Six assailants hacked to death four people in a house at Premnagar in Amberpet neighbourhood. Another person sustained serious injuries and is battling for life in hospital, police said.
Qamruddin, his wife Sajida Begum and two other family members Abdullah Begani and Abdullah Kirmani were killed in the attack. Qamruddin's daughter Afreen, wife of the main accused, is in critical condition.
Police said while one person died on the spot, three others succumbed to the their injuries in hospital.
After the murders, Jehangir, son-in-law of Qamruddin, and his brother went to the police station where they surrendered. Police also arrested their four other relatives who helped them in committing the crime.
Jehangir, who separated from his wife following a marital dispute, said he committed the crime to take revenge for a dowry harassment case filed by Afreen against him.
Police are investigating.
இவர் காட்டியிருக்கும் இந்த வழிமுறை பொய் வரதட்சணை வழக்கில் சிக்கியிருக்கும் பல அப்பாவிகளுக்கு முன்னுதாரணமாக அமைவதற்கு முன் அரசாங்கம் இப்போதாவது விழித்துக் கொள்ளவேண்டும். இந்த முன்னுதாரணத்தை தானும் ஏன் பின்பற்றக்கூடாது என்று அனைவரும் எண்ணுவதற்கு பல காரணங்களை இந்திய அரசாங்கம் கொடுத்திருக்கிறது.
மனைவி கணவனுக்கெதிராகவும் அவனது குடும்பத்திற்கெதிராகவும் பொய் வரதட்சணை வழக்குக் தொடுத்தால்:
- கணவனும் அவனது ஒட்டுமொத்தக் குடும்பமும் IPC498A, Dowry Prohibition Act பிரிவுகள் படி எந்தவித ஆதாரமும், விசாரணையும் இன்றி உடனடியாக கைது செய்யப்படுவார்கள். மேலும் எத்தனை விதமான IPC பிரிவுகளையும் தயங்காமல் சேர்க்க நம் காவல்துறை நண்பர்கள் கொஞ்சமும் அஞ்சமாட்டார்கள்.
- அதன்பிறகு காவல் நிலையத்தில் கணவனும் அவனது குடும்பமும் கீழ்த்தரமாக மூன்றாம் தர குற்றவாளி போல அவமானப்படுத்தப்பட்டு ஜாமின் வாங்குவதற்குள் பல அவமானங்களை சந்திக்கவேண்டும்.
- பிறகு இந்த பொய் வழக்கிலிருந்து வெளிவர பெருமைமிக்க இந்திய நீதிமன்றங்களில் பல ஆண்டுகள் அலைய வேண்டும்.
- இதற்குள் கணவனின் வயதான பெற்றோர்கள் குற்றவாளி என்ற அவப்பெயருடன் தாங்கள் இந்த பொய் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டோம் என் ற நற்செய்தியை கேட்கமுடியாமலே இறைவனடி சேர்ந்து விடுவார்கள்.
- கணவனின் திருமணமாகாத சகோதரிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.
- அப்பாவி இளைஞரின் வாழ்க்கை ஒரு பொய் வழக்கால் சிதைந்துவிடும்.
- இவை அனைத்தும் குற்றம் செய்யாமலேயே மனைவியின் ஒரு பொய்ப் புகார் மூலம் இந்திய காவல், நீதித் துறைகளும், அரசாங்கமும் சேர்ந்து அப்பாவிகளுக்குக் கொடுக்கும் அன்புப் பரிசு.
இவைகளை ஒப்பிட்டுப்பார்க்கும்போது கொலை வழக்கு என்பது பொய் சொல்லும் எதிரிகளை அடியோடு ஒழிக்கும் புதிய முறையாக அனைவரையும் சிந்திக்க வைத்து விடும். கொலை வழக்கு வரதட்சணை வழக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது.
- பொய் வரதட்சணை வழக்குகள் பதிவு செய்ய ஆதாரங்கள் தேவையில்லை. ஆனால் கொலை வழக்குப் பதிவு செய்ய தகுந்த ஆதாரங்கள் தேவை.
- கொலை வழக்கில் வரதட்சணை வழக்கு போல அவ்வளவு எளிதாக வழக்குப் பதிவு செய்து குடும்பத்தோடு எல்லோரையும் கைது செய்ய முடியாது.
- நூற்றுக்கும் மேற்பட்டோரை கொலை செய்த அஜ்மல் கசாப் கூட தனியாகத்தான் வழக்கை சந்தித்து தண்டணை அடைந்திருக்கிறான். ஆனால் வரதட்சணை வழக்கில் ஒரு பொய் புகார் மூலம் கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் எளிதாக சிறையில் அடைத்து, அவமானப்படுத்தி துன்புறுத்தலாம்.
- கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மட்டும்தான் வழக்குகளை சந்திக்க நேரிடும். குடும்பத்திலுள்ள மற்றவர்களின் வாழ்க்கை எந்தவிதத்திலும் பாழாகாது.
- அதுமட்டுமல்ல, கொலை செய்த குற்றவாளி என்றால் காவல் நிலையத்தில் கூட அனைவரும் சலாம் அடித்து பயப்படுவார்கள். ஆனால் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கியவரை கீழ்த்தரமாக நடத்தி முடிந்தவரை பணம் பறிக்கத்தான் அனைவரும் முயற்சி செய்வார்கள்.
- பொய் வழக்கில் சிக்கி சின்னாபின்னமாவதை விட, தூங்கும் அரசாங்கத்திடம் நீதியை எதிர்பார்த்து ஏமாறுவதை விட பொய் வழக்குப் போடுபவரை கொலை செய்துவிட்டு சிறைக்குச் சென்று பிறகு என்றாவது ஏதோ ஒரு தலைவருக்கு பிறந்தநாள் என்று விடுதலை செய்துவிடுவார்கள் என்று எண்ண வைத்துவிட்டது இந்த அரசாங்கம்.
கொலை வழக்கு, பொய் வரதட்சணை வழக்கு என்ற இந்த இரண்டு இந்திய சட்ட நடைமுறைகளை ஒப்பிட்டுப்பார்க்கும்போது அப்பாவிகள் பொய் வழக்குகளிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள எந்த முடிவை எடுப்பார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். மக்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அரசாங்கம் தனது கடமையிலிருந்து தவறும்போது மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தகுந்த வழியைத் தேடிச் செல்வது இயற்கை. இந்த வழிமுறையை காட்டியிருப்பது அரசாங்கம். அதன் வெளிப்பாடு மேலே வந்துள்ள செய்தி. இதற்கு மற்றொரு உதாரணம்தான் நக்ஸலைட், மாவோயிஸ்ட் என்று புதிது புதிதாக வரும் பிரச்சனைகள். அதைப் பற்றி இங்கே படியுங்கள்: வீரர்களை கோழைகளாக்கும் கோமாளிகள்
இளைஞர்களே,
இந்தியாவில் திருமணம் செய்வதால் உங்களது வாழ்க்கையும் பாழாகி உங்களது ஒழுக்க நெறியும் சீரழிக்கப்பட்டு கடைசியில் கொலைகூட செய்யலாமா என்று யோசிக்க வைத்துவிடுவார்கள் இந்த பாழாய்ப்போன கயவர்கள். எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது இந்தியத் திருமணமும் அதனைத் தொடர்ந்து வரும் குடும்ப அழிப்பு சட்ட நடைமுறைகளும், இந்த அநீதிகளை கண்டும் காணாததுபோல் தூங்கிக்கொண்டிருக்கும் அரசாங்கமும் ஆகும். அதனால் புத்திசாலித்தனமாக வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள். நல்ல மனிதர்களாக சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நில்லுங்கள்.
2 comments:
//அப்பாவியாக பொய் வழக்கில் சிக்கி அவமானப்பட்டு துன்புறுவதை விட கொலை செய்துவிட்டால் போலிஸை கூட அஞ்சி நடுங்க வைக்கலாம் என்ற இந்திய நாட்டு நடைமுறையை சமீபத்திய திரைப்படத்தில் கூட சொல்லிவிட்டார்கள்.//
எனக்கும் இதுபோல் தான் தோனியது என் வயதான தாயை ஒரு மிருகம் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து வாகனத்தில் ஏற்றியபொழுது... இதைவிட கொடுமை எனது திருமணத்திற்கு வந்த பாவத்திற்காக எனது தம்பி நண்பரின் தாயரை விசாரனை என்று அழைத்துச்சென்று புழல் சிறையில் அடைக்கம் பொழுதும்... பொய்வழக்கில் எனது தம்பியையும் புதிதாக பெயர் சேர்த்து கைது செய்த பொழுது... என்ன செய்யவது பாவம், புண்ணியம் மயிறு மட்டை என்று வளர்ந்த எனக்கு யோசிச்த பிறகு அருவருப்பாயிற்று
காவல் துறை கடவுள்களே! (ஆமாம் நீங்கள் எல்லாம் கடவுள்கள்தான்... நீங்கள் நினைத்தான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்) தங்களைப் பார்த்து ஊர் மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்து பிழைக்கம் பொறுக்கிகள் தான் பயப்பட வேண்டும். எங்களை போல் அப்பாவிகள் அல்ல... மனிதம் என்ற உணர்வை சற்று மதியுங்கள்...
Post a Comment