செய்தித்தாள்களில் தினமும் தீவிரவாதங்களைப்பற்றிய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. உலகம் முழுதும் தீவிரவாதம் பரவியிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் நக்ஸல்களை ஒடுக்க முடியாமல் அரசாங்கம் மிகவும் கவலையுடன் இருக்கிறது.
##########
தினமணி 2 மே 2010கோவை, மே 1: நக்ஸல்களின் சவாலால் இந்தியாவுக்கு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வேதனையுடன் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதளம் சார்பில் நடைபெற்ற 6 நாட்கள் பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி கோவை போத்தனூர் பி.வி.ஜி. திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.இதில் பயிற்சி பெற்ற தொண்டர்களுக்கு சான்றிதழை வழங்கி சிதம்பரம் பேசியது:
6 மாநிலங்களில் இருக்கும் நக்ஸல்களின் சவால்களால் நாட்டுக்கு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டுள்ளது. இந்த சவால்களையும் முறியடிப்போம். அச்சுறுத்தல்களுக்கு இடம் கொடுக்காமல், மன உறுதியுடன் செயல்படுவது அவசியம் என்றார்.##########
அரசாங்கம் பல முயற்சிகள் செய்து தீவிரவாதிகளை ஒடுக்கப் பல திட்டங்கள் போட்டாலும் கீழுள்ள செய்தியில் உள்ளது போல பல மறைமுக ஆதரவுகள் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு இடையூராக இருந்துகொண்டிருக்கிறது. இந்தப்பிரச்சனைகளையெல்லாம் சமாளித்து தீவிரவாதத்தினை ஒடுக்க ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது. இது மிகவும் எளிமையானது, சர்வதேச தீவிரவாதத்தையும் ஒழிக்கக்கூடியது. அது என்ன என்று தெரிந்துகொள்ள செய்தியைத் தொடர்ந்து படியுங்கள்.
#############அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் அனைத்து தீவிரவாதிகளையும் பிடித்து அரசாங்க செலவில் இந்தியாவில் இருக்கும் சட்டதீவிரவாதிகளுடன் திருமணம் செய்து வைத்துவிட்டால் போதும். இந்த வன்முறை செய்யும் தீவிரவாதிகள் சட்டதீவிரவாதிகளின் பிடியில் சிக்கி பொய் வரதட்சணை வழக்குகளில் (IPC498A, Domestic Violence Act) மாட்டிக்கொள்வார்கள். பிறகு அவர்களை அந்தக் கடவுள் கூட காப்பாற்ற முடியாது.
லக்னோ : உ.பி.,யில், நக்சல்கள் என சந்தேகப்படும் நபர்களுக்கு, ஆயுதங்கள் வழங்கிய, மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் இரண்டு பேர், ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், காவல் துறையினர் இரண்டு பேரை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
############
பொய்வழக்குப்போடும் மனைவி, பொய்வழக்கை சரியாக விசாரிக்காமல் கடமை தவறி பணிபுரியும் காவல் துறை, ஏதோ கடனே என்று செயல்படும் நீதித்துறை இவற்றையெல்லாம் கண்டும் காணாதது போல இருக்கும் அரசாங்கம் இந்தக் கூட்டணியின் மூலம் உருவாகும் பொய்வழக்கில் சிக்கினால் யார்தான் தப்பமுடியும்? பிறகு தீவிரவாதிகளின் கதி என்னவாகும் என்று யோசித்துப்பாருங்கள். ஆயுசு முழுக்க சிறைக்கும் நீதிமன்றத்திற்கும் பொய்வழக்கில் சிக்கி அலைந்து கொண்டிருக்கவேண்டியதுதான். பிறகு உலகில் தீவிரவாதி என்று சொல்வதற்குக் கூட ஒரு ஆளும் இருக்கமாட்டான்.
ஒரு தீவிரவாதியை தீவிரவாதி என்று சொல்லி கைது செய்யத் தகுந்த ஆதாரங்கள் வேண்டும். ஆனால் அதே தீவிரவாதியை “இந்தியக் கணவன்” என்ற நிலைக்கு மாற்றி எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஒரு வரதட்சணை வழக்கைப் போட்டு சிறைக்குள் தள்ளிவிடுவது மிகவும் எளிது. ஏனென்றால் வரதட்சணை வழக்கிற்கு இந்திய சட்டப்படி ஆதாரங்கள் தேவையில்லை. இந்தியக் கணவனாக இருந்தால் அதுவே போதும்.
பெண் தீவிரவாதியாக இருந்தால் “இந்தியக் கணவராக்கப்பட்ட” ஆண் தீவிரவாதியின் உறவினர் என்று சொல்லி IPC498A சட்டத்தின் மூலம் கைது செய்துவிடலாம்!
தீவிரவாதத்தை ஒடுக்க எவ்வளவு எளிதான வழி! இது தெரிந்தும் ஏன் உள்துறை அமைச்சகம் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதுதான் ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது. இந்த யோசனையை எல்லா நாடுகளும் பின்பற்றலாம்.
கத்தியின்றி, ரத்தமின்றி, இந்திய (வரதட்சணை) சட்டப்படி சர்வதேச அளவில் தீவிரவாதத்தினை ஒழிக்கும் எளிய முறை!
No comments:
Post a Comment