இந்தியாவில் திருமணம் செய்யும் இளைஞர்கள் ஒன்று பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி காவல்நிலையத்தில் குடும்பத்தோடு அலையவேண்டும். அல்லது விவாகரத்து வழக்கில் சிக்கி குடும்ப நீதிமன்றத்திற்கு நடையாய் நடக்கவேண்டும். இந்த இரண்டு இடங்களிலும் அவர்களுக்கு நீதி கிடைக்கிறதா என்பதை அனுபவப்பட்டவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆனால் ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவுடன் உங்களது வாழ்க்கைக்கு அன்றோடு முற்றுப்புள்ளி வைத்துவிடவேண்டியதுதான். அதன்பிறகு உங்களுக்கு எதிர்காலம் என்று ஒன்று இருந்தால் அது இருண்டதாகத்தான் இருக்கும். அதனால் இவற்றிலெல்லாம் சிக்காமல் இருக்க வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள்.
ஆனால் ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவுடன் உங்களது வாழ்க்கைக்கு அன்றோடு முற்றுப்புள்ளி வைத்துவிடவேண்டியதுதான். அதன்பிறகு உங்களுக்கு எதிர்காலம் என்று ஒன்று இருந்தால் அது இருண்டதாகத்தான் இருக்கும். அதனால் இவற்றிலெல்லாம் சிக்காமல் இருக்க வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள்.
சென்னையில் கூடுதலாக ஒரு குடும்ப கோர்ட்
தினமலர் ஆகஸ்ட் 20,2010
சென்னை: சென்னையில் கூடுதலாக ஒரு குடும்ப நல கோர்ட் அமைப்பதற்கான பரிந்துரையை, தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
சென்னை ஐகோர்ட் வளாகத்தில், மூன்று குடும்ப நல கோர்ட்டுகள் உள்ளன. குடும்ப நல கோர்ட்டுகளில் பெருகி வரும் வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கோர்ட்டுகள் இயங்குவதற்கு, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, சனி, ஞாயிறு கிழமைகளில் குடும்ப நல கோர்ட்டுகள் இயங்கி வருகின்றன. இதற்கு, வழக்கு தொடுப்பவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த வாரம் சென்னை வந்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அல்டமாஸ் கபீர், தல்வீர் பண்டாரி, சதாசிவம், குடும்ப நல கோர்ட்டுக்கு வந்து பார்வையிட்டனர். மற்ற மாநிலங்களிலும் விடுமுறை தினங்களில் குடும்ப நல கோர்ட்டுகள் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, நீதிபதி அல்டமாஸ் கபீர் தெரிவித்தார். சென்னையில் மேலும் ஒரு குடும்ப நல கோர்ட் அமைப்பதற்கான பரிந்துரையை, தமிழக அரசுக்கு ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் அனுப்பியிருந்தார். இதை தமிழக அரசு பரிசீலித்தது. இந்த பரிந்துரையை ஏற்பது என அரசு முடிவெடுத்துள்ளது. புதிய கோர்ட்டில் மாவட்ட நீதிபதி மற்றும் தற்காலிக ஊழியர்களை நியமிக்க, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. புதிய குடும்ப நல கோர்ட், ஐகோர்ட் வளாகத்தில் உள்ள சிவில் கோர்ட் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இயங்கும். இதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
No comments:
Post a Comment