பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Saturday, May 8, 2010

தமிழகத்தில் பரவும் காதல் வைரஸ்!

முன்பெல்லாம் காதல் திரைப்படங்களுக்கு இடையே தேசபக்தியை ஏற்படுத்தும் விதமாக பல விடுதலைப்போராட்ட வீரர்களைப் பற்றிய திரைப்படங்கள் வந்துகொண்டிருந்தன. அதற்கு நடுவே மக்களை நல்வழிப்படுத்தும் விதமாக அனைத்து மதங்களையும் போற்றும் பக்திப்படங்களும் வந்துகொண்டிருந்தன.

அதன்பிறகு 21ம் நூற்றாண்டிற்கு பெருமையுடன் நுழைகிறோம் என்று ரௌடிகளையும், குண்டர்களையும், கொலைகாரர்களையும் கதாநாயகனாக சித்தரித்து திரைப்படம் எடுக்கும் சிறுமைத்தனமான செயல்களில் ஈடுபட்டுவந்தார்கள். இப்போது கள்ளக்காதல்தான் மார்க்கெட்டில் நன்கு பணம் கொட்டும் தொழிலாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் “கலை” என்ற பெயரில் ஒரு சாயத்தைப் பூசிவிட்டார்கள். அரசாங்கமும் இதுபோன்ற படங்களுக்குத்தான் விருது கொடுத்து சிறப்பிக்கிறது. கீழுள்ள செய்தியில் பாருங்கள் கள்ளக்காதலுக்காக ஒரு திரைப்படம் தயாராகிக்கொண்டிருக்கிறது.


================
கள்ளக்காதல் கதை
Web Dunia செவ்வாய், 9 மார்ச் 2010

யுவா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிக்கும் படம் இலக்கணப் பிழை. ஒரு ஆட்டோ ஓட்டும் இளைஞன் பற்றிய கதை இது. வரம்பு மீறினால் வாழ்க்கை என்னாகும் என்பதற்கு உதாரணமாக இருக்கும் என்கிறார் இப்பட இயக்குனர் ஜோ.

தன் நண்பன் மனைவியிடம் ஏற்படும் கள்ளத் தொடர்பால் ஏற்படும் பல
பிரச்சனையால் தற்கொலைக்கே செல்லும் ஹீரோ, பிறகு எப்படி திருந்துகிறான் என்பதை விரசம் இல்லாமல் சொல்லும் படம் இலக்கணப் பிழை.
================


அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியில்தான் செல்வார்கள். தவறான சமுதாயம் தவறான அரசனைத்தான் ஆதரிக்கும். தவறான சட்டங்கள் தவறுசெய்பவர்களைத்தான் ஊக்குவிக்கும். ஒட்டுமொத்தத்தில் எல்லாம் நாசமாகப் போய்க்கொண்டிருக்கிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் பொய் வரதட்சணை வழக்குகள். அரசாங்கம் காட்டும் வரதட்சணைப்புகார் புள்ளி விவரக்கணக்கில் 99% புகார்கள் வரதட்சணைக் கொடுமைக்காக கொடுக்கப்படுவதில்லை. மனைவியின் கள்ளக்காதல், மனைவியின் பணத்தாசை, ‘தான்’ என்னும் அகம்பாவம், அடுத்தவருக்கு மரியாதை கொடுக்கத் தெரியாத கீழ்மைத்தனம், கணவனை அடக்கி ஆளவேண்டும் என்ற ராட்சச குணம், பழிவாங்கும் உணர்ச்சி போன்ற காரணங்களால்தான் வரதட்சணைப் புகார்கள் கொடுக்கப்படுகின்றன. இது தான் இந்தியாவின் தற்போதைய கலாச்சாரப் போக்கு. ஆனால் அதையும் தாண்டி கள்ளக்காதலுக்காக கொலை செய்யும் மனப்பான்மை தமிழகத்தில் அதிகரித்துவிட்டதாக அரசாங்கப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கீழுள்ள தினமணி செய்தியைப் பாருங்கள்.


================

8 மே 2010

தனிநபர் வருமானத்திலும், கல்வியிலும், சுகாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் தமிழ்நாடு என்னதான் முன்னிலை வகித்தாலும் ஒழுக்கக் குறைவான சம்பவங்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம் என்றால் நாம் எப்படி தலைகுனியாமல் இருக்க முடியும்.

2007 முதல், காதல் விவகாரத்தால் நடைபெறும் கொலைகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதுதான் அது. 2007-ல் 123 ஆக இருந்த இந்த எண்ணிக்கை 2009-ல் 217 ஆக அதிகரித்துள்ளது.கடந்த ஓராண்டில் மட்டும் 1,600 கொலைகள் நடந்துள்ளன. குடும்பச் சண்டைகளால் 453 கொலைகளும், அற்பச் சண்டைகளால் 372 கொலைகளும் நடந்துள்ளன. 2007-ல் 1,521 ஆக இருந்த கொலைகளின் எண்ணிக்கை 2009-ல் 1,644 ஆக உயர்ந்துள்ளது.

இதில் மிகவும் கவலை தரத்தக்கது எதுவென்றால் காதல் தொடர்பான கொலைகள் அதிகரித்து வருவதுதான். இந்தக் கொலைகள் அதிகரித்ததற்கு என்ன காரணம் என்று கேட்டால், தமிழக முதல்வர் பாணியில் காதல்தான் காரணம் என்று கூறிவிடலாம். இந்தக் காதலில் முறையான முதல் காதல், ஒரு தலைக்காதல், பொருந்தாக் காதல், கள்ளக் காதல் என்று வகைகள் பல இருக்கலாம். களவியல் என்பது தமிழருக்குப் புதியதல்லவே என்று இலக்கிய நயத்தோடு இதை புறந்தள்ளிவிட நினைக்கலாம். தமிழர்களின் தனிச்சிறப்பே காதலும் வீரமும்தான் என்பதை ஒப்புக் கொண்டாலும், தமிழனுக்கு மானமும் முக்கியம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.


================


இளைஞர்களே,

மேலுள்ள செய்தி உங்களுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது. உங்கள் திருமணத்தைப் பற்றிய முடிவு செய்யும்போது நன்கு ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். முன்பெல்லாம் இந்தியாவில் திருமணம் செய்தால் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி சிறைக்குச் செல்லும் அபாயம் மட்டும்தான் இருந்தது. இப்போது உயிரே போகும் அபாய நிலையும் ஏற்பட்டிருக்கிறது. அதனால் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்வதுதான் புத்திசாலித்தனம்.

வேறு நாடுகளில் நடக்கும் திருமணங்களில் கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டால் விவாகரத்து செய்துகொள்வார்கள். ஆனால், இந்தியாவில் கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டால் கணவன் விரும்பிக்கேட்டாலும் விவாகரத்து கொடுக்கமாட்டார்கள். அதற்குப் பதிலாக கணவன் மீது பொய்யான குற்றவழக்குகள் பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுவார்கள். அதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் சட்டங்கள்தான் IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act.

இதற்கு நல்ல உதாரணம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மாலிக்கின் கதை. அவரிடம் விவாகரத்து (திருமணம் நடந்ததா இல்லையோ என்பதே இன்னும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது) வாங்கவேண்டும் என்பதற்காக அவர் மீது போடப்பட்ட வழக்குகள் IPC498A, 506, 420. இந்த சட்டப்பிரிவுகளுக்கும் விவாகரத்திற்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்று எண்ணிப்பாருங்கள். விவாகரத்தில் அவர் கையெழுத்திட்டவுடன் ஒரே நாளில் இந்த வழக்குகள் மாயமாகிவிட்டன!

அதனால் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் நீங்கள் விவாகரத்துக் கேட்டாலோ அல்லது உங்கள் மனைவிக்கு விவாகரத்து தேவைப்பட்டாலோ வரதட்சணை சட்டங்களைப் பயன்படுத்தி
உங்கள் மீது பொய் வழக்குகள் போடப்படும். இது அரசாங்க ஆதரவோடு அமோகமாக நடைபெற்றுவருகிறது. இதுதான் தற்போதைய இந்தியத் திருமணச் சட்ட நடைமுறை. இந்த பொய் வழக்குகளை நம்பித்தான் பல காவல் மற்றும் நீதித்துறையில் பணிபுரிபவர்களின் குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இதுபோன்ற கொடிய பழக்கத்தை வேறெந்த நாட்டிலும் காணமுடியாது. இந்த நடைமுறையுடன் இப்போது கள்ளக்காதல் என்ற புதிய கலாச்சாரமும் வளர்ந்து வருகிறது. இதற்குத் தடையாக யார்வந்தாலும் கொலை செய்துவிடும் புதிய பழக்கமும் இப்போது நடைமுறையில் வளர்ந்து வருகிறது. இதைத்தான் மேற்கண்ட செய்திகள் வெளிப்படுத்துகின்றன.

அதனால் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்வதுதான் உங்களின் மானத்திற்கும் உயிருக்கும் நல்லது.
No comments: