சேர்ந்தவர் குணசேகரன். இருவரும் ஓராண்டாக காதலித்து வந்தனர். காதலில் விரிசல் ஏற்பட்டது.திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை ராஜேஸ்வரி வந்தார். கலெக்டர் கார் நிற்கும் இடத்துக்கு சென்று, கையில் வைத்திருந்த மனுவை தூக்கிப் பிடித்தார், இன்னொரு கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை, "மள மள'வென குடிக்கத் துவங்கினார்.அருகிலிருந்தவர்கள் சத்தம் போட்டவுடன், மகளிர் போலீசார், உடனே அவரைப் பிடித்து, விஷத்தை வெளியே எடுக்க வைத்தனர். ராஜேஸ்வரியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ராஜேஸ்வரி இரண்டு கடிதங்கள் எழுதி இருந்தார். காதலன் குணசேகரனுக்காக எழுதிய கடிதத்தில், "குணா, நான் உன்னை ஒரு சதவீதம் கூட சந்தேகப்படவில்லை உன்னுடன் வாழ ஆசைப்படுகிறேன். நீ முத்தமிட்ட உதடுகளை வேறு யாரும் முத்தமிடக் கூடாது. உன் கைப்பட்ட என் உடலில், வேறு யார் கையும் படக் கூடாது' என, உருக்கமாக எழுதப்பட்டிருந்தது.

கலெக்டருக்கு எழுதிய கடிதத்தில், "என் பெயர் ராஜேஸ்வரி. நானும், குணசேகரும் காதலித்து வந்தோம். திடீரென என்னுடன் பேசுவதை குணசேகர் குறைத்துக் கொண்டார்; பழகுவதை நிறுத்தி விட்டார். காரணம் கேட்டபோது, "அப்போது பிடித்தது பழகினேன்; இப்போது பிடிக்கவில்லை' என்கிறார். நம்பிக்கை துரோகத்துக்கு ஆளாகிய நான், மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன். இது என்னைப் போல் படித்து, ஏமாறும் பெண்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும். நான் இறந்தால், என் காதலனிடமிருந்து மூன்று லட்ச ரூபாய் வாங்கி, என் பெற்றோருக்கு கொடுக்க வேண்டும்' என, எழுதப்பட்டிருந்தது. இச்சம்பவத்தால் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

No comments: