பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Sunday, May 30, 2010

கணவரின் ஆன்மா சாந்தியடையட்டும்

தினமலர் 29 மே 2010

தலைவாசல்: தலைவாசல் அருகே குடும்ப தகராறில் கணவன், மனைவி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் ஆத்தூர் தலைவாசல் அருகே உள்ள காட்டுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (26). அவரது மனைவி சத்யா (23)வுக்கும் இடையே இரு தினங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது. அதில் மனமுடைந்த மனைவி சத்யா, வீட்டு சமையல் அறையில் இருந்த மண்ணெணய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.அதையறிந்த கணவர் ரமேஷ், மனைவியை காப்பாற்ற முயன்றபோது இருவரும் தீக்காயம் அடைந்தனர். தகவலறிந்த உறவினர்கள் ரமேஷ், சத்யாவை படுகாயமடைந்த நிலையில் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.படுகாயமடைந்த சத்யா, ரமேஷ் ஆகிய இருவரையும் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யாவும், கணவர் ரமேஷ் என அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தலைவாசல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
============================

இந்த குடும்பத்தகராறில் கணவர் உயிருடன் தப்பித்திருந்தால் அவர் மீது IPC304(B) என்ற பிரிவின்படி “வரதட்சணைக் கொலை” என்ற வழக்கு கட்டாயமாக திணிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் தனது ஒட்டுமொத்தக் குடும்பத்தாருடன் காவல், நீதிமன்றங்களில் சீரழிந்துகொண்டிருக்க வேண்டும். அந்தக் கொடுமையை விட இவரின் ஆன்மா இப்போது நிம்மதியாக அமைதியடைய வேண்டுவோம்.

இப்படி எழுதியிருப்பது வித்தியாசமாக தோன்றலாம். ஆனால் இதுதான் உண்மை. இந்தியாவில் திருமணம் செய்வதை விட மரணமே மேலானது. ஏனென்றால் இந்தியாவில் திருமணம் செய்யும் ஆண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. இந்தியாவைப் பொறுத்தவரை திருமணம் செய்வதும், தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இரையாவதும் ஒன்றுதான். கேட்பதற்கு ஆளில்லை. கவலைப்படவும் யாருமில்லை. மனிதாபிமானமும் யாருக்கும் இல்லை. ஆண்களைப் பொறுத்தவரை இந்த நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. அதனால் இளைஞர்களே இந்தியத் திருமண தீவிரவாதத்திற்கு பலியாகிவிடாதீர்கள்!

IPC Section 304-B "dowry death"

i. The death of a woman must have been caused by burn or bodily injury or otherwise than under normal circumstance;

ii.
Such death must have occurred within seven years of her marriage;
iii. Soon before her death, the woman must have been subjected to cruelty or harassment by her husband or by relatives of her husband;

iv. Such cruelty or harassment must be for or in connection with demand for dowry;

v. Such cruelty or harassment is when to have been meted out to the woman soon before her death.


இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய மேற்கண்ட நிகழ்வுகள் நடந்திருக்கவேண்டும் என்பது சட்டப்புத்தகத்தில் சொல்லப்பட்ட சட்டம். ஆனால் நடைமுறை சட்டத்தில் மனைவி இறந்தால் உடனடியாக கணவன் கைது செய்யப்படுவான்.

இதுபோன்ற அநியாய கைது நடவடிக்கைக்கு துணைபோவது யார் தெரியுமா. பெண்ணின் பெற்றோர்கள். அப்பாவிக் கணவன் மீது வரதட்சணைக் கொலை என்று பழிபோட்டுவிடுவார்கள். அல்லது பெண்ணிற்கு வேறு ஏதாவது வியாதி அல்லது வேறு காரணங்கள் இவற்றை மறைக்க பெண் தற்கொலை செய்துகொண்டால் உடனே கணவன் மீது வரதட்சணைக் கொலை வழக்குப் பதிவு செய்யபடும்.

இது தான் அப்பாவிக் கணவர்களுக்கு எதிராக இந்தியாவில் நடைமுறையில் நடந்துவரும் சட்டரீதியான கொடுமை. இதை நீதிமன்றங்கள் பலமுறை எடுத்துக்காட்டியிருக்கிறது.

In Kans Raj vs. State of Punjab and others AIR 2000 SC 2324 the Hon’ble Supreme Court , inter alia, observed as under:-

“In cases where such accusations are made, the overt acts attributed to persons other than husband are required to be proved beyond reasonable doubt
. By mere conjectures and implications such relations cannot be held guilty for the offence relating to dowry deaths. A tendency has, however, developed for roping in all relations of the in-laws of the deceased wives in the matters of dowry deaths which, if not discouraged, is likely to affect the case of the prosecution even against the real culprits. In their over enthusiasm and anxiety to seek conviction for maximum people, the parents of the deceased have been found to be making efforts for involving other relations which ultimately weaken the case of the prosecution even against the real accused as appears to have happened in the instant case.”


மற்றொரு விசித்திரமான வழக்கம் ஒன்றும் இந்தியாவில் இருக்கிறது. இதை நீங்கள் செய்தித்தாள்களில் பலமுறை பார்த்திருப்பீர்கள். திருமணமான பெண் 7 ஆண்டுகளுக்குள் இறந்தால் உடனே RDO விசாரணை செய்து அறிக்கை கொடுக்கவேண்டும். ஆனால் இதுவே கணவன் மனைவியால் கொலை செய்யப்பட்டு இறந்தால் கூட எந்த ஒரு விசாரணையும் கிடையாது.

இந்தியாவில் திருமணம் செய்யும் ஆண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. இந்தியாவைப் பொறுத்தவரை திருமணம் செய்வதும், தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இரையாவதும் ஒன்றுதான். கேட்பதற்கு ஆளில்லை. கவலைப்படவும் யாருமில்லை. மனிதாபிமானமும் யாருக்கும் இல்லை. ஆண்களைப் பொறுத்தவரை இந்த நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. அதனால் இளைஞர்களே இந்தியத் திருமண தீவிரவாதத்திற்கு பலியாகிவிடாதீர்கள்!

No comments: