பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Saturday, August 7, 2010

போலிஸ் ஐ.ஜி. நேற்று சொன்னார் அது இன்று நடக்கிறது

நேற்றுதான் ஐ.ஜி. சிவனாண்டி போலிஸைப்பற்றி சினிமாவில் தவறாகக் காட்டுகிறார்கள் என்று ரொம்ப வருத்தப்பட்டார். ஆனால் உண்மை என்ன என்பதை இன்றைய செய்தித்தாளில் வந்துள்ள செய்தி சொல்லிவிட்டது. என்ன செய்வது? செய்தித்தாள்களும் போலிஸைப் பற்றி தவறாக செய்தி எழுதுகிறார்களோ?


சினிமாக்காரர்களால் போலீஸ் பற்றி தவறான "இமேஜ்' : ஐ.ஜி., சிவனாண்டி ஆதங்கம்

தினமலர் ஆகஸ்ட் 06,2010
பொள்ளாச்சி : ""சினிமாக்காரர்களால் மக்களிடையே போலீஸ் பற்றி தவறான "இமேஜ்' ஏற்பட்டுள்ளது'' என, கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., சிவனாண்டி ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
லஞ்சம், மது, கள்ளக்காதல் விவகாரம் எஸ்.ஐ., ஏட்டு மூவர் "சஸ்பெண்ட்'
ஆகஸ்ட் 07,2010 தினமலர்

எழுமலை: மதுரையில் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., கள்ளக்காதலியை தாக்கிய ஏட்டு, மது போதையில் சாலையில் உருண்டு கிடந்த ஏட்டு ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

1. மதுரை மாவட்டம் எழுமலை போலீஸ் எஸ்.ஐ., சீனிவாசன். வழக்கு ஒன்றில் சிலரை கைது செய்யாமல் இருக்க, லஞ்சம் வாங்கியபோது பிடிபட்டார். கோர்ட் உத்தரவுப்படி, எஸ்.ஐ., ரிமாண்ட் செய்யப்பட்டார். அவருக்கு பக்கபலமாக இருந்து லஞ்சம் வசூலித்து கொடுத்த ஏட்டு சின்னசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

2. மேலூர் ஏட்டு பாலசுப்பிரமணியன். இவர் நேற்று முன்தினம் பணியின் போது, பட்டப்பகலில் மது போதையில் சாலையில் உருண்டு கிடந்தார். அதிர்ச்சியடைந்த மக்கள் போலீஸ் ஸ்டேஷனில் தகவல் கொடுத்தனர். அவரை அப்புறப்படுத்திய போலீசார், ஏட்டு போதையில் இருந்தது குறித்து எஸ்.பி., மனோகருக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

3. சாப்டூர் ஏட்டு ரவி. இவர், கள்ளக்காதலியை அடித்து, உதைத்தாக வரப்பட்ட புகார் தொடர்பாக தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

எஸ்.ஐ., சீனிவாசன், ஏட்டுகள் பாலசுப்பிரமணியன், ரவி, சின்னசாமி ஆகியோர் மீதான புகார்கள் தொடர்பாக எஸ்.பி., மனோகர் விசாரணை நடத்தினார். அவரது பரிந்துரைப்படி, சீனிவாசன், பாலசுப்பிரமணியன், ரவி, சின்னசாமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்தும், பணிக்கு சரியாக வராத ஒத்தக்கடை சிறப்பு எஸ்.ஐ., சுப்பிரமணியன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தும், டி.ஐ.ஜி., சந்தீப்மித்தல் உத்தரவிட்டார்.


காரில் கஞ்சா கடத்தியதாக பொய் வழக்கு போட்ட இன்ஸ்பெக்டர், ஏட்டு கைது
ஆகஸ்ட் 07,2010 தினமலர்
(இதுபோன்ற கதையைத்தான் கற்றது தமிழ், எம்.ஏ. என்ற திரைப்படத்தில் காட்டியிருக்கிறார்கள்)

தூத்துக்குடி: காரில் கஞ்சா கடத்தியதாக கேரளாவைச் சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்கு போட்ட தூத்துக்குடி இன்ஸ்பெக்டர், ஏட்டுவை சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று கைது செய்தனர்.

தூத்துக்குடியில், நெல்லை பை-பாஸ் ரோட்டில், 2006 பிப்ரவரி 10ம் தேதியன்று, எஸ்.ஐ., ராஜமாணிக்கம் தலைமையில் போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்பு பிரிவு போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக காரில் வந்த கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அனு மோகன், அஜய்குமார், அருண் ஆகியோரை விசாரித்தனர். அப்போது, காரில் 24 கிலோ கஞ்சா கடத்தியதாக அவர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர். தங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக அனுமோகன், மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவுப்படி, இவ்வழக்கு, தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு ஆக., 24, 2006 அன்று மாற்றப்பட்டது. மேல்விசாரணையில், அனுமோகன் உள்ளிட்ட மூவர் மீது போடப்பட்ட கஞ்சா கடத்தல் வழக்கு, பொய் வழக்கு என உறுதியானது.

இதையடுத்து, பொய் வழக்கு போட்டதாக வழக்கு விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் எஸ்.ஐ., ராஜமாணிக்கம், ஏட்டு ஸ்டீபன் லூயிஸ் செல்வராஜ் உள்ளிட்ட போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்பு பிரிவைச் சேர்ந்த நால்வர் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உடனடியாக, அந்த நால்வரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இன்ஸ்பெக்டர், ஏட்டு கைது: இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி.,(திருச்சி) பரமேஸ்வரன் தலைமையிலான போலீசார், பொய் வழக்கு போட்ட இன்ஸ்பெக்டர் காந்தி(48), ஏட்டு ஸ்டீபன் லூயிஸ் செல்வராஜ்(49) ஆகியோரை நேற்று கைது செய்தனர். பின்னர், கோவில்பட்டி கோர்ட்டில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கில் தலைமறைவாகவுள்ள எஸ்.ஐ., உள்ளிட்ட இருவரை தேடி வருகின்றனர்.

=================

இளைஞர்களே,

மேலுள்ள செய்திகள் உங்களுக்கு ஒரு பாடம். பொய் வரதட்சணைப் புகார் கிடைத்தால் உங்கள் நண்பர்களுக்கு சுடச்சுட திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா சாப்பிடுவதுபோல. அப்படியே கவ்விப்பிடித்து பொய்யான கதைக்கு ஒரு FIR எழுதிவிடுவார்கள். ஏனென்றால் திருடர்களையும், ரௌடிகளையும், கொலைகாரர்களையும் தேடிப்பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதைவிட உங்களைப்போன்ற அப்பாவி இளைஞர்கள் மீது பொய் வரதட்சணை வழக்குப்போட்டு “கடமையாற்றுவது” மிகவும் எளிது.