பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Friday, May 14, 2010

இந்திய ஆணுக்கு சமூகப் பாதுகாப்பும் இல்லை. சட்டப் பாதுகாப்பும் இல்லை

இந்தியாவில் நடந்திருக்கும் இந்த விசித்திரமான செய்தியைப் பாருங்கள். செய்தியை மேலோட்டமாகப் படிக்காமல் சற்று நிதானமாகப் படித்தால் இந்த செய்திக்குள் இந்தியாவில் பலகாலமாக தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் ஒரு அவலம் உங்களுக்குப் புலப்படும். நான் இந்த 16, 30 திருமணத்தைப் பற்றிச் சொல்லவில்லை. ஆழ்ந்து படியுங்கள். புரியும்.

ஆந்திரா: 16 வயது மாணவனை மணந்த 30 வயது பெண்
thatstamil.com

கர்னூல்: ஆந்திராவில் 16 வயது மாணவனை 30 வயது பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து அந்த மாணவனை மீட்டுத் தருமாறு அவரது தாயார் மனித உரிமை ஆணையத்தில் புகார் தந்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த சைதம்மா என்பவரின் மகன் சித்தய்யா (வயது 16). இவர் ஸ்ரீசைலத்தில் உள்ள ஐ.டி.ஐயில் படித்து வருகிறார்.

இவரது நண்பர் அசோக். சித்தய்யா அடிக்கடி அசோக் வீட்டுக்கு செல்வது வழக்கம். அப்போது அசோக்கின் சித்தியான சரஸ்வதிக்கும் (வயது 30-பெயர் மாற்றப்பட்டுள்ளது) பழக்கம் ஏற்பட்டுள்ளது.

திருமணமாகாத அந்தப் பெண்ணுக்கும் 16 வயதான சித்தய்யாவக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் உறவும் வைத்துள்ளனர்.

இதையறிந்த அசோக்கின் குடும்பத்தினர் இருவருக்கும் அங்குள்ள கோவில் ஒன்றில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதையறிந்த சித்தய்யாவின் தாயார் சைதம்மா தனது மகனை மீட்டுத் தரக்கோரி மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

என் மகனை ஏமாற்றி திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணத்தால் அவன் படிப்பும், எதிர்காலம் நாசமாகிவிடும். மைனரான என் மகனை கட்டாய தாலி கட்ட வைத்த குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுத்து, மகனை மீட்டுத் தர வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

இந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

======================


செய்தியைப் படித்து அந்த அவலத்தைப் புரிந்துகொண்டீர்களா? இன்னும் உங்களுக்குப் புலப்படவில்லையென்றால் தொடர்ந்து படியுங்கள்.

மேலுள்ள செய்தியில் மகன் வயதில் இருக்கும் ஒரு சிறுவனை ஒரு பெண் திருமணம் செய்திருக்கிறார். அது மோசடித் திருமணமா என்று தனியாக ஒரு விவாதம் வைத்துக்கொள்ளலாம். அதையும் தாண்டி இந்தியாவில் நடக்கின்ற கேவலமான ஒரு இழிசெயல் ஒன்று இருக்கிறது.

மேலே சொல்லப்பட்டுள்ள செய்தியில் நன்றாக கவனித்தீர்களா? சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் மட்டும் மாற்றப்பட்டு அந்தப் பெண்ணிற்கு எந்த இழுக்கும் வந்துவிடக்கூடாது என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் அதே சமயம் 16 வயது சிறுவனின் பெயர் மற்றும் முழுவிபரம் நன்றாகத் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக எந்த ஒரு சம்பவமாக இருந்தாலும் அதில் சம்பந்தப்பட்ட சிறுவர் அல்லது சிறுமியைப் பற்றிய தகவலோ அல்லது புகைப்படமோ கொடுக்கப்படாமல் அந்த சிறுவர்களின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதுதான் உலகெங்கும் இருக்கும் வழக்கம். ஆனால் இந்த செய்தியில் அந்த சிறுவன் ஒரு “ஆண்” என்ற ஒரே காரணத்தால் அந்தப் பாதுகாப்பு அந்த சிறுவனுக்குக் கொடுக்கப்படவில்லை.

பெண்ணிற்கு வயது 30. அவரைப் பற்றிய விஷயங்கள் வெளியே தெரிந்து அவருக்கு எந்தப்பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்று கருதியிருக்கிறார்கள். ஏனென்றால் அவர் “பெண்”. ஆனால் 16 வயது சிறுவனுக்கு அந்தப் பாதுகாப்பைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. அவன் சிறுவன் என்பதை யாரும் கருத்தில் கொள்ளமாட்டார்கள். அவன் ஒரு “ஆண்”. இது மட்டும்தான் இந்த சமூகத்திற்கு தெரியும். இதுதான் இந்திய நடைமுறை.

இது போன்ற நடைமுறை இந்த செய்தியில் மட்டுமல்ல நீங்கள் எப்போது செய்தித்தாளில் இதுபோன்ற செய்திகளைப் படித்தாலும் அதில் பெண்ணின் பெயர் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எழுதியிருப்பார்கள். ஆனால் ஆண்களுக்கு இதுபோன்ற பெயர் மாற்றி எழுதிய செய்திகள் மிகவும் அரிது.

இது தான் இன்றைய இந்தியாவில் ஆண்களின் நிலை. சட்டப் பாதுகாப்பும் கிடையாது. சமூகப் பாதுகாப்பும் கிடையாது. இது வயது வித்தியாசம் இல்லாமல் சிறு குழந்தை முதல் வயதான முதியவர் வரை ஆணாக இருந்தால் எல்லா பாதுகாப்புகளும் புறக்கணிக்கப்பட்டுவிடும்.

இளைஞர்களே, இதுதான் இன்றைய இந்தியாவில் உங்களின் நிலை. உங்களைப் பாதுகாக்க சட்டங்களும் இல்லை. சமூகமும் முன்வராது. அரசாங்கமும் முன்வராது. அதனால் இது போன்ற பாலினத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டும் நாட்டில் உங்களது வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.

உங்கள் சிந்தனையில் பின்வரும் விஷயங்களைப் பற்றி யோசியுங்கள்.

  • வரதட்சணை தடுப்புச் சட்டம்
  • மனைவிக் கொடுமை தடுப்புச் சட்டம் (IPC 498A)
  • பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் (Protection for Women Against Domestic Violence)
  • மாநில மகளிர் வாரியம்
  • தேசிய மகளிர் வாரியம்
  • பெண்கள் வளர்ச்சி மத்திய அமைச்சகம், இன்னும் பல இருக்கின்றன.

இதெல்லாம் பெண்களுக்கு மட்டும் தான். ஆண்களுக்காக அரசாங்கமும் இந்த சமுதாயம் ஏதாவது செய்திருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். அல்லது ஆண்களுக்கு எந்தவித பாதிப்பும் இந்த சமுதாயத்தில் ஏற்படுவதில்லையா?

இப்படி எல்லாமே ஒருதலைபட்சமாக, சுயநல நோக்குடன் இருக்கும்போது உங்களுக்கு ஒரு பிரச்சனை என்று வந்தால் யார் உங்களைக் காப்பாற்றுவார்கள்? இந்தியாவில் ஆண்களுக்கு சட்டப் பாதுகாப்பும் கிடையாது. சமூகப் பாதுகாப்பும் கிடையாது. அதிலும் குறிப்பாக இந்தியத்திருமணத்தில் சிக்கி சீரழிந்தால் உங்களை எந்தக் கடவுளும் காப்பாற்ற முடியாது.

இந்திய ஆணுக்கு மானம் கிடையாதா? என்று திரைப்படத்தில்கூட கேட்டுவிட்டார்கள்!






1 comment:

498ஏ அப்பாவி said...

http://thamizhththendral.blogspot.com/2010/05/blog-post_19.html

விஜய் டிவியில் நடந்த இந்த நிகழ்சியி​னை நண்பர்கள் காண ​வேண்டுகின்​றேன்... இதில் ஒரு ச​கோதரி கதறுவது ​போல் நமது இ​ளைய த​லைமு​றை சிதறிக் கதறும் நாட்கள் ​நெருங்கிக்​கொண்டிருக்கின்றது... இதற்க்கு காரணம் ​கேடு ​கெட்ட ஒரு கூட்டம் 498ஏ சட்டத்​தை தவறாகப்பயன்படுத்தி குடி ​கெடுத்து சி​றையல் அ​டைத்து குழந்​​தைகளின் வாழ்​கை​யை நாசமாக்கி இது​போல் வருங்காலத்தில் கதறவிடும்... ஆம் தந்​தை முகமறியாமலும் தந்​தையின் அரவ​ணைப்பில்லாமலும் வளரும் எனது குழந்​தையும் இது​போல் கதறரும்....

ஒழிக குடி​யைநாசமாக்கி ச​தைப்பற்​றெடுத்து திமி​ரெடுத்து ஊர்​மேயும் ​வேசிக்கூட்டம்