இந்து முறைப்படி திருமணம் செய்த ஈரான் பெண்
மதுரை: ஈரானைச் சேர்ந்த பெண் டாக்டருக்கும், கமுதி டாக்டருக்கும், மதுரையில் இந்து முறைப்படி நேற்று திருமணம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் டாக்டர் சரவணக்குமார் அமெரிக்காவில் பணிபுரிகிறார். இவரும், ஈரானைச் சேர்ந்த கரீம், பெரி தம்பதிகளின் மகள் டாக்டர் சாராவும் காதலர்கள். முஸ்லிம் பெண்ணான சாரா, இந்திய கலாசாரத்தின் மேல் கொண்ட ஈர்ப்பால், இந்து முறைப்படி, காதலரை திருமணம் செய்ய விரும்பினார். முறைப்படி இந்துவாக மாறிய சாராவுக்கும், சரவணக்குமாருக்கும் மதுரையில் அர்ச்சகர் மந்திரம் ஓத, மேளதாளங்கள் முழங்க நேற்று திருமணம் நடந்தது.
======================
இளைஞர்களே,
நீங்களும் இதுபோல வேறுநாடுகளில் திருமணம் செய்துகொண்டால் உங்களது வாழ்வு வளமாகும். இந்தியாவில் பெண் தேடும் முயற்சிகளை விட்டுவிட்டு அந்த முயற்சியைப் பயன்படுத்தி வேறுநாடுகளில் பெண் தேடி திருமணம் செய்து கொள்ளுங்கள். உலகம் மிகப் பெரியது. தவறான, ஒருதலைபட்சமான சட்டங்கள் இல்லாத எத்தனையோ நல்ல நாடுகள் இருக்கின்றன.
பல வெளிநாட்டுப் பெண்களுக்கு இந்தியத் திருமண கலாச்சாரம் பிடித்திருக்கிறது. ஆனால் பல இந்தியப் பெண்களுக்கு இந்தியத் திருமணம் என்ற பெயரில் கணவனையும் அவனது குடும்பத்தையும் துன்புறுத்தும் இந்திய சட்டங்கள் பிடித்திருக்கிறது! பெண்ணுரிமை என்ற பெயரில் முறையற்ற உறவுகளை அங்கீகரிக்க சட்ட மேதைகளுக்கும், தலைவர்களுக்கும் பிடித்திருக்கிறது!
நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்வதால் நாட்டிற்கு மிகப்பெரிய தலைவலி.
- 1961-ல் வரதட்சணைத் தடுப்புச் சட்டம் கொண்டுவந்தார்கள்.
- 1983-ல் IPC 498A என்ற கணவனைக் கண்டதும் கைது செய்யும் சட்டத்தைக் கொண்டுவந்தார்கள்.
- 2005-ல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்ற பெயரில் கணவனை வீட்டை விட்டே விரட்டும் சட்டத்தையும் இயற்றிவிட்டார்கள்.
ஆனால் இன்னும் வரதட்சணைக் கொடுமை மட்டும் ஒழியவில்லை! என்று அரசாங்கம் மிகவும் வருத்தப்பட்டு இப்போது புதிதாக ஒரு சட்டத்தையும் இயற்றுவதற்கு ஆரம்பித்திருக்கிறார்கள்.
வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் புதிய அம்சங்கள் The Hindu, January 18, 2010
The ministry of women and child development (MWCD) is moving a cabinet note seeking amendment in the existing provisions of DPA, official sources said.
The amendments are expected to be placed before cabinet for its approval this month end and is likely to be tabled in Parliament in the coming budget session, the sources said.
The amendments include having lesser penalty for the dowry givers, allowing a woman to file case where she permanently or temporarily resides, to include parents and relatives of the bride as aggrieved persons and who can complain and link the Protection of Women from Domestic Violence (PWDV) with the dowry laws for quick relief.
இந்திய இளைஞர்களால் அரசாங்கத்திற்கு எத்தனை தொல்லைகள்!
அதனால் நீங்கள் வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்துகொண்டால் இந்தியப் பெண்களுக்கு வரதட்சணைக் கொடுமை என்ற பேச்சிற்கே இடமில்லாமல் போய்விடும்.பிறகு பெண்கள் நலவாரியமும், பெண்கள் நல அமைச்சகமும், இந்திய அரசாங்கமும் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள் அல்லவா!
அதனால் உங்களது தாய்நாட்டிற்கு உதவ வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள். நீங்களும் பொய்வரதட்சணை வழக்குகளில் சிக்கி சிதைந்துபோகாமால் சிறப்பாக வாழலாம்.
2 comments:
//நீங்களும் இதுபோல வேறுநாடுகளில் திருமணம் செய்துகொண்டால் உங்களது வாழ்வு வளமாகும்//
அப்பட்டமான உண்மை, இங்கு உள்ள குள்ளநரி கூட்டங்களில் சிக்கி என்னை(எங்களை)போல் சின்னாபின்னமாகிவிடாதிர் அதிலும் படித்தவuர் வசதிஉள்ளவர் என்றால் உங்களை குள்ளநரி கூட்டம் நாரடித்துவிடும்
புரட்சி செய்கின்றேன் என்று வரதட்சணை வாங்கமல திருமணம் செய்து வரதட்சணை சட்டத்தில் சிக்கக்கொண்டவன்
498ஏ அப்பாவி
முஸ்லிம் பெண்ணான சாரா, இந்திய கலாசாரத்தின் மேல் கொண்ட ஈர்ப்பால், இந்து முறைப்படி, காதலரை திருமணம் செய்ய விரும்பினார். முறைப்படி இந்துவாக மாறிய சாராவுக்கும், சரவணக்குமாருக்கும் மதுரையில் அர்ச்சகர் மந்திரம் ஓத, மேளதாளங்கள் முழங்க நேற்று திருமணம் நடந்தது
பல்லாண்டு காலம் வாழ்த்துகிக்னறேன் இந்த மணமக்களை... இந்த இளைஞர் கொடிய நச்சுப்பாம்பான பொய் 498ஏ தீண்டாமல் தப்பித்துவிட்டார்!
வாழ்க வளமுடன்
Post a Comment