பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Sunday, May 2, 2010

வீரர்களை கோழைகளாக்கும் கோமாளிகள்


இந்தியாவில் அகிம்சை வழியில் செல்ல நினைக்கும் அப்பாவிகள் கொலையும் செய்யும் அளவிற்கு கொடிய கோழைகளாக எப்படி சுயநலஅரசியல் கோமாளிகளால் மாற்றப்படுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள கீழுள்ள செய்திகளை கவனமாகப் படியுங்கள்.

சில காலமாக நக்ஸல் தாக்குதல் பற்றி செய்திகள் வந்தவாறு இருக்கின்றன. அதன் பின்னனியிலிருந்து மக்கள் தெரிந்து கொள்ளவேண்டிய பல விஷயங்கள் உள்ளன. நக்ஸல் பிரச்சனையின் காரணம் என்ன என்பதல்ல இந்தப்பதிவின் நோக்கம். அதைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டுமென்றால் தினமணி வெளியிட்டிருக்கும் தலையங்கச் செய்தியைப் படியுங்கள். அந்தச் செய்தியை இந்தப் பதிவின் கடைசி பாகத்தில் பார்க்கலாம்.

இனி சுயநல அரசியல் கோமாளிகள் எப்படி தீவிரவாதிகளை உருவாக்குகிறார்கள் என்று செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளின் அடிப்படையில் ஆராய்ந்துபார்ப்போம்.

* * * * * * * * * * * * * * * * * *

  • நக்ஸல்களின் வன்முறையின் மூலம் முதல் பேரழிவு தாக்குதல் ஏற்பட்டபோது அரசாங்கம் அமைதிப்பேச்சிற்கு அழைத்திருக்கிறது. மாநில அரசுகள் முதல் மத்திய அரசாங்கம் வரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு கெஞ்சியிருக்கின்றன. அதைப்பற்றிய செய்தியை கீழே பாருங்கள்.

வன்முறையை கைவிட்டால் நக்ஸலைட்டுகளுடன் பேசத் தயார்: சிதம்பரம்
வெப்துனியா புதன், 21 அக்டோபர் 2009

ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதாக நக்ஸலைட்டுகள் அறிவித்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

மக்களவை முன்னாள் அவைத் தலைவர் ரபி ரே உள்ளிட்ட பலர் நக்ஸலைட்டுகளுக்கு எதிரான துணை இராணுவப் படைகளின் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று விடுத்த அறிக்கைக்கு பதிலளித்துள்ள அமைச்சர் சிதம்பரம், ரபி ரே தலைமை வகிக்கும் அமைதிக்கான குடிமக்கள் முன்முயற்சி (
Citizen’s Initiative for Peace) அமைப்பு மாவோயிஸ்ட்டுகளுடன் பேசி, அவர்கள் மேற்கொண்டு வரும் ஆயுதப் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

“மாவோயிஸ்ட்டுகளின் ஆயுதப் போராட்டமே அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தடையாக உள்ளது. அவர்களை ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்துகின்றனர். வன்முறைப் பாதையை கைவிடுவதாக அவர்கள் அறி்க்கை வெளியிட்டால் அவர்களோடு மத்திய மாநில அரசுகள் அவர்கள் எழுப்பும் பிரச்சனைகள் எதுவாயினும் அது குறித்துப் பேசுவதற்கு தயாராகவே இருக்கிறோம
்” என்று சிதம்பரம் கூறியுள்ளார்.

* * * * * * * * * * * * * * * * * *

  • பேச்சுவார்த்தைக்கு வராமல் தொடர்ந்து நக்ஸல்கள் 76 வீரர்களை தாக்கிக்கொன்றபோது சமாதானத்திற்கு அழைத்த அரசாங்கம் அவர்களை காட்டில் ஒளிந்து தாக்கும் கோழைகள் என்று தனது இயலாமையை வெளிப்படுத்தி வெறுப்பைக் கொட்டியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் உலகில் எதைப்பற்றிவேண்டுமானாலும் பேசலாம் ஆனால் வன்முறையை மட்டும் விட்டுவிடுங்கள் என்று மன்றாடியிருக்கிறது. அதைப்பற்றிய செய்தியைக் கீழே பாருங்கள்.

வெப்துனியா ஞாயிறு, 4 ஏப்ரல் 2010
லால்கார் பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மாவோயிஸ்ட்களுடன் பேச்சு வார்த்தை நடத்த இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.

காடுகளில் ஒளிந்து கொண்டு போலீஸ் அரஜாகங்களுக்கு எதிரான மக்கள் இயக்கத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வரும் மாவோயிஸ்ட்கள் ஒரு கோழை என்று கூறினார் சிதம்பரம். நக்சல்கள் கோழைகள், அவர்கள் ஏன் காடுகளில் ஒளிந்து கொள்ளவேண்டும். அவர்கள் உண்மையில் மக்கள் நலனிலும் வளர்ச்சியிலும் நம்பிக்கை வைத்திருந்தால் பேச்சு வார்த்தைகளுக்கு சம்மதிக்கவேண்டும்.
உலகில் எதை வேண்டுமானாலும் பேசலாம் வாருங்கள் ஆனால் வன்முறையைக் கைவிட்டு விடுங்கள். என்று அழைப்பு விடுத்துள்ளார் ப.சிதம்பரம்.

* * * * * * * * * * * * * * * * * *


  • கடைசியில் இப்போது நக்ஸல்களால் நாட்டுக்கு மிகப்பெரிய சோதனை என்று என்ன செய்வதென்று வழிதெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது இந்த அரசாங்கம். அதைப்பற்றிய செய்தியையும் கீழே படியுங்கள்.

நக்ஸல்களால் நாட்டுக்கு மிகப்பெரிய சோதனை: ப.சிதம்பரம் கவலை
தினமணி 2 மே 2010

கோவை, மே 1: நக்ஸல்களின் சவாலால் இந்தியாவுக்கு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வேதனையுடன் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதளம் சார்பில் நடைபெற்ற 6 நாட்கள் பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி கோவை போத்தனூர் பி.வி.ஜி. திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.இதில் பயிற்சி பெற்ற தொண்டர்களுக்கு சான்றிதழை வழங்கி சிதம்பரம் பேசியது:

6 மாநிலங்களில் இருக்கும் நக்ஸல்களின் சவால்களால் நாட்டுக்கு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டுள்ளது.

* * * * * * * * * * * * * * * * * *
* * * * * * * * * * * * * * * * * *

மேற்கண்ட செய்திகளை வைத்துப் பார்க்கும்போது தங்களது குறிக்கோளை (அது சரியானதா அல்லது தவறானதா என்பதைப் பற்றிய ஆராய்ச்சி இங்கு செய்யவேண்டாம்) அடைய வன்முறையில் ஈடுபட்டவர்களை பலமுறை பேச்சுவார்த்தைக்கு வருமாறு கெஞ்சி அழைத்திருக்கிறது இந்த அரசாங்கம். அவர்கள் அதற்கு ஒத்துவராதபோது அவர்களை கோழைகள் என்று நிந்தனையும் செய்திருக்கிறது. கடைசியில் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்கிறது.

அதனால் அரசாங்கத்தின் கண்ணோட்டத்தில் நேர்மையாக அகிம்சைவழியில் தங்களின் நியாயமான கோரிக்கைக்குப் போராடுபவர்கள் “வீரர்கள்”. வன்முறையில் இறங்கி மறைந்திருந்து தாக்கி தங்களது கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்ள நினைப்பவர்கள் “கோழைகள்”.

இந்தக்கண்ணோட்டத்தில் பார்க்கும்போது பல ஆண்டுகளாக பல லட்சக்கணக்கான அப்பாவிப் பெண்களும், ஆண்களும் பொய் வரதட்சணை வழக்குகளால் விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டும்
பல இன்னல்களுக்கு ஆளாகியும், அவமானப்படுத்தப்பட்டு தற்கொலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த பொய் வழக்குகளால் பல இளைஞர்களும், இளம் சகோதரிகளும் தங்களது வாழ்க்கையை தொலைத்திருக்கிறார்கள், இன்னும் தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவையனைத்தும் தவறாக இயற்றப்பட்டுள்ள இந்திய வரதட்சணை தடுப்புச் சட்டங்களால் (IPC498A, Domestic Violence Act, Dowry Prohibition Act) இன்றும் நடந்துகொண்டிருக்கும் கொடுமை. நக்ஸல்கள் என்பவர்கள் ஏதோ சில மாநிலங்களில் மட்டும்தான் இருக்கிறார்கள். ஆனால் இந்த பொய் வரதட்சணை வழக்குகளால் காவல் மற்றும் நீதித்துறைகளால் கொடுமைப்படுத்தப்படுபவர்கள் இமயம் முதல் குமரி வரை, இந்திய எல்லையைக் கடந்து அயல்நாடுகளிலும் வாழ்ந்து இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் எந்த ஒரு வன்முறையும் செய்யாமல் அகிம்சை வழியில் போராடி அரசாங்கத்திற்கு மனுக்களை எழுதி தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியிலிருந்து காப்பாற்றுமாறு முறையிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.


கீழே பாருங்கள் எத்தனை அமைப்புகள் அப்பாவிகளுக்கு இழைக்கப்படும் இந்த அநீதிக்கெதிராக அகிம்சை வழியில் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

-->
-->
இந்த உண்மை ஜனாதிபதி, தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள், அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு அரசாங்கம் என அனைவருக்கும் தெரியும். அகிம்சை வழியில் தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கும் இந்த அப்பாவிகளை பாதுகாக்க யாரும் இதுவரை முன்வரவில்லை. ஆனால் இவர்களுக்குப்பெயர் அகிம்சை வழியில் போராடும் “வீரர்கள்”.

இவர்களுக்காக இந்திய உள்துறை அமைச்சகம் என்ன செய்திருக்கிறதென்றால் ஒரே ஒரு சுற்றறிகையை மாநில அரசுகளுக்கு அனுப்பி தங்களால் ஏதும் செய்ய இயலாது அதனால் மாநில அரசுகள் விரும்பினால் ஏதாவது செய்து இந்த அப்பாவிகளை காப்பாற்றட்டும் என்று கையை விரித்துவிட்டது. ஏனென்றால் இந்த அப்பாவிகள் அனைவரும் வன்முறையில் ஈடுபடாமல், காடுகளில் மறைந்திருந்து “கோழைகள்” போல தாக்குதல் நடத்தாமல் அகிம்சை வழியில் போராடும் “வீரர்கள்”. அதனால் இவர்களின் கோரிக்கைகளை செவிகொடுத்துக்கேட்கவோ அல்லது பேச்சுவார்த்தை நடத்தவோ அரசாங்கத்திற்கு அவசியமில்லை. பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்து இவர்களின் குறைகளைக் கேட்க இவர்கள் என்ன காட்டில் மறைந்திருந்து தாக்கும் கோழைத்தனமான தீவிரவாதிகளா?

அந்த சுற்றறிக்கையைப் பாருங்கள்.






அரசாங்கத்தின் இந்தப்போக்கு தவறான வழிமுறையைத்தான் மக்களுக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது. வன்முறையில் இறங்கும் “கோழைகளாக” இருந்தால் அரசாங்கம் காலில் விழாத குறையாக அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற பேச்சுவார்த்தைக்கு அழைக்கும். ஆனால் அப்பாவியாக அகிம்சை வழியில் நியாயமான கோரிக்கைக்குப் போராடினால் அவர்களை “வீரர்கள்” என்று சொல்லி வேடிக்கை மட்டும்தான் பார்க்கும் என்ற தவறான மனப்பான்மை அனைவருக்கும் ஏற்படுமல்லவா?

தீவிரவாதம் என்பது ஒரு இனமல்ல. தீவிரவாதிகள் என்று யாரும் பிறப்பதுமில்லை. அகிம்சை வழிசெல்லும் வீரர்கள் அரசியல் சுயநலக்கோமாளிகளால் தீவிராவாதி என்னும் கோழைகளாக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.

அரசாங்கம் இந்த அப்பாவிகளைக் காப்பாற்ற தவறான வரதட்சணை சட்டத்தில் தகுந்த திருத்தங்கள் கொண்டுவந்தாலே போதும். பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்புவிடுத்து தலையை சொறிந்துகொண்டிருக்கும் குழப்பமான நிலையெல்லாம் அரசாங்கத்திற்கு இல்லையே.

இளைஞர்களே,

இதுபோன்றதொரு தவறான சூழ்நிலையில் சுயநக்கோமாளிகளால் கோழைகளாக்கப்பட்டு வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள். இந்தியாவில் திருமணம் செய்து உங்களது வாழ்க்கையை சூன்யமாக்கிகொள்வதைவிட வேறு நாடுகளில் திருமணம் செய்துகொள்வதுதான் உங்களுக்கும், உங்கள் வீட்டிற்கும், நாட்டிற்கும் நல்லது.

==================================================================



தினமணி தலையங்கம்
தெரிந்தே செய்யும் தவறு
9 ஏப்ரல் 2010


மாநில போலீஸார் மற்றும் மத்திய சிறப்புக் காவல் படையினர் உள்ளிட்ட 76 பேர் மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது நாடு தழுவிய அதிர்ச்சி அலைகளை எழுப்பியிருக்கிறது.​ தொடர்ந்து தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் இருக்கும் காஷ்மீரில்கூட பாதுகாப்புப் படையினர் இந்த அளவுக்கு மோசமான தாக்குதலை எதிர்கொண்டதில்லை.

எந்த ஓர் அரசும் இதுபோன்ற வன்முறைச் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது.​ இதுபோன்ற தாக்குதல் இந்திய இறையாண்மைக்கும் மக்களாட்சித் தத்துவத்துக்கும் விடப்பட்ட சவால் என்று கருதுவதிலும் தவறில்லை.​ அரசின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளாத அரசின் ஆளுமைக்கு உள்படாத ஒரு பகுதி இருப்பதை எந்த ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாலும் ஏற்றுக்கொள்ளவோ அங்கீகரிக்கவோ முடியாது.​ ​

தீவிரவாதம் முறியடிக்கப்பட வேண்டும் என்பதிலும் பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லையென்றாலும் தீவிரவாதமும் பயங்கரவாதமும் வளர்வதற்கு உதவும் காரணிகளையும் சூழலையும் களையாமல் துப்பாக்கியைத் துப்பாக்கியால் மட்டுமே எதிர்கொண்டு வெற்றியடைவது சாத்தியமா என்பது சந்தேகம்தான்.​ வீரவசனம் சினிமாவில் பேசிக் கைதட்டல் பெறுவதுபோல,​​ நிர்வாகத்தில் சாத்தியப்பட்டதாகச் சரித்திரம் உணர்த்தவில்லை.​ ​ மேற்கு வங்கம்,​​ ஒரிசா,​​ இப்போது சத்தீஸ்கர் என்று மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்துக்கு உள்பட்ட பகுதிகள் பரந்து விரிந்துகொண்டே போவதை கடந்த மூன்று ஆண்டுகளாகவே நமது தலையங்கத்தில் எச்சரித்து வருகிறோம்.​ மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருபது விழுக்காடாக இருந்து இப்போது ஏறத்தாழ இந்தியாவின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி மாவோயிஸ்டுகளின் கையில் சிக்கியிருப்பதை வேதனையோடு குறிப்பிட்டே தீர வேண்டும். மாவோயிஸ்டுகள் இந்தியாவின் 16 மாநிலங்களில் ஊடுருவியிருக்கிறார்கள்.​

இந்தியாவில் உள்ள 460 மாவட்டங்களில் ஏறத்தாழ 175 மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளின் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன.​ காஷ்மீர்,​​ அசாம்,​​ வடகிழக்கு மாநிலங்களில் காணப்படும் பிரிவினைவாதம் சார்ந்த தீவிரவாதம் இதில் சேராது. மாவோயிஸ்டுகளின் முழு ஆளுமையில் இருக்கும் மாவட்டங்கள் 58.​ மாவோயிஸ்டுகள் ஓரளவுக்குப் பலமாக இருக்கும்,​​ ஆனால்,​​ இந்திய அரசின் ஆளுமை தொடரும் மாவட்டங்கள் 54.​ ஏனைய 83 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு மெல்ல மெல்ல அதிகரித்த வண்ணம் இருக்கிறது.​ கடந்த ஆண்டில் மட்டும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தாக்குதலில் பலியான காவல்துறையினர் ​(312 பேர்)​ பலியான மாவோயிஸ்டுகளைவிட ​(294 பேர்)​ அதிகம். இந்த அளவுக்கு மாவோயிஸ்டுகள் பலம் பெற்றதற்கு என்ன காரணம்?​ இந்தியாவின் மையப்பகுதியில் இருக்கும் தண்டகாரண்யம் என்கிற அடர்ந்த வனப்பகுதி ஆந்திரம்,​​ மகாராஷ்டிரம்,​​ சத்தீஸ்கர்,​​ மத்தியப் பிரதேசம்,​​ ஜார்க்கண்ட் மற்றும் ஒரிசா ஆகிய ஆறு மாநிலங்களின் எல்லைகளை உள்ளடக்கியது.​ இதன் மொத்த நிலப்பரப்பு ஏறத்தாழ 40,000 சதுர கிலோ மீட்டர். ​

இந்த வனப்பகுதியில் வாழும் ஆதிவாசிகள் எதற்காகவும் வெளியுலகையோ அரசையோ சார்ந்து வாழ வேண்டிய அவசியமில்லாதவர்கள்.​ இவர்களுக்கு ரேஷன் தேவையில்லை.​ மின்சாரம்,​​ குடிநீர் வசதி,​​ சாலைகள்,​​ பள்ளிக்கூடங்கள்,​​ மருத்துவமனைகள் எதுவுமே வேண்டாம்.​ இயற்கையோடு ஒட்டி வாழும் பழங்குடி மக்கள். ​ 1995 வரை இவர்கள் நிம்மதியாகக் காட்டை நம்பி வாழ்ந்து வந்தனர்.​ நமது வனத்துறை அதிகாரிகளுடன் நல்லுறவு கொண்டிருந்தனர்.​ இந்த வனப்பகுதியில் இந்திய அரசின் அதிகாரமும் ஆளுமையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.​

உலகமயமாக்கல் கொள்கையின் தொடர்ச்சியாக பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை இந்த வனப்பகுதியில் குவிந்து கிடக்கும் கனிம வளத்தின் மீது விழுந்தது. மண்ணுக்குள் மறைந்து கிடக்கும் தாதுப் பொருள்களை வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்தால் கிடைக்கப் போகும் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் அந்த நிறுவனங்களை இங்கே காட்டை அழித்துச் சுரங்கங்களை நிறுவ ஊக்குவித்தது.​ ​ கட்சி வேறுபாடின்றி எல்லா அரசியல் கட்சிகளும் அந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் வருகையையும் அவர்களது வளர்ச்சியையும் ஆதரித்தபோது ஆதிவாசிகள் மிரண்டனர்.​

தங்களது வாழ்வாதாரம் பறிபோகும் அபாயம் அவர்களை நடுக்கத்தில் ஆழ்த்தியது.​ பட்டணத்துத் தெருக்களில் கூலிகளாகவும்,​​ ரிக்ஷாக்காரர்களாகவும் அல்லாட அவர்கள் தயாராக இல்லை.​ அவர்களை வெளியேற்றி இந்தியாவின் கனிம வளங்களைச் சுரண்டி ஏற்றுமதி செய்வதிலிருந்து பின்வாங்க பன்னாட்டு நிறுவனங்களும் தயாராக இல்லை.​ ​ தங்களுக்காகக் குரல் கொடுக்கவும் ஆதரவுக்கரம் நீட்டவும் எந்த அரசியல் கட்சியும் சமூக அமைப்பும் இல்லாத நிலையில் பேய்க்குப் பயந்து பூதத்துக்கு வாழ்க்கைப்பட்ட கதையாக அவர்கள் மாவோயிஸ்டுகளைத் தஞ்சமடைய வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டது.​ இதுதான் மாவோயிஸ்டு அசுர வளர்ச்சியின் பின்னணி. தண்டகாரண்யப் பகுதிகளிலிருந்து பன்னாட்டு கனிம நிறுவனங்கள் அகற்றப்பட்டால் மட்டுமே மாவோயிஸ்டுகளுக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கை வெற்றி பெறும் என்பதுதான் உண்மைநிலை.​ ஆனால் அரசோ,​​ விமானத் தாக்குதல் மூலம் மாவோயிஸ்டுகளை அழிக்கும்சாக்கில் ஆதிவாசிகளை அப்புறப்படுத்தும் முயற்சிக்கு முன்னுரிமை கொடுக்கிறது.​ இது காடுகளை அழித்து பன்னாட்டு கனிம நிறுவனங்களுக்கு உதவும் முயற்சியோ என்றுகூட நமக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. இந்தியாவின் மையப்பகுதியில் ஓர் எரிமலை கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.​ அது வெடிப்பதும் வெடிக்காமல் போவதும் அரசின் அணுகுமுறையைப் பொறுத்துத்தான் இருக்கிறது.​

நிதியமைச்சராக இருக்கும்போது ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையின்போதும் திருக்குறளை மேற்கோள் காட்டும் நமது மத்திய உள்துறை அமைச்சர் தலையங்கத்துக்குக் கீழே தரப்பட்டிருக்கும் குறளைப் படித்து அதன்படிச் செயல்பட்டாலொழிய இந்தப் பிரச்னைக்கு முடிவு ஏற்படும் என்று நாம் நம்பவில்லை.​ ​

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

நோய் இன்னதென்று ஆராய்ந்து,​​ நோயின் காரணம் ஆராய்ந்து,​​ அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து,​​ உடலுக்குப் பொருந்தும்படியாகச் செய்யவேண்டும். திருக்குறள் ​(எண்:​ 948) அதிகாரம்:​ மருந்து





No comments: