பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Saturday, June 19, 2010

பெண்ணை ஏமாற்றினால் வழக்கு, பெண் ஏமாற்றினால் அல்வா!

சமீபத்தில் செய்தித்தாளில் பரபரப்பாக வந்துகொண்டிருக்கும் செய்தி காதல் ஏமாற்றம். காதலன் கைது என பலவாறு செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இதற்குப் பின்னால் இருக்கும் ஒரு அனுபவப் பாடத்தை இளைஞர்கள் நன்கு உண்ர்ந்துகொள்ளவேண்டும். அதற்காக 3 செய்திகள் கீழே தரப்பட்டுள்ளது. கவனமாக படியுங்கள்.

தினமலர், ஜூன் 19,2010

திருவெண்ணெய்நல்லூர் : காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் உட்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். திருவெண்ணெய்நல்லூர் அடுத்த டி.எடப்பாளையத்தை சேர்ந்தவர்கள் அல்லாபக்ஷி மகள் மும்தாஜ்(21), ஈசா மகன் அல்லாபக்ஷி(25). இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில் வெளிநாடு சென்று கடந்த வாரம் அல்லாபக்ஷி சொந்த ஊருக்கு திரும்பினார்.

அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்க்க முற்பட்டதால், மும்தாஜ் தன் உறவினருடன் சென்று அல்லாபக்ஷியிடம் தன்னை திருமணம் செய்யாதது குறித்து நியாயம் கேட்டுள்ளார். அப்போது அல்லாபக்ஷி, அவரது தந்தைய ஈசா, குடுமாபீ, தில்ஷாத், இஸ்மாயில் ஆகியோர் சேர்ந்து மும்தாஜிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து மும்தாஜ் கடந்த 3ம் தேதி எஸ்.பி., பகலவனை சந்தித்து புகார் கொடுத்தார்.எஸ்.பி., உத்தரவின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் அல்லாபக்ஷி உட்பட ஐந்து பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  • இந்த செய்தியில் காதலித்துவிட்டு பிறகு திருமணம் செய்யமுடியாது என்று சொன்னதாக இளைஞர் அவரது குடும்பத்தோடு வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

===================

தினமலர், ஜூன் 18,2010

தியாகதுருகம் : தாலிகட்டும் நேரத்தில் மணமகனை பிடிக்கவில்லை என்று, சினிமா பாணியில் தாலியை தட்டிவிட்டு நடையை கட்டினார் மணப்பெண். அதே மணமேடையில் அத்தை மகளை மணந்தார் மணமகன். இச்சம்பவம் தியாகதுருகத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோணான்குப்பம் கிராமத்தைச்சேர்ந்த சின்னதுரை- அன்னலட்சுமி தம்பதி மகள் சுதா(22). இவரது தாய் மாமன், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மேட்டுக்குப்பம் கிராமத்தைச்சேர்ந்த அழகுவேல்- பாஞ்சாலை மகன் உத்திராபதி(27). இவர்களுக்கு தியாகதுருகம் ஸ்டார் திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மணமேடையில் மணமகன் உத்திராபதி, மணமகள் சுதா வந்து அமர்ந்தனர். சடங்கு சம்பிரதாயங்கள் நடந்தேறின. முகூர்த்த நேரம் குறிக்கப்பட்டிருந்த காலை 7 மணிக்கு சுதா கழுத்தில் உத்திராபதி தாலிகட்டும் வேளையில், சினிமாவில் வரும் காட்சியைப்போல், தாலியை தட்டிவிட்டு மணமேடையில் இருந்து எழுந்தார் மணப்பெண் சுதா. "எனக்கு மாமன் உத்திராபதியை பிடிக்கவில்லை; இன்னொரு மாமன் மகன் பாக்யராஜை காதலிக்கிறேன். அவரையே திருமணம் செய்து கொள்வேன்' என்று கூறிவிட்டு மணமகள் அறைக்கு சென்றுவிட்டார்.

மணமகன் உத்திராபதி கூறுகையில்,"சுதா எனது அக்கா மகள் தான். தன்னை பிடிக்கவில்லை என்று திருமண ஏற்பாடு செய்வதற்கு முன்பே, என்னிடம் கூறியிருந்தால் இப்பிரச்னை ஏற்பட்டிருக்காது என்றார்.

  • இந்த செய்தியில் தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை மறுத்துவிட்டார் மணமகள். ஆனால், ஏமாற்றமடைந்த மணமகனுக்கு அல்வா கொடுத்து வேறு திருமணம் செய்துவைத்திருக்கிறார்கள். இது உறவுக்காரப் பெண் என்பதால் இத்தோடு முடிந்திருக்கிறது. வேறு பெண்ணாக இருந்திருந்தால் திருமணம் முடிந்தகையோடு கணவன் முதலிரவன்று குடித்துவிட்டு வந்து வரதட்சணை கொடுமை செய்தான் என்று வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளியிருப்பார்கள்.
=================

செய்தி 3. கள்ளக்காதலுடன் ஓடிய தாயை பார்த்ததும் அழுத குழந்தைகள்

Dinamalar அக்டோபர் 29,2009

திண்டுக்கல் : கள்ளக்காதலனுடன் பத்து மாதங்களுக்கு முன்பு ஓடிப்போன தாயை கோர்ட்டில் பார்த்ததும், அவரது இரண்டு ஆண் குழந்தைகளும் கதறி அழுது தங்களுடன் வருமாறு அழைத்தனர். திண்டுக்கல் அருகேயுள்ள கள்ளிமந்தையம் செரியன்நகரைச் சேர்ந்தவர் சாமுவேல் (35). இவருக்கும் உஷா (27) என்பவருக்கும், ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. சாம்பிரசன்னா (5), சுதன் (3) என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நர்ஸ் வேலை பார்த்த உஷா தான் படிக்கும் போதே காதலித்த பிரகாஷ் என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் ஓடிப்போனார். இது குறித்து சாமுவேல் கள்ளிமந்தையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

சாமுவேல் தனது நண்பர்கள், உறவினர்களுடன் சென்று திருவாரூரில் காதலனுடன் தங்கியிருந்த உஷாவை அழைத்து வந்து கள்ளிமந்தையம் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். போலீசார் நேற்று உஷாவை திண்டுக்கல் ஜே.எம்.,1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டில், கணவனுடன் செல்ல மறுத்த உஷா, தன் தாய் வீட்டிற்கு செல்வதாக தெரிவித்தார். கோர்ட் முடிந்து வாசலுக்கு வந்த தாயைப் பார்த்ததும், இரு குழந்தைகளும் கதறி அழுதன. "அம்மா நம்ம வீட்டுக்கு வாம்மா, அப்பாவுடன் சேர்ந்து நாலு பேரும் ஒன்றாக இருக்கலாம்'' என அழைத்தனர். இதனை கேட்டு கோர்ட் ஊழியர்களும், அங்கிருந்தவர்களும் கண் கலங்கினர். ஆனாலும் உஷா தன் கணவனுடன் செல்ல மறுத்து விட்டார். உஷா காதலனுடன் செல்வதற்காகவே என்னுடன் வர மறுக்கிறார். அவரை அழைத்து வந்த காதலன் பிரகாஷ் கோர்ட்டிற்கு வந்திருப்பதாக சாமுவேல் தெரிவித்தார்.

  • இந்த செய்தியில் பார்த்தீர்களா. திருமணம் செய்து பிள்ளையும் பெற்று பிறகு கணவனையும் பிள்ளைகளையும் ஏமாற்றி கள்ளக் காதலனுடன் ஓடிய பெண்ணின் மீது போலிஸ் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.
=================



மேற்கண்ட செய்திகளில் உள்ள விஷயத்தைப் புரிந்துகொண்டீர்களா?

பெண்ணை ஆண் ஏமாற்றினால் அவன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் தள்விவிடுவார்கள். ஆனால் ஆணை ஒரு பெண் ஏமாற்றினால் அந்தப்பெண்ணை நன்றாகத் தட்டிக்கொடுத்து சபாஷ் என்று சொல்லிவிட்டு வஞ்சிக்கப்பட்ட ஆணுக்கு வாயில் அல்வாதான் கொடுப்பார்கள். இதுதான் நீண்ட காலமாக இந்திய சமுதாயத்தில் நடந்துகொண்டிருக்கும் வழக்கம்.

இளைஞர்களே,

நீங்கள் தவறு செய்தாலும் சரி, தவறு செய்யாவிட்டாலும் சரி ஒரு பெண் உங்கள் மீது புகார் கொடுத்தால் உடனடியாக வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுவார்கள். ஆனால் நீங்கள் ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டால் நீங்கள் எந்த வழக்கும் அந்தப் பெண்மீது தொடுக்க முடியாது. ஏனென்றால் தவறு செய்யும் பெண்ணை தண்டிக்க இந்தியாவில் சட்டங்களே இல்லை. அப்படி இருக்கும் ஒன்றிரண்டு சட்டங்களையும் காவல்துறையும் நீதித்துறையும் மதிப்பதில்லை. ஒட்டு மொத்த சமுதயாமும் ஆணைத் தண்டிக்க மட்டுமே தயாராக இருக்கிறது. அவன் தவறு செய்யவில்லை என்றாலும் யாரும் அதைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள். அதுபோல ஒரு ஆணுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தாலும் அதைப்பற்றியும் யாரும் கவலைப்படமாட்டார்கள்.

இந்த அடிப்படை உண்மையை நன்கு உணர்ந்துகொண்ட படித்த நவநாகரீக மங்கைகள் சட்டங்களைப் பயன்படுத்தி எப்படி பொய்வழக்குப்போடுவது என்று நன்றாக தெரிந்துவைத்திருக்கிறார்கள். திருமணத்திற்கு முன் கற்பழிப்பு வழக்கு, திருமணத்திற்குப் பின் வரதட்சணை வழக்கு. இந்த இரண்டு வித்தைகளை நன்றாக தெரிந்துவைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்வதற்காக பல அரசாங்கத்துறைகள் காத்துக்கொண்டிருக்கின்றன. அதனால் இளைஞர்களே நீங்கள் விழிப்புடன் இருந்தால் பிழைக்கலாம். இல்லையென்றால் உங்கள் ஒட்டுமொத்தக் குடும்பமும் பொய் வழக்கில் சிக்கி சின்னாபின்மாகிவிடும்.

அதனால் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்வதுதான் உங்களுக்கு நல்லது.


No comments: