பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Wednesday, August 25, 2010

மூளையைப் பயன்படுத்தாத காவல்துறை!

பணம் கிடைக்கிறது என்பதற்காக இந்தியாவில் பல அப்பாவிக் குடும்பங்கள் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கவைக்கப்பட்டு காவல்துறையாலும் நீதித்துறையாலும் பாந்தாடப்படுகிறார்கள் என்பது உலகறிந்த மானக்கேடு என்று அனைவருக்கும் தெரியும்.

இதை மீண்டும் ஒருமுறை கர்நாடக நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. கொடுக்கப்படும் புகாரில் கொஞ்சமாவது உண்மை இருக்கிறதா என்றுகூட பார்க்கமாட்டார்கள். அப்படியே புகார் பதிவு செய்யப்பட்டாலும் தங்களுக்கு மூளை என்று ஒன்று இருக்கிறது என்பதையே மறந்துவிட்டு எந்த ஒரு விசாரணையும் செய்யாமல் அப்படியே பள்ளிக்கூட ஞாபகத்தில் முதல் தகவல் அறிக்கையில் உள்ளதை அப்படியே “காப்பி” அடித்து இதுதான் விசாரணை அறிக்கை என்று நீதிமன்றத்திற்கு அனுப்பிவிடுவார்கள். இதைத்தான் கீழுள்ள செய்தியில் நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. கீழ்நிலை நீதிமன்றத்தில் இருக்கும் அதிபுத்திசாலி இந்த காகிதங்களை எடுத்து படித்துக்கூட பார்க்கமாட்டார். உடனே அனைவருக்கும் சம்மன் அனுப்பி வழக்கை ஆரம்பித்து பல ஆண்டுகள் இழுத்துக்கொண்டிருப்பார்.

இதில் பணம் சம்பாதிப்பது காவல்துறை, நீதித்துறை, மற்றும் வழக்கறிஞர்கள். வாழ்க்கையைத் தொலைப்பது உங்களைப் போன்ற பல அப்பாவிகள். கடைசியில் இதுபோன்ற அப்பாவிகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது ஆண்டவனுக்கு மட்டும்தான் தெரியும். அதனால் இளைஞர்களே, இந்தியாவில் திருமணம் செய்து படுகுழியில் குடும்பத்தோடு வீழ்ந்து உங்களது எதிர்காலத்தை அழித்துக்கொள்ளாதீர்கள். வெளிநாடுகளுக்குச் சென்று உங்களது குடும்பமானத்தையும் உயிரையும் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

HC accepts that Dowry Act is being misused
Indian Express Last Updated : 22 Aug 2010

BANGALORE: The High Court has strongly condemned the investigating officers for blindly registering cases of dowry harassment, without looking into the provisions under section 498A of Indian Penal Code (IPC).

While quashing the criminal proceedings initiated against the petitioners under 498A of IPC at the court of the chief metropolitan magistrate, Bangalore, Justice Subhash B Adi observed that the police had not taken into consideration section 498A of IPC to know whether the allegation amounted to cruelty, the court observed.

To prevent unscrupulous persons from misusing the law, a scrutiny of the complaint at the inception stage is advisable, the court told the investigating officers.

"Before proceeding with the criminal complaint, the investigating officer or the court must look into the allegation to find out whether it makes out a prima facie case to proceed.

"In most of the cases, the police use 498A of IPC more for harassment rather than it's real purpose. The police must use its authority to subserve the purpose for which the provision is made instead of misusing it," the HC told the investigating officers.

It is a common feeling that irrespective of the involvement or nexus to the alleged offence, even friends and distant relatives are implicated. This happens, because of non-application of mind by the police to the contents of the complaint and the offence alleged, which results in harassment of a person who is unconnected with the alleged offence.

Scrutiny of the complaint is necessary at least to know what offence is alleged. Particularly in the case of offence under section 498A of IPC and offence connected with matrimonial disputes, due care is necessary. In some cases, without even allegation, entire family, relatives and friends are made parties, the court observed.

PO Raju, Susamma, Joman Raju and Jolly Raju, all residents of Pathanamthitta in Kerala, filed a criminal petition challenging criminal proceedings initiated against them by Yelahanka New Town police station in a dowry harassment case filed by Raju's wife Jayashree.

Jayashree had alleged that her in-laws, residing in Kerala, threatened her not to come to Kerala after her husband had left the house in Bangalore.

She alleged that her in-laws instigated her husband to leave her company. Jayashree filed a complaint in jurisdictional police station against her in-laws. However, the petitioner's counsel stated that the allegations in the complaint did not constitute cruelty within the meaning of section 498A of IPC. The court upheld the contention and quashed the proceedings.

=======================

எல்லாம் நன்றாக பேசியிருக்கும் நீதிமன்றம் கடமையை ஒழுங்காகச் செய்யாத காவல் அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? அல்லது பொய் வழக்குப்போட்ட பெண்ணிற்கு என்ன தண்டனை கொடுத்தது? பல காலமாக பல நீதிமன்றங்கள் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டுதான் இருக்கின்றன.

இளைஞர்களே,

இந்தியாவில் திருமணம் என்பது உங்களைப் போன்ற இளைஞர்களின் எதிர்காலத்தை வைத்து காவல்துறையும், நீதித்துறையும், அரசாங்கமும் விளையாடும் ஒரு சூதாட்டம். இடையிடையே இதுபோன்ற தீர்ப்பு சொல்வதுபோல உங்களுக்கு வாயில் “லாலிபாப்” கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.

இந்த சூதாட்டத்தில் யார் தோற்றாலும், வெற்றி பெற்றாலும் காவல்துறை, நீதித்துறை, அரசாங்கம் இந்த மூவரில் ஒருவருக்கு லாபம்தான். ஆனால் யார் வெற்றி பெற்றாலும் அல்லது தோற்றாலும் தவறாமல் தோற்றுக்கொண்டிருப்பது நீங்களும் உங்களது வாழ்க்கையும்தான். அதனால் இதுபோன்ற சூதாட்டக் களத்தில் உங்களது வாழ்வை தொலைத்துவிடாமல் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொண்டு வெற்றிப் பாதையில் செல்லுங்கள்.
No comments: