பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Sunday, August 8, 2010

வெளிநாட்டுவாழ் இளைஞர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

சர்வ வல்லமை பொருந்திய நாடாக முன்னேற்றும் பணியில் தங்களது பங்களிப்பைத் தந்திருக்கும் அரசு ஊழியர்கள் பற்றிய செய்திதான் கீழே தரப்பட்டிருக்கிறது. இவர்கள் இப்படி இருக்க வெளிநாடுகளில் தங்களது திறமை மூலம் வேலை தேடிச்சென்று நாட்டிற்கு பெருமையையும், அன்னியச் செலாவணி நிதியையும் தந்துகொண்டிருக்கும் இளைஞர்களுக்கு அவர்கள் இந்தியாவில் திருமணம் செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக பொய் வரதட்சணை வழக்கில் சிக்கவைக்கப்பட்டு “சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளி” என்று விருது வழங்கும் விழா ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கிறது.

பின்வரும் செய்திகளை படித்து ஒப்பு நோக்கிப் பார்த்தால் உங்களுக்கே உண்மை புரியும்.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கி இதுவரை கைதானவர்கள் 500 பேர்
ஆகஸ்ட் 07,2010 தினமலர்

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்தி வரும் அதிரடி வேட்டையில், 500க்கும் மேற்பட்ட லஞ்ச அதிகாரிகள் கையும், களவுமாக பிடிபட்டுள்ளனர். லஞ்ச அதிகாரிகளை பொறி வைத்து பிடிப்பதில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும், அரசு அலுவலகங்களில் லஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, லஞ்சம் வாங்கி சிக்குபவர்களின் தகவல்களை, புகைப்படத்துடன் இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

"லஞ்சம் கொடுப்பதும் குற்றம்; வாங்குவதும் குற்றம்' என, அனைத்து அரசு அலுவலகங்களிலும் எழுதப்பட்டிருக்கும். ஆனால், லஞ்சம் இல்லாமல் அரசு அலுவலகங்களில் எந்தவொரு வேலையும் நடக்காது என்ற நிலை உருவாகிவிட்டது. இந்த வேலையை முடிக்க இவ்வளவு பணம் என்று அறிவிப்பு பட்டியல் வைக்காத குறையாக லஞ்சம் தாண்டவமாடுகிறது. அரசு அலுவலகங்களில் சாதாரண உதவியாளர் முதல் தலைமையிட உயர் அதிகாரிகள் வரை லஞ்சம் வாங்காதவர்களே இல்லை என்ற நிலை காணப்படுகிறது. இந்நிலையில், அரசு அலுவலகங்களில் தலை தூக்கியுள்ள லஞ்ச, லாவண்யங்களை ஒடுக்க தமிழக அரசு களம் இறங்கியுள்ளது. இது தொடர்பான அரசின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தீவிரமாக களமிறங்கினர்.


இதன் பயனாக தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், இதுவரை லஞ்சத்தில் புரண்டு வந்த சாதாரண ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை 500க்கும் மேற்பட்டோர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.கடந்த 2007-08ம் ஆண்டில் 127 பேர், 2006-07ம் ஆண்டில் 131 பேர், 2005-06ம் ஆண்டில் 136 பேர் என சராசரியாக 100 முதல் 150 பேர் வரை போலீஸ் பிடியில் கையும், களவுமாக சிக்கியுள்ளனர். இந்த வகையில், கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2009ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பல்வேறு புகார்களின் அடிப்படையில், 312 வழக்குகளில் அதிகாரிகள் லஞ்சம் பெறும் போது, போலீசார் பொறி வைத்து பிடித்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் ஒப்பிடும் போது இது மூன்று மடங்கு அதிகம். லஞ்சத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் லஞ்ச வழக்கில் சிக்கும் அதிகாரிகளின் தகவல்களை புகைப்படத்துடன், இணையதளத்தில் வெளியிட தற்போது அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 5,186 லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 1,527 வழக்குகளில் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறும் போது, கையும், களவுமாக போலீசார் கைது செய்துள்ளனர். இதைத் தவிர 1,028 வழக்குகள் ஆரம்ப நிலையிலும், 1,739 வழக்குகள் விரிவான விசாரணையிலும், 892 வழக்குகள் ரெகுலராகவும் நடந்து வருகின்றன.
கடந்த 2008ம் ஆண்டு மார்ச் வரை எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், கோர்ட் நிலுவையில் இருந்த 877 லஞ்ச வழக்குகளில், 1,866 அரசு அலுவலர்களிடமும், தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருந்த 385 வழக்குகளில், 1,182 பேரிடமும், துறை ரீதியாக நிலுவையில் உள்ள 4,662 வழக்குகளில், 3,546 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் தற்போதும் விசாரணை அளவிலேயே உள்ளன.

தண்டனை நிச்சயம் :லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் சிக்குவார்களே தவிர, அவர்கள் மீது நடவடிக்கை இருக்காது என்ற கருத்து தற்போது நிலவுகிறது. ஆனால், லஞ்ச அதிகாரிகளுக்கு தண்டனை நிச்சயம் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். "தமிழகம் முழுவதும், 2008-09 ஆண்டில், பல்வேறு கோர்ட்டுகளில் நடந்து வரும் பல்வேறு லஞ்ச வழக்குகளில் 40 வழக்குகளுக்கு இதுவரை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பலருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.கோவை மாநகராட்சி ஜூனியர் இன்ஜினியர் ஒருவருக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 62 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பல வழக்குகளில் குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது' என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


இந்தியாவில் திருமணம் செய்யும் வெளிநாட்டுவாழ் இந்திய இளைஞர்களுக்கு எதிராக "ரெட் கார்னர் நோட்டீஸ்'’

தினமலர் 19 ஜூலை 2010

புதுடில்லி : திருமணம் செய்து ஏமாற்றி விட்டு, மனைவியை அனாதையாக விட்டு விட்டு, வெளிநாடுகளுக்கு ஓடிய 600 கணவர்களுக்கு எதிராக சி.பி.ஐ., சார்பில், "ரெட் கார்னர் நோட்டீஸ்' வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் படித்து, நல்ல வேலையில் இருப்பவர்கள்.

போதை மருத்து கடத்துவோர், பயங்கரவாதிகள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் ஆகியோருக்கு எதிராகவே வழக்கமாக சி.பி.ஐ., சார்பில் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்படும். ஒருவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டால், இதுகுறித்த தகவல் இன்டர்போல் போலீசாருக்கு தெரிவிக்கப்படும். குற்றவாளி பதுங்கியிருப்பதாக கருதப்படும் நாட்டில், அவரை தேடும் பணி முடுக்கி விடப்படும். மேலும், விமான நிலையத்தில் உள்ள குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படும். சம்பந்தபட்ட நபர், விமான நிலையத்தில் தனது பாஸ்போர்ட்டை சோதனைக்காக கொடுக்கும்போது, அவருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது அம்பலமாகி விடும். உடனடியாக, அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்து, அந்த நபரை அவர்களிடம் ஒப்படைப்பர். பயங்கரவாதிகள், போதை மருந்து கடத்துவோர் மட்டுமல்லாமல், இந்தியாவுக்கு வந்து திருமணம் செய்து விட்டு, மனைவியை ஏமாற்றி விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி பதுங்கி விடும் கணவர்களும் தற்போது இந்த பட்டியலில் சேர்ந்துள்ளனர். இதுபோல் 600 பேருக்கு எதிராக சி.பி.ஐ., சார்பில் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.

சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது
: வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் திருமணம் செய்வதற்காக இந்தியா வருகின்றனர். இவர்களில் சிலர், திருமணம் முடிந்தவுடன், மனைவியை ஏமாற்றி இங்கேயே விட்டு விட்டு, அவர்கள் மட்டும் வெளிநாடுகளில் பதுங்கி விடுகின்றனர். சரியாக விசாரிக்காமல், வெளிநாட்டு மாப்பிள்ளை என்பதற்காக அவசரப்பட்டு திருமணம் முடித்தவர்கள், இதுபோல் அதிகமாக ஏமாறுகின்றனர். குறிப்பிட்ட அந்த நபர், எந்த நாட்டில், என்ன வேலையில் இருக்கிறார் என்பது கூட இவர்களுக்கு தெரிவது இல்லை. ஒட்டுமொத்தமாக ரெட் கார்னர் நோட்டீஸ் விடப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர், இதுபோல் திருமணம் செய்து விட்டு ஓடியவர்களாக உள்ளனர். இவ்வாறு ஏமாற்றி விட்டு ஓடுவோரில் பெரும்பாலானோர் படித்தவர்களாகவும், நல்ல வேலையில் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர் என்பது தான், அதிர்ச்சியான தகவல். இவ்வாறு திருமணம் செய்து விட்டு, ஓடுவோர் மீதும் வரதட்சணை கொடுமைக்கு சமமான வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.

====================

பல இளைஞர்கள் கடின உழைப்பின் மூலம் வாழ்வில் முன்னேறி தங்களின் திறமையால் வெளிநாடுகளில் வேலை தேடிச் சென்று வாழ்வில் முன்னேறிக் கொண்டிருக்கும்போது இந்தியாவில் திருமணம் செய்வதால் அவர்களின் வாழ்க்கை இந்திய சட்டத்தின்மூலம் எப்படித் தலைகீழாக கவிழ்க்கப்படுகிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

வெளிநாட்டு ஆடம்பர வாழ்க்கை முறை, தட்டிக்கேட்க ஆளில்லாமல் தன்னிஷ்டப்படி வாழும் முறை, விஸா, வெளிநாட்டுக் குடியுரிமை, செல்வச் செழிப்பு என்ற மோகத்தில் பல மேல்தட்டுவர்க்கப் பெண்கள் வெளிநாட்டில் வாழும் இளைஞர்களைக் குறிவைத்து திருமண இணைப்புத் தளங்கள் மூலம் தூண்டில் போட்டு பிடிக்கிறார்கள். சில பெண்ணின் பெற்றோர்களும் இதுபோன்ற செயல்களில் கூட்டணி அமைத்து செயல்படுகிறார்கள். பிறகு தங்களது கணக்கு சரியாக வேலை செய்யாதபோது இந்தியாவிற்கு ஓடிவந்து கணவன் மீது வரதட்சணை வழக்குப் போட்டு சர்வதேச குற்றவாளியாக அறிவித்து விடுகிறார்கள்.

மேலே செய்தியில் வந்துள்ளது போல ஊழல் பெருச்சாளிகள் நிறைந்த நிர்வாகத்தில் அப்பாவி கணவனை “சர்வதேச குற்றவாளி” என்று பிரகடனம் செய்வது என்ன அவ்வளவு கஷ்டமான காரியமாகவா இருக்கும்?

இளைஞர்களே, சிந்தியுங்கள். உங்கள் திருமணம் எங்கு நடக்கவேண்டும் என்று தெளிவாக முடிவெடுங்கள்.

வெளிநாட்டு அரசுகள் விழித்துக்கொண்டுவிட்டன. இளைஞர்களே நீங்கள் எப்போது விழித்துக்கொள்ளப்போகிறீர்கள்?


Foreign Affairs and International Trade Canada

Travel Report
India

8. LAWS AND CUSTOMS

Growing numbers of Canadian citizens have been caught up in marital fraud and dowry abuse in India. Most cases involve misuse of India’s Dowry Prohibition Act. This law, which was enacted to protect women and makes demanding a dowry a crime, is sometimes used to blackmail men through false allegations of dowry extortion. Individuals facing charges may be forced to remain in India until their cases have been settled or pay off their spouses in exchange for the dismissal of charges. To avoid such problems, you are advised to register your marriage in India along with a joint declaration of gifts exchanged, as well as consider a prenuptial agreement.

No comments: