பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Wednesday, August 11, 2010

இளைஞர்களுக்காக இளைய தளபதி விஜய் கேட்கின்ற கேள்வி

இந்தியாவில் பொய்வழக்குகள் என்பது மிகவும் சாதாரண விஷயமாகிவிட்டது. குறிப்பாக பொய் வரதட்சணை வழக்குகள் மிகவும் சாதாரணமாக போடப்படுகின்றன. யாரையாவது பிடிக்கவில்லையென்றால் இந்த பொய் வரதட்சணை வழக்குகள் போட்டு அவர்கள் வாழ்வை சீரழித்துவிடலாம். அது மிகவும் எளிது. மற்ற வழக்குகள் போடுவதற்கு தகுந்த ஆதாரங்கள் வேண்டும். ஆனால் வரதட்சணை வழக்கிற்கு மட்டும் எந்தவித ஆதாரமும் தேவையில்லை. அதனால்தான் பல பெண்கள் தங்களது கணவனை தனது வழிக்குக் கொண்டுவர கணவன் மற்றும் அவனது குடும்பத்திற்கெதிராக இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்திவருகிறார்கள். இந்த ஆயுதத்தை எந்தவித கட்டுப்பாடும் இன்றி “சப்ளை” செய்வது அரசாங்கம்தான். வழக்கின் முடிவில் இது பொய்யான வரதட்சணை வழக்கு என்று தெரிந்தாலும் பொய் வழக்குப்போட்ட பெண்ணை தண்டிக்க சட்டங்கள் கிடையாது. எந்த நீதிபதிக்கும் இதுபோன்ற பொய் வழக்குப்போடும் பெண்ணை தண்டிக்க இதுவரை மனம் வரவில்லை.

இதுபோன்று தவறாக இயற்றப்பட்டுள்ள வரதட்சணை சட்டங்களால் லாபம் அடைபவர்களில் மிகவும் முக்கியமானவர்கள்:
1. காவல்துறை
2. நீதித்துறை
3. வழக்கறிஞர்கள்
4. பெண்களுக்கு குரல் கொடுக்கிறோம் என்று சொல்லும் கூட்டம்.

ஆனால் இந்த தவறான சட்டங்களால் இளைஞர்களும், அவர்களது குடும்பத்திலுள்ள வயதான பெற்றோர்களும், முதியவர்களும், குழந்தைகளும், சகோதரிகளும் சொல்ல முடியாத அளவிற்கு துன்புறுத்தப்படுகிறார்கள். பல திறமையான இளைஞர்கள் தங்களது எதிர்கால நல்வாழ்வையே இழந்துவிடுகிறார்கள்.

பொய் வரதட்சணை வழக்குப்போடுவது காவல், நீதித்துறைகளுக்கு மிகவும் எளிதான காரியம். ஒரு பெண் பொய்யான புகார் கொடுத்தால் போலிஸ் அதை பதிவு செய்து அப்பாவி இளைஞர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவார்கள். அங்குள்ள நீதிபதி கண்ணை மூடிக்கொண்டு 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிடுவார். பிறகு வழக்கு 5-10 ஆண்டுகள் நடைபெறும். கடைசியில் இளைஞர் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்படுவார். ஆனால், தவறான பொய் வழக்கால் அந்த இளைஞர் தனது வாழ்க்கையில் அடைந்த நஷ்டங்களுக்கும், அவமானங்களுக்கும் யார் பதில் சொல்வார்கள்?

இதைத்தான் “சுறா” என்ற திரைப்படத்தில் “ இளைய தளபதி”திரு. விஜய் அவர்கள் அனல் பறக்கக் கேள்வியாகக் கேட்டிருக்கிறார். இளைஞர்களே, இது ஏதோ திரைப்படத்தில் வரும் வசனம் என்று நினைத்துவிடாதீர்கள். இது இந்தியாவில் திருமணம் செய்து பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி வாழ்வை தொலைத்துக் கொண்டிருக்கும்கும் ஒவ்வொரு இளைஞனுக்காகவும் கேட்கப்பட்டிருக்கும் கேள்வி. இதற்கு பதில் சொல்ல யாரும் முன்வரமாட்டார்கள். மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசாங்கம் கூட மௌனமாகத்தான் இருக்கிறது. அதனால் இதுபோன்ற இன்னல்களை அனுபவிக்காமல் இருக்க வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள்.
இளைஞர்களே, உங்களின் மீது போடப்படும் பொய் வழக்கைப் பற்றி யாரும் கவலைப் படமாட்டார்கள். இந்தப் பொய் வழக்கால் உங்கள் எதிர்காலம் பாதிக்கப்படுமே என்று யாராவது யோசிப்பார்களா? அதற்கு மாறாக நீங்கள் வெளிநாட்டில் பணிபுரிபவராக இருந்தால் ஒரு பொய் வழக்கிற்காக கொஞ்சமும் தயங்காமல் உங்களை “சர்வதேசக் குற்றவாளி” என்று பிரகடனம் செய்துவிடுவார்கள். ஆனால் கடைசியில் பல ஆண்டுகள் கழித்து நீங்கள் நிரபராதி என்று தெரிந்தவுடன் உங்களுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பைப் பற்றி அரசாங்கமோ, காவல்துறையோ, நீதித்துறையோ கொஞ்சமாவது கவலைப்படுவார்களா? சிந்தியுங்கள். இழந்த காலத்தையும் வாழ்நாளையும் யாராலும் திரும்பக் கொடுக்கமுடியாது. ஆனால் நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்து பொய் வரதட்சணை வழக்கில் சிக்கினால் உங்களது இந்தப் பிறவியின் வாழ்க்கையையே கொஞ்சமும் சிந்திக்காமல் அற்பத்தனமாக சிதைத்துவிடுவார்கள். அதுதான் இந்தியத் திருமண தகனமேடையில் உங்களுக்குக் காத்திருக்கும் பெரிய ஆபத்து.
1 comment:

498ஏ அப்பாவி said...

இது​போல் ​பொய்வழக்குகளில் லட்சக்கணக்கில் ​பெண்கள் மட்டும் விசார​னை ​கைதிகளாக்கி விடுத​லை ​செய்யப்பட்டுள்ளனர்...


​பெண்களுக்ககாக இயற்றப்பட்ட இந்த சட்டத்தில் அதிகம் ​பொய்வழக்கில் "உள்​ளே ​வெளிய" ஆட்டத்தில் பாதிக்கபடுவது ​பெண்கள் தான்


இ​தை ​கேட்ட ஒரு நாதியுமில்​லை,

இந்த ​கொடு​மைகள் எல்லாம் ​தெரிந்தும் மனித உரி​மை அ​​ணையமும் ​​பெண்கள் நல வாரியமும் உ​மையாய் இருக்கின்றது - பாவம் அவர்கள் ஃபப்பில் கூத்தடிக்கும் புரட்சிப்​பெண்களுக்கு ​போர்​கோடி துக்க​வே ​நேரம் ​போதவில்​லை