பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Thursday, August 5, 2010

திருமண வயது இளைஞர்களுக்கு ஒரு சொல்

இளைஞர்களே,

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்து பொய் வரதட்சணை வழக்கில் சிக்கினால் நேர்வழியில் போராடி உங்களால் நீதிபெற முடியுமா என்று சிந்திக்க சில தகவல்கள். பின்வரும் செய்திகளைப் படித்துகொள்ளுங்கள். பிறகு பொய்வழக்கில் சிக்கினால் உங்களால் தப்பமுடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

பொய் வரதட்சணை வழக்கில் நீங்கள் சிக்கியவுடன் நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய இரு முக்கியமான துறைகள்தான் காவல்துறையும், நீதித்துறையும். அதிலும் குறிப்பாக போலிஸ் S.I.தான் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, பிறகு குற்றப்பத்திரிக்கை என்ற ஒரு கற்பனைக் கதையைத் தயார் செய்து நீதிமன்றத்திற்கு அனுப்புவார். பிறகு கீழ்நிலை நீதிமன்றம்தான் (Magistrate Court) உங்களது வழக்கை 5 முதல் 10 ஆண்டுகள்வரை இழுத்துக் கொண்டிருக்கும். இந்த இரண்டு இடங்களும் எப்படி இருக்கிறது என்பதற்கு ஒரு சிறு உதாரணம்தான் கீழுள்ள செய்திகள்.


பெரியகுளம் சப்-கோர்ட் : நீதிபதி "சஸ்பெண்ட்'
ஆகஸ்ட் 05,2010 தினமலர்

பெரியகுளம் : பெரியகுளம் சப்-கோர்ட் நீதிபதியாக பணிபுரிந்த மோகன் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மாவட்ட நீதிபதி சிவானந்த ஜோதி வழங்கினார். தேனி மாவட்டம் பெரியகுளம் சப்-கோர்ட் நீதிபதி மோகன், முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் குற்றவியல் நடுவராக பணியாற்றியுள்ளார். அங்கு கூறப்பட்ட புகார்களின் அடிப்படையில் சென்னை ஐகோர்ட் விசாரித்து வந்தது. இந்நிலையில், நிர்வாக நடவடிக்கையாக அவரை சஸ்பெண்ட் செய்து சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் விமலா உத்தரவிட்டார். மாவட்ட முதன்மை நீதிபதி சிவானந்த ஜோதி மூலம் இதற்கான உத்தரவு மோகனுக்கு நேரில் வழங்கப்பட்டது. நீதிபதி மோகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், பெரியகுளம் சப்-கோர்ட் நீதிபதி பொறுப்பை தேனி சப்-கோர்ட் நீதிபதி முத்து சாரதா கவனிக்கவுள்ளார்.


"Transparency International, in its Global Corruption Report 2007 has revealed recently that an amount of Rs 2,630 crores was paid in bribes to the lower judiciary in India during 2006! " - Report from Tamilnadu police journal "Criminal Investigation Review. 2007. Volume V (IV)


ரௌடிக்கு மாவட்ட நீதிபதி பதவி: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
19 Jul 2010 தினமணி

புது தில்லி, ஜூலை 18: போலீஸ் பதிவேட்டில் ரௌடிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்ற நிர்வாகத்தை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.


Indore absconder worked as judge in same city — till past caught up with him

Indian Express Fri May 21 2010

Bhopal : A man who was declared an absconder by a court in Indore worked as a judge in a superior court in the same city for years before his past caught up with him.================


ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.,க்கு...சிறை
ஆகஸ்ட் 05,2010 தினமலர்


மாஜி ராணுவ வீரரிடம் லஞ்சம் வாங்கி, கையும் களவுமாக சிக்கிக் கொண்ட திருமுல்லைவாயல் எஸ்.ஐ., ஸ்டான்லி ஜோன்சிடம், பைக்கில் வைத்துள்ள பணத்தை எடுக்குமாறு கேட்கின்றனர் லஞ்ச ஒழிப்பு போலீசார்.(உள் படம் ) எஸ்.ஐ., ஸ்டான்லி ஜோன்ஸ்.


திருமுல்லைவாயல் : மாஜி ராணுவ வீரரிடம் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கி, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய, திருமுல்லைவாயல் எஸ்.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். திருமுல்லைவாயல், வெங்கடேசன் தெருவைச் சேர்ந்தவர் துரைசாமி. முன்னாள் ராணுவ வீரர். தற்போது சென்னை ஐ.சி.எப்.,ல் பணிபுரிகிறார். இவரது மனைவி தாமஸ் மேரி. இவரது வீட்டிற்கு எதிரில் உள்ள வீட்டில், வடிவேல் என்பவர், தனது மனைவி சத்யாவுடன் வசிக்கிறார். கடந்த 28ம் தேதி, தாமஸ் மேரி, தனது வீட்டின் மாடியில் தேங்கிய மழைநீரை கீழே தள்ளி விட்டார். மழைநீர் வடிவேல் வீட்டின் முன்பாக தேங்கியது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது தொடர்பாக, வடிவேலு, திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். எஸ்.ஐ., ஸ்டான்லி ஜோன்ஸ், துரைசாமியை அழைத்து விசாரித்தார். தான் ஒரு மாஜி ராணுவ வீரர் என்று கூறியும், அதை கண்டுகொள்ளாத எஸ்.ஐ., அவரது ஆடையை அவிழ்த்து, ஜட்டியுடன் ஸ்டேஷனில் அமர வைத்தார். மேலும், பெரிய வழக்கு பதியாமல் இருக்க 10 ஆயிரம் லஞ்சம் கேட்டு, மிரட்டினார். இதுகுறித்து துரைசாமி, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணியளவில், துரைசாமி, திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்திற்கு சென்று, ஸ்டான்லி ஜோன்சிடம் பணம் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார். அந்த பணத்தை வெளியில் நிற்கும் தனது பைக்கின் டேங்க் கவரில் வைக்குமாறு எஸ்.ஐ., கூறினார். அவர் கூறியபடி, போலீஸ் நிலையத்திற்கு வெளியில் இருந்த பைக்கில் 10 ஆயிரம் ரூபாயை வைத்தார். சிறிது நேரம் கழித்து டேங்க் கவரில் வைக்கப்பட்ட பணத்தை எடுக்க எஸ்.ஐ., ஸ்டான்லி ஜோன்ஸ் வந்தபோது, அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி., பொன்னுசாமி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், நேற்று காலை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் எஸ்.ஐ., புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இனி இந்தியாவில் திருமணம் செய்து பொய்வரதட்சணை வழக்கில் சிக்கினால் உங்களது வாழ்க்கை என்னவாகும் என்று யோசித்துக் கொள்ளுங்கள்.

இப்போதெல்லாம் படிப்பறிவில்லாமல் சிறு திருட்டுக்கள் செய்பவர்களைப் பற்றிய செய்திகள் வருவதில்லை. அதற்குப்பதிலாக போலிஸ் மற்றும் நீதிபதிகள் பற்றிய செய்திகள்தான் வந்துகொண்டிருக்கின்றன! 2020 ஐ நோக்கி செல்வதற்கான அடையாளம் இதுதானோ? இதுபோன்ற சூழ்நிலையில் தவறான திருமண சட்டங்கள் உலவிக்கொண்டிருக்கும் இந்தியாவில் நீங்கள் திருமணம் செய்வது எவ்வளவு ஆபத்தானது என்று சிந்தியுங்கள்.

No comments: