இந்திய தகனமேடையில் இருக்கும் ஆபத்தை வெளிக்காட்டும் விதமாக ஒரு செய்தி வந்திருக்கிறது. படித்துப் பாருங்கள். நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தால் மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் விரும்புவதையெல்லாம் செய்யவேண்டும் இல்லையென்றால் வரதட்சணை வழக்கில் உங்களை குடும்பத்தோடு சிறையில் தள்ளிவிடுவார்கள்.
திண்டுக்கல் : திண்டுக்கலில் தாலி கட்டும் நேரத்தில் மணமகன் பிடிக்கவில்லை என்று மணமகள் கூறியதால், திருமணம் நின்றது. இருவரும் பிரிய மொபைல் போன் காரணமாக அமைந்தது.
திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்த மரியலூயிஸ் மகன் டோமினிக் லாரன்ஸ்(27). எலக்ட்ரீஷியன். இவருக்கும், பெரியகுளம் தாமரைக்குளத்தை சேர்ந்த ஹென்றி மகள் சூரியாவிற்கும்(20) மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. திண்டுக்கல் புனித வளனார் சர்ச்சில் நேற்று காலை 11 மணிக்கு திருமணம் நடக்க இருந்தது. அப்போது பங்கு தந்தை மணமகன் விருப்பத்தை கேட்டார். அவர் இந்த திருமணத்திற்கு சம்மதம் என்றார். மணமகள் விருப்பத்தை கேட்ட போது, அவர் இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றார். இதையடுத்து திருமணம் நின்றது. உறவினர்கள் மணமகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை சம்மதிக்க வைத்தனர்.
ஆனால் மணமகனோ, "என்னை பிடிக்கவில்லை என்று கூறிய பெண்ணுடன் நான் எப்படி குடும்பம் நடத்த முடியும். பெண் பார்க்கும் போதே பிடிக்கவில்லை என்று கூறியிருக்கலாம். நிச்சயதார்த்தம் நடந்த போதும், திருமண உடைகளை அணியும் போது கூட கூறியிருக்கலாம். இதையெல்லாம் தாண்டி திருமணம் நடக்கும் நேரத்தில் என்னை வேண்டாம் என்று கூறி அவமானப்படுத்தி விட்டார்' என்றார். திருமணம் நின்று போனதால் திருமணத்திற்கான செலவுத் தொகையை தருமாறு மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரிடம் கேட்டனர். இரு வீட்டார் உறவினர்களும் மாறி, மாறி ஆலோசனை நடத்தியும் முடிவு ஏற்படவில்லை. இதனையடுத்து மாப்பிள்ளை வீட்டார் திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். இருதரப்பினரையும் அழைத்து நகர் வடக்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவு ஏற்படாததால், இருதரப்பினரும் திருமணம் முடிக்காமல் பிரிந்து செல்ல விருப்பம் தெரிவித்து போலீசார் முன்னிலையில் பிரிந்து சென்றனர்.
மொபைல் போன் காரணம்:போலீசார் கூறியதாவது: மணமகன் நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் மணமகளுக்கு ஒரு மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளார். இதில் இருவரும் பேசும் போதே, திருமணம் முடிந்தவுடன் தனிக்குடித்தனம் வரவேண்டும் என்று மணமகள் வற்புறுத்தியுள்ளார். இதற்கு மணமகன் மறுத்துள்ளார். இதில், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பெண் அழைப்புக்கு வேன் அனுப்பாமல், பஸ்சில் ஏறி மணமகளை வரச் சொல்லியுள்ளனர். இதையெல்லாம் மனதில் வைத்து தான் மணமகனை பிடிக்கவில்லை என்று மணமகள் தெரிவித்துள்ளார்.திருமண செலவுத்தொகை 25 ஆயிரம் ரூபாய் தருவதாக மணமகள் வீட்டார் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரும் பிரிந்து செல்ல ஏற்பாடு செய்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
==================
இளைஞர்களே,
மேலுள்ள செய்தியில் உள்ள சம்பவம் அப்படியே தலைகீழாக நடந்திருந்து மணமகன் திருமணத்தை நிறுத்தியிருந்தால் உடனே மணமகன் மீது கற்பழிப்பு வழக்கு, வரதட்சணைக்கொடுமை என்று பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்திருப்பார்கள்.
பல இந்திய மனைவிகள் வரதட்சணை தடுப்புச்சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி கணவரையும் அவரது குடும்பத்தாரையும் மிரட்டுவதற்காகவும், பழிவாங்குவதற்காகவும், பணம் பிடுங்குவதற்காகவும் பயன்படுத்திவருகிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.
சட்டத்தில் வரதட்சணை என்றால் என்ன என்பதை தெளிவாக வரையறை செய்துவைத்திருக்கிறார்கள். ஆனால் அவற்றையெல்லாம் உதாசீனம் செய்துவிட்டு பல மனைவியர் வரதட்சணை என்பதற்கு தங்களுக்கேற்றவாறு ஒரு விளக்கத்தை வைத்துக்கொண்டு பொய்யான புகார்களை கொடுத்து வருகிறார்கள். இந்த இழிசெயலுக்குப் பல சட்டம்படித்த மாமேதைகளும், காவல் நண்பர்களும் உதவிவேறு செய்து வருகிறார்கள்.
இந்தக் கூட்டத்தினர் வைத்திருக்கும் அகராதியில் "வரதட்சணைக் கொடுமை" என்றால் கணவனால் செய்யப்படும் பின்வரும் செயல்கள் அனைத்தும் வரதட்சணைக் கொடுமை என்ற சட்டப்பிரிவின் கீழ் வருகிறது.
- வயதான மாமனார் மாமியாரை வீட்டை விட்டு விரட்ட மறுத்தல்
- தனிக்குடித்தனம் வர மறுத்தல்
- ஆடம்பரச் செலவு செய்ய மறுத்தல்
- மனைவியின் குடும்பத்திற்கு பெருந்தொகையை கொடுக்க மறுத்தல்
- கணவனின் உடன்பிறந்தோருக்கு உதவி செய்தல்
- மனைவி கள்ளக்காதலனுடன் சல்லாபம் செய்வதை கையும் ‘கலவுமாக’ பார்த்துவிடுதல்
- கள்ளக்காதலை தடுக்க முயலுதல்
- குழந்தைகளை பராமரிக்கும்படி மனைவிக்கு அறிவுரை கூறுதல்
- மனைவி கணவனிடம் தன்னுடைய குடும்பத்திற்கு பணம் வேண்டும் என்று கணவனை மிரட்டினால் கணவன் அதற்கு அடிபணிய மறுத்தல்.
இது போன்ற "வரதட்சணைகொடுமைகளை" செய்யும் ஆணாக நீங்கள் இருந்தால் தயவு செய்து இந்தியாவில் திருமணம் செய்து "அப்பாவிப் பெண்களுக்கு" வரதட்சணைக் கொடுமை செய்யாதீர்கள். வேறுநாடுகளில் நீங்கள் திருமணம் செய்துகொண்டு இந்தியப் பெண்களை வரதட்சணைக்கொடுமை இல்லாமல் நிம்மதியாக வாழவிடுங்கள்.
இந்தியாவில் திருமணம் செய்தால் மனைவியின் கட்டளைக்கு அடிபணிந்து ஆண்கள் பெற்றவர்களை தெருவில்தான் விடவேண்டும். இல்லையென்றால் மனைவி கொடுக்கும் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி சின்னாபின்னமாக வேண்டியதுதான். அதுதான் இந்திய பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் பெண்களுக்குக் கொடுக்கும் பெண்விடுதலை என்ற அதிகாரம்! அதனால் வேறுநாடுகளில் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழுங்கள்.
No comments:
Post a Comment