பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Tuesday, June 1, 2010

பெண்கள் கொடுக்கும் புகாரால் அப்பாவி ஆண்கள் பாதிப்பு: மாநில மகளிர் கமிஷன் தலைவி

இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் என்ற பெயரில் அப்பாவிகள் துன்புறுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தான் பதவி வகிக்கும் துறையிலிருந்து இந்த உண்மையை வெளிப்படையாகசொல்லமுடியாமல் அதை மேலோட்டமாக கோடிட்டுக் காட்டியிருக்கிறார் தமிழக மகளிர் வாரியத் தலைவி. வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் உண்மை நிலையை உணர்ந்திருக்கும் அவரது நிலையை பாராட்டவேண்டும்.

இளைஞர்களே,

இந்தியாவில் ஆண்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை என்பதை இதைவிட வெளிப்படையாக எப்படிச் சொல்ல முடியும். மகளிர் வாரியத் தலைவியே சொல்லும் அளவிற்கு பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் என்ற பெயரில் அப்பாவிகளுக்கெதிராக அராஜகம் நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. அதனால் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்வது தான் உங்களுக்கு பாதுகாப்பானது.பெண்கள் கொடுக்கும் புகாரால் அப்பாவி ஆண்கள் பாதிப்பு: மாநில மகளிர் கமிஷன் தலைவவி
தினமலர் 31 மே 2010


சென்னை: ""பெண்கள் கொடுக்கும் புகார்கள் மீது போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்வதில்லை. இது எனக்கு நெருடலாக இருக்கிறது'' என மாநில மகளிர் மேம்பாட்டு கமிஷன் தலைவர் சற்குண பாண்டியன் பேசினார்.

மாநில மகளிர் மேம்பாட்டு கமிஷனால் பரிந்துரைக்கப்பட்டு நிலுவையில் உள்ள குடும்ப நல வழக்குகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் சென்னை கலெக்டர் ஷோபனா, மாநில மகளிர் மேம்பாட்டு கமிஷன் தலைவர் சற்குண பாண்டியன், சமூக நலத்துறை கமிஷனர் நிர்மலா, காயத்ரிதேவி எம்.எல்.ஏ., வக்கீல் சங்கமித்ரா, பல்வேறு மகளிர் போலீஸ் நிலைய அதிகாரிகள் பங்கேற்றனர். சென்னை கலெக்டர் ஷோபனாபேசுகையில்,"பெற்றோர், உறவினர் உழைப்பை எதிர்பார்க்காமல் சுயமாக சம்பாதிக்க பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும்' என்றார்.

மாநில மகளிர் கமிஷன் தலைவர் சற்குண பாண்டியன் பேசுகையில்," குடும்ப வழக்கு தொடர்பான பிரச்னையில் போலீசாரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். பெண்கள் புகார் கொடுக்கும்போது அவர்களை, கணவருடன் மீண்டும் சேர்த்து வைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். குடும்ப பிரச்னையால் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸ் நிலையத்திற்கு செல்லும்போது அவர்கள் கொடுத்த புகாரின் மீது உடனடியாக வழக்குப் பதியப்படுவதில்லை. வன்முறை தடுப்பு சட்டம் மூலம் பெண்கள் கொடுக்கும் புகாரால் அப்பாவி ஆண்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் ஒட்டுமொத்தமாக பெண்கள் மீதும் குற்றம் சுமத்த முடியாது' என்றார்.

===================

வாரியத் தலைவி கூறுவது போல் ஒட்டுமொத்த பெண்கள் மீதும் குற்றம் சொல்ல முடியாது. ஆனால் ஒட்டுமொத்த தவறான சட்டங்களும், தவறான சட்டங்களை இயற்றியவர்களும், அதை கண்மூடித்தனமாக காசுக்காக செயல்படுத்துபவர்களும் துணை சேரும் போது ஒட்டுமொத்த பெண்களும் குற்றவாளிகளாகத்தான் மாறுவார்கள்.

சாக்கடையில் ஒரு துளி பாலை சேர்த்துவிட்டு அது இப்போதும் பால் தான். சாக்கடையோடு சேர்த்து எடுத்து அப்படியே பருகலாம் என்று சொல்வது போல்தான் இந்தக் கூற்று இருக்கிறது.

இளைஞர்களே,

ஒட்டுமொத்தப் பெண்களும் நல்லவர்களா? அல்லது ஒரு சில பெண்கள் மட்டும் நல்லவர்களா? பொய் கேசு கொடுக்கும் பெண் நல்லவரா? அல்லது கெட்டவரா? என்ற இந்த வீண் ஆராய்ச்சியெல்லாம் உங்களுக்குத் தேவையில்லை. இந்த ஆராய்ச்சி செய்வதற்குள் உங்களது ஆயுள் முடிந்துவிடும். அதனால் வெளிநாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள். அது தான் புத்திசாலித்தனம்.

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று!1 comment:

498ஏ அப்பாவி said...

எல்லாம் ​செவிடன் காதில் ஊதிய சங்கு ​போல்... இந்த ​​வெத்துப்​​பேச்​செல்லாம் ​வெறும் புஸ்வானமாகிவிடும்.... அது வழக்கம் ​போல ​பொய்​கேசு ​போடுற ஆதரிக்கிற கூட்டம் அது​ வழக்கம் ​போல தன் கட​மை​யை ​செய்யும்.