பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Thursday, June 10, 2010

உயிரோடு இருக்கும்போதே சாகவேண்டுமா?

உயிரோடு இருக்கும்போதே சாகவேண்டுமா? கேள்வியே வித்தியாசமாக இருக்கிறதா? குழம்பிவிடாதீர்கள். நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தால் இதுபோன்ற விபரீதமான, வித்தியாசமான அனுவங்களை சந்திக்க நேரிடும். கீழுள்ள செய்தியைப் படியுங்கள்.

==============


18 ஆண்டுகளுக்கு பின் வரதட்சணை கொடுமை : மனைவி போலீசில் புகார்; கணவன் கைது
தினமலர் ஜூன் 10,2010

சென்னை : திருமணமாகி 18 ஆண்டுகளான பின்பும் மனைவியிடம் வரதட்சணை கேட்டு, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். சென்னை, வேளச்சேரி, தண்டீஸ்வரர் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (48). இவரது மனைவி சாந்தி (43). ஸ்ரீதர், வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிலிருந்து கடன் வாங்கி தரும் ஏஜன்ட்டாக உள்ளார். இவர்களுக்கு, 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். சமீபகாலமாக ஸ்ரீதர், தனது மனைவியிடம் 5 லட்ச ரூபாய் வரதட்சணையாக, பெற்றோர் வீட்டிலிருந்து வாங்கி வருமாறு துன்புறுத்தி வருவதுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, கிண்டி போலீசில் சாந்தி புகார் அளித்தார். புகாரின் மீது வழக்கு பதிந்த போலீசார், ஸ்ரீதரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

==============

மேற்படி சம்பவம் உண்மையா அல்லது பொய்யா என்று தெரியவில்லை. ஆனால்
2008 ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்திலுள்ள மூலை முடுக்குகளில் உள்ள எல்லா காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களுக்கும் ஒன்பது கட்டளைகள் அடங்கிய ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. அதில் ஒரு பகுதி என்ன சொல்கிறதென்றால்:

i) Except in cases of Dowry Death/suicide and offences of serious nature, the Station House
Officers of the All Women Police Stations are to register F.I.R. only on approval of the Dowry Prohibition Officer concerned.

ii) Social workers/mediators with experience may be nominated and housed in the same
premises of All Women Police Stations along with Dowry Prohibition Officers.

iii) Arrest in matrimonial disputes, in particular arrest of aged, infirm, sick persons and minors, shall not be made by the Station House Officers of the All Women Police Stations.

iv) If arrest is necessary during investigation, sanction must be obtained from the
Superintendent of Police concerned by forwarding the reasons recorded in writing.

முழு அறிக்கையை இங்கே படிக்கலாம்.

சட்ட தீவிரவாதம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் சுற்றறிக்கை
(படித்து முடித்தவுடன் ஒரு பிரிண்ட் எடுத்து கையில் எப்போதும் வைத்திருங்கள்! ஆபத்துக்காலத்திற்கு உதவும்.)

மேலுள்ள உத்தரவுகள் உயர்நீதிமன்றத்தால் சொல்லப்பட்டாலும் வரதட்சணைப் புகார் என்றவுடன் கைது செய்யும் அவலநிலை இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அதனால் இளைஞர்களே,

சட்டம், நீதி இவற்றையெல்லாம் காவல்துறையும் மதிக்காது, நீதிமன்றங்களும் மதிக்காது. அதனால் நான் நேர்மையானவன் நீதி என்னை எப்படித் தவறாக தண்டிக்கும் என்று தப்புக் கணக்குப் போட்டு மாட்டிக்கொள்ளாதீர்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை தவறு செய்பவர்களுக்கு தண்டனை கிடைக்காமல் போனாலும் போகலாம் ஆனால் அப்பாவிகளை பொய்வழக்கில் சிக்கவைத்து அந்த அப்பாவிகளை சட்டத்தின் துணையோடு சீரழிக்காமல் விடப்படுவதில்லை.

உதாரணத்திற்கு மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர் இன்றும் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போபால் விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. அதே சமயம் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பீரங்கி ஊழலில் மாட்டியவரை பிடிக்கமுடியாமல் கடைசியில் அவர் ஒரு “அப்பாவி” என்று சமீபத்தில் இந்திய அரசாங்கம் விடுவித்துவிட்டது.

ஆனால், நீங்கள் நேர்மையாக வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்துவிட்டு நான் நேர்மையாக வாழ்கிறேன் என்று கனவுலகில் வாழ்ந்துகொண்டிருக்கும்போது ஒரு பொய் வரதட்சணை வழக்கில் சிக்கினால் உடனடியாக சிறைவாசம்தான். இந்த வழக்கம் இன்றுவரை கொஞ்சம் கூட மாறவில்லை.

பொய் வரதட்சணை வழக்குகள் என்பது திருமணத்தின்போதோ அல்லது திருமணமாகி சில ஆண்டுகளிலோதான் வருகின்ற அபாயம் என்று நினைத்துவிடாதீர்கள். நீங்கள் உயிரோடு இருக்கும்வரை எப்போது வேண்டுமானாலும் இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி உங்களைக் கொல்லத் தயாராக இருக்கிறார்கள். ஜாக்கிரதை!

இளைஞர்களே, நீங்கள்தான் உங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். அதனால் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொண்டு பொய் வழக்குகள் எப்போது வருமோ என்ற அச்சமின்றி சந்தோஷமாக வாழ்க்கைப் பயணத்தைத் தொடருங்கள்.

அல்லது,

உயிரோடு இருக்கும்போதே நான் சாகவேண்டும் என்ற விபரீதமான யோசனைகள் உங்களுக்கிருந்தால் கண்ணைத் திறந்துகொண்டே இந்தியத் திருமண தகனமேடையில் இறங்குங்கள்.

No comments: