பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Sunday, August 22, 2010

படித்தவர்கள் இந்தியாவில் நாளை செய்யப்போவது இதுதானோ?

காஷ்மீரில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் நன்கு படித்த இளைஞர்கள் என்று இன்றைய செய்தித்தாளில் செய்தி வந்துள்ளது.



ஜம்மு : காஷ்மீரில், வன்முறையில் ஈடுபடும் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள் மற்றும் படித்த, நல்ல வேலையில் உள்ள இளைஞர்கள் என, அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களில் பெரும்பாலானோர், கல்லூரி மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என, ஒரு சர்வேயில் தெரிய வந்துள்ளது. இவர்களில் பலர், எந்த அரசியல் பின்னணியும் இல்லாதவர்கள்.

காஷ்மீரில் நடந்த 80 முதல் 90 கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்ட பல்கலைக் கழக ஆசிரியர் ரியாஸ் கூறியதாவது: "" சவூதி அரேபியா மற்றும் மத்திய ஆசியாவில் கல்வி பயின்றேன். சில ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீநகர் திரும்பினேன். அப்போது எனக்கு 17 வயது. அப்போது நான் மாயமான உலகில் வாழ்வது போன்று உணர்ந்தேன். நாங்கள் துப்பாக்கி முனையில் வாழ்வதை தெரிந்து கொண்டேன். எங்களை அடிக்கடி சந்தேக கண்ணோடு சோதனை நடத்தினர். இது என்னை அதிர்ச்சியடைய வைத்தது. எங்களுக்கு சுதந்திரம் இல்லை,'' என்று கூறினார்.

================

இவர்கள் படித்தது வன்முறை செய்வதற்காகவா? கண்டிப்பாக இல்லை. இதுபோலத்தான் இந்தியாவில் பொய் வரதட்சணை வழக்குகள் மூலம் நன்கு படித்த டாக்டர்கள், இன்ஜினியர்கள், தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள் போன்றவர்களை காவல்துறை, நீதித்துறை, அரசாங்கம் போன்றவை கூட்டாக சேர்ந்து துன்புறுத்தி வருகின்றன. இதைப் பலமுறை உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும், ஜனாதிபதியும், தலைமை நீதிபதியும் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டிவிட்டார்கள். ஆனால் இதுவரை அரசாங்கம் இந்த அப்பாவிகளைப் பாதுகாக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடைசியில் இந்த அப்பாவி இளைஞர்களும், அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களும் அகிம்சை வழியில் அரசாங்கத்திற்கு மனுக்கள் எழுதியும், அமைதிவழிப் போராட்டங்கள் நடத்தியும் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று அரசாங்கத்திற்கு பலமுறை முறையிட்டுவிட்டார்கள். ஆனால் அதற்குப்பிறகும் அரசாங்கம் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.

இது இப்படி ஒருபுறமிருக்க மாவோக்கள், நக்சல்கள் போன்றவர்களின் காலில் விழாத குறையாக உள்துறை அமைச்சரும், பிரதமரும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்.
நன்கு படித்த புத்திசாலி இளைஞர்களை சட்ட தீவிரவாதம் என்னும் பொய் வரதட்சணை வழக்குகளிலிருந்து அரசாங்கம் காப்பாற்றத்தவறினால் அவர்களும் இப்படி காஷ்மீரத்து இளைஞர்களின் வழியைப் பின்பற்ற ஆரம்பித்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்த இளைஞர்கள் அரசாங்கத்திடம் கேட்பது தங்களுக்கும் தங்கள் குடும்பத்திலுள்ள பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு மட்டுமே. இதை அரசாங்கம் கொடுக்கத்தவறினால் இவர்கள் வேறெங்கு போவார்கள், வேறு என்ன செய்வார்கள் என்று அரசாங்கம் சிந்திக்கவேண்டும்.

வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறவேண்டும் என்று நன்கு படித்து பல்துறையிலும் முன்னேறும் இந்த திறமையான இளைஞர்கள் யாரும் தீவிரவாதத்தில் இறங்கவேண்டும் என்று தங்களது வாழ்க்கையை ஆரம்பிப்பதில்லை. இவர்கள் திசை திரும்பாமல் நேர்வழியில் செல்வதும், வேறுவழியில்லாமல் மாற்றுவழியில் செல்லப்போவதும் அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது. அரசாங்கம் படித்த இளைஞர்களை எப்படி திசை திருப்புகிறது என்று இங்கே சென்று பாருங்கள்--> வீரர்களை கோழைகளாக்கும் கோமாளிகள்


தங்கள் மீது அநியாயமாக போடப்படும் பொய்வழக்குகளை படித்த இளைஞர்கள் எத்தனை ஆண்டுகள் பொறுத்துக்கொண்டிருப்பார்கள்?







No comments: