பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Wednesday, May 12, 2010

இந்தியத் திருமணமும் வெறிநாய்க் கடியும்

இளைஞர்களே,

இந்தியாவில் திருமணம் செய்துகொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் பலவிதம். இந்தியாவில் திருமணம் செய்யாமல் வேறுநாடுகளில் திருமணம் செய்வது உத்தமம். இந்த நல்லுரையைப் பொருட்படுத்தாமல் இந்தியாவில் திருமணம் செய்துகொள்ள நீங்கள் நினைத்தால் நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அதற்கு முன்பாக கீழுள்ள செய்தியைப் படித்துக்கொள்ளுங்கள்.


நள்ளிரவில் ஓடும் ரயிலிலிருந்து புதுமணப் பெண் தண்டவாளத்தில் குதித்ததால் திடீர் பரபரப்பு
தினமலர் 12 மே 2010

விழுப்புரம்:காதலருடன் சேர்ந்து வாழ ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பியோட முயன்ற புது மணப் பெண்ணை ரயில்வே போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் செல்வலட்சுமி(19). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வேளச்சேரியிலுள்ள அவரது உறவினர் சீனி ராஜா வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.


அப்போது அதே பகுதியில் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வரும் கணேஷ் என்பவரு டன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் செல்வலட்சுமியின் காதல் விவரம் தெரிந்த அவரது பெற்றோர், சென்னை யில் மளிகை கடை நடத்தி வரும் உறவினரான செல்வராஜ் (25) என்பவருக்கு கடந்த மாதம் 25ம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர். செல்வலட்சுமிக்கு கணவர் செல்வராஜியுடன் சேர்ந்த வாழ விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார்.


இதனை அறிந்த செல்வராஜ் தங்களது உறவினர்களின் துணையுடன் செல்வலட்சுமியை அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்து, நேற்றிரவு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையிலிருந்து தூத்துகுடிக்கு அழைத்து சென்றனர்.விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்த போது திடீரென செல்வலட்சுமி கதவை திறந்து கொண்டு ஓடும் ரயிலில் இருந்து தண்டவாளத்தில் குதித்தார்.


அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஏட்டு ராஜமோகன், பெண் போலீசார் அம்பிகா ஆகியோர் செல்வலட்சுமியை மீட்டனர். பின்னர் விசாரணை செய்து அவரது கணவர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். நள்ளிரவில் ஓடும் ரயிலிலிருந்து பெண் ஒருவர் குதித்த சம்பவம் விழுப்புரம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

====================

இந்த செய்திக்கும் இந்தியத் திருமணத்தில் உள்ள ஆபத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம். மேலுள்ள செய்தியில் பார்த்தீர்களா மகளின் காதல் விருப்பத்திற்கெதிராக பெண்ணின் பெற்றோர் திருமணம் செய்துவைத்துள்ளனர். ஆனால் உண்மையறிந்த அப்பாவிக் கணவர் அந்தப் பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைக்கச் சென்றபோது அந்தப் பெண் பழைய காதலனுடன் சேரவேண்டும் என்பதற்காக ஓடும் இரயிலிலிருந்து குதித்திருக்கிறார். இதில் அவர் இறந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் தெரியுமா? உடனே அந்த அப்பாவிக் கணவர் மீது வரதட்சணைக் கொலை என்ற சட்டப்பிரிவில் வழக்குப் போட்டிருப்பார்கள். அதற்கான சட்டப்பிரிவு IPC304B.

IPC Section 304-B "dowry death"

i. The death of a woman must have been caused by burn or bodily injury or otherwise than under normal circumstance;

ii.
Such death must have occurred within seven years of her marriage;
iii. Soon before her death, the woman must have been subjected to cruelty or harassment by her husband or by relatives of her husband;

iv. Such cruelty or harassment must be for or in connection with demand for dowry;

v. Such cruelty or harassment is when to have been meted out to the woman soon before her death.


இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய மேற்கண்ட நிகழ்வுகள் நடந்திருக்கவேண்டும் என்பது சட்டப்புத்தகத்தில் சொல்லப்பட்ட சட்டம். ஆனால் நடைமுறை சட்டத்தில் திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் சந்தேகப்படும்படியாக மனைவி இறந்திருந்தால் உடனடியாக கணவன் கைது செய்யப்படுவான்.

இதுபோன்ற அநியாய கைது நடவடிக்கைக்கு துணைபோவது யார் தெரியுமா. பெண்ணின் பெற்றோர்கள். தங்களது பெண்ணின் காதல் விஷயத்தை மறைத்து திருமணம் செய்ததை மறைப்பதற்காக அப்பாவிக் கணவன் மீது வரதட்சணைக் கொலை என்று பழிபோட்டுவிடுவார்கள். அல்லது பெண்ணிற்கு வேறு ஏதாவது வியாதி அல்லது வேறு காரணங்கள் இவற்றை மறைக்க பெண் தற்கொலை செய்துகொண்டால் உடனே கணவன் மீது வரதட்சணைக் கொலை வழக்குப் பதிவு செய்யபடும்.

இது தான் அப்பாவிக் கணவர்களுக்கெதிராக இந்தியாவில் நடைமுறையில் நடந்துவரும் சட்டரீதியான கொடுமை. இதை நீதிமன்றங்கள் பலமுறை எடுத்துக்காட்டியிருக்கிறது.

In Kans Raj vs. State of Punjab and others AIR 2000 SC 2324 the Hon’ble Supreme Court , inter alia, observed as under:-


“In cases where such accusations are made, the overt acts attributed to persons other than husband are required to be proved beyond reasonable doubt
. By mere conjectures and implications such relations cannot be held guilty for the offence relating to dowry deaths. A tendency has, however, developed for roping in all relations of the in-laws of the deceased wives in the matters of dowry deaths which, if not discouraged, is likely to affect the case of the prosecution even against the real culprits. In their over enthusiasm and anxiety to seek conviction for maximum people, the parents of the deceased have been found to be making efforts for involving other relations which ultimately weaken the case of the prosecution even against the real accused as appears to have happened in the instant case.”


மற்றொரு விசித்திரமான வழக்கம் ஒன்றும் இந்தியாவில் இருக்கிறது. இதை நீங்கள் செய்தித்தாள்களில் பலமுறை பார்த்திருப்பீர்கள். திருமணமான பெண் 7 ஆண்டுகளுக்குள் இறந்தால் உடனே RDO விசாரணை செய்து அறிக்கை கொடுக்கவேண்டும். ஆனால் இதுவே புது மாப்பிள்ளை மனைவியால் கொலைசெய்யப்பட்டு இறந்தால்கூட எந்த ஒரு விசாரணையும் கிடையாது.

வெறிநாய்க் கடித்தால் கடித்த நாய்க்கு ஏதாவது மாற்றங்கள் ஏற்படுகிறதா என்று கண்காணித்துக்கொண்டு இருக்கச்சொல்வார்கள். அதுபோல இந்தியாவில் திருமணம் செய்துகொண்டவர்கள் 7 ஆண்டுகள் வரை மனைவியை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். ஏதாவது ஏற்பட்டால் அத்தோடு உங்கள் கதை முடிந்தது. மனைவியின் இறப்பிற்கு வேறு காரணங்கள் இருந்தாலும் உங்கள் மீது வழக்குப் பதிவுசெய்துவிடுவார்கள் நம்ம ஊர் கடமைவீரர்கள். பிறகு நீங்கள் நிரபராதி என்று நீதிமன்றத்தில் நிரூபித்து வெளியே வர எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள். இதுபோன்ற அபாயமான இந்தியத்திருமணம் சுகமானதா அல்லது ஆபத்தானதா என்று யோசியுங்கள்.

சமீபத்திய செய்தி என்ன சொல்கிறதென்றால் இந்த சட்டத்தை திருமணமாகி 7 ஆண்டுகளுக்குப் பிறகும் மனைவி இறந்தால் கணவன் தான் காரணம் என்று சட்டத்தை திருத்தலாமா என்று உச்சநீதிமன்றம் யோசிப்பதாக செய்தி சொல்கிறது. அதனால் இந்தியாவில் திருமணம் செய்தால் ஆயுள் முழுக்க உங்களுக்கு ஆபத்து இந்திய மனைவி என்ற உருவில் கூடவே இருக்கிறது என்று உணர்ந்துகொள்ளுங்கள்.

Notably, Section 304 B is applicable only if the married woman dies unnatural death within seven years of her marriage and perhaps in this context, the Supreme Court wants the law to be amended to remove the limitation of seven years so that the culprits do not get away with their crime without being adequately punished.
- http://www.indlawnews.com/NewsDisplay.a ... 887c232236

நான் வரதட்சணை வாங்காமல்தான் திருமணம் செய்வேன். எனக்கு எப்படி இதுபோல நடக்கும் என்று பல சிந்தனைகள் உங்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். நம்ம ஊரில் சட்டமும், சட்டத்தை செயல்படுத்துபவர்களும் நேர்மையாக இருப்பதாக நீங்கள் கருதினால் நீங்கள் நினைப்பது போல உங்கள் வாழ்வில் எது நடந்தாலும் உங்களுக்கு ஆபத்து இல்லை என்று நீங்கள் நினைப்பது சரி. இல்லையென்றால் பொய்வழக்குகள் எப்படி இருக்கும் என்று நீங்கள் அனுபவிக்க நேரிடும்.

தீவிரவாதி கசாப்பிற்கு தீர்ப்பு வழங்கவே இரண்டு ஆண்டுகள் 33 கோடி செலவு செய்து கடைசியில் அவன் தான் குற்றவாளி என்று கண்டுபிடித்துவிட்டதாக நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. ஆனால் அப்பாவியாக நீங்கள் பொய் வழக்கில் சிக்கினால் நீங்கள் நிரபராதி என்று நிரூபித்து வருவதற்குள் அதே 33 கோடி செலவு செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நாட்டு நடப்பு இப்போது எப்படி இருக்கிறது என்று உங்களுக்கே தெரியுமல்லவா! அதனால் இந்த அபாயகரமான சூழலில் உங்களது திருமணத்தை நன்கு யோசித்து முடிவு செய்யுங்கள்.





No comments: